Saturday, August 22, 2015

பன்னிருத்திருமுறைகளை புத்தகமாக அச்சிட்டவர்


சைவ சமயத்தவர்கள் ஈசனை வழிபட,ஈசனின் அருளைப் பெற பக்கபலமாக இருப்பவை பன்னிருத்திருமுறைகள்;இவைகள் பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளாகவே இருந்து வந்தன;இவைகளை முதன் முதலில் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டவர் திருமயிலை சுப்பராய ஞானியார் ஆவார்;

1864 இல் முதல் மூன்று தமிழ் வேதங்களை(திருஞானசம்பந்தர் அருளியது)யும் அச்சிட்டு வெளியிட்டார்;

1865 இல் சுந்தரர் அருளிய ஏழாவது தமிழ்வேதத்தை அச்சிட்டு வழங்கினார்;

1866 இல் 4,5,6 ஆம் தமிழ்வேதங்கள்(திருமுறைகள்) அச்சிட்டு,வெளியிடப்பட்டன;

சைவ சமயத்திற்குத் தொண்டாற்றிய திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களை சைவ சமயத்தவர்கள் என்றென்றும் போற்றிட வேண்டிய இந்த தகவல் வெளியிடப்படுகிறது.


ஓம் வராகி சிவசக்தி ஓம்



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment