Monday, August 31, 2015

உலகமயமாக்கலால் அழிந்து வரும் இந்தியாவின் பாரம்பரியம்





1.1.1995 முதல் இந்தியாவும் உலகமயமாக்கல்,டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது;உலகில் இருக்கும் 220 நாடுகளில் 195 நாடுகள் கையெழுத்திட்டன;இந்த ஒப்பந்தப்படி,இந்த 195 நாடுகளுக்குள் யார் வேண்டுமானாலும்,எந்த பொருளை வேண்டுமானாலும்,எந்த நாட்டிலும் விற்கலாம்;வாங்கலாம்;அந்தந்த நாட்டு அரசுகள் இதைத் தடுக்க முடியாது;இதுதான் சொன்னது;ஆனால் செய்தது என்ன தெரியுமா?

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும்,ஏழை மேலும் மேலும் ஏழை ஆவதற்குமான வழிகள் திறக்கப்பட்டன;பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட சேட்டிலைட் சேனல்கள் இன்று மக்களை கிறுக்காக்கிக் கொண்டிருக்கின்றன;(இந்தியாவில் எஃப் டிவியும்,அமெரிக்காவில் சன் டிவியும் ஒளிபரப்பாவதற்கு இதுவே காரணம்)

எல்லைகளில் இருக்கும் ராணுவத்திற்கு வேலையே இல்லாத அளவுக்கு ஜி 8 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவிவிட்டன;கொள்ளை லாபத்திற்கு நோயையோ அல்லது தரமற்ற பொருட்களையோ குவித்து நமது பர்ஸை நாகரீகமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன;

இந்தியாவில் நெய்யப்படும் பட்டுச்சேலையை ரூ.600/-க்கு வாங்கும் கிழக்கு ஆசிய நாடுகள்,ரீ பேக் செய்து இந்தியாவுக்கே ரூ.8000/- க்கு விற்பனை செய்யும் அட்டகாசமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் அரிய மூலிகைகள் கிலோ ரூ.20/-க்குப் பிடுங்கப்படுகின்றன;அவை இந்தியத் துறைமுகத்தை அடையும் போது ரூ.100/-க்கு விலை உயருகிறது;மேல்நாட்டைச் சென்றடையும் போது ரூ.500/-ஆகி,அதில் இருந்து தயாராகும் அரிய மருந்து ரூ.19,000/-

(இதில் வெறும் 5 கிராம் தான் அந்த மூலிகை கலக்கப்பட்டிருக்கும்)5 கிராம் ரூ.19,000 எனில் 1000 கிராமுக்கு எத்தனை 19,000 ரூபாய்கள் என்று கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்;ஒரு கட்டத்துக்கு மேல்,இந்தியாவில் விளையும் மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய முடியாத வெளிநாட்டினர்,நமது நாட்டினருக்கு மட்டுமே உருவாக்கிய படிப்பே பயோ டெக்னாலஜி! ஏழாம் அறிவு திரைப்படத்தில் வருவது போல,நாம் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க,அதை திருடிவதே இவர்களின் நோக்கம்;

நமது தேசத்தின் பெருமைகளைப்பற்றி அறியாத,நமது மக்களின் சுபாவத்தை உணராத,இந்தியாதான் உலகிற்கே வழிகாட்டும் எதிர்கால வல்லரசு என்பதை உணராத,மேல்நாடுகளின் மறைமுக மிரட்டலுக்கு மட்டும் அடிபணிந்த, தேசபக்தி இல்லாத பிரதமர்கள் நம்மை ஆண்டதால் வந்த வினை இது;

இந்தியா போன்ற கலப்புப் பொருளாதார நாடுகள் கூட முதலாளித்துவநாடாக மாறத் துவங்கியிருக்கின்றன;ஏற்கனவே,தொழிலாளித்துவம் உலக அரங்கில் தோல்வியடைந்துவிட்டது;அப்படி தோல்வியடைய 70 ஆண்டுகள் ஆயின;முதலாளித்துவம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் வந்தாலும் வெறும் 15 ஆண்டுகளிலேயே படுதோல்வி யடைந்துவிட்டது;ஆனாலும்,அதன் பின்விளைவுகள் இன்று இந்தியாவாகிய நம் நாட்டில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிக இடைவெளியை உருவாக்கிவிட்டது;

அன்பு,பாசம்,சமுதாய நலன் போன்றவைகளைக் கொண்ட மனிதர்கள் அருகிக் கொண்டே வரத் துவங்கிவிட்டனர்;

உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் போன்றவைகளால் ஒரே நன்மை ரூ.5000/- என்று இருந்த மாதச் சம்பளம் ஒரேயடியாக ரூ.50,000/-ஆரம்பச் சம்பளம் என்று எகிறியது மட்டுமே! இந்தச் சம்பளமானது,நாடு முழுவதும் ஒரே சீராக கிடைத்திருந்தால்,இந்நேரம் வறுமை ஒழிந்திருக்கும்;அதுதான் நடைபெறவில்லை;



No comments:

Post a Comment