Thursday, August 13, 2015

அன்னை அரசாலையின் பெருமைகள்!!!



உங்களை நியாயமற்ற முறையில் எதிர்க்கும் எதிரிகளையும்,அவர்கள் உங்களுக்குச் செய்யும் இடையூறுகளையும்(பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம்,பேயை ஏவுதல்,பிசாசை அனுப்புதல்,மாந்திரீக ஏவலின் உச்சமான காஷ்மோராவை ஏவுதல்) நீங்கள் பதிலடி கொடுக்காமலேயே,பக்தியின் மூலமாகவே பதிலடி கொடுக்க வேண்டுமா? அன்னை அரசாலை என்ற வாராகி(தமிழில் வராகி)யை மனப்பூர்வமாகச் சரணடைந்தால் போதும்;அவர்களையும்,அவர்களின் ரகசிய பக்கபலத்தையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவாள் பிரபஞ்ச அன்னை அரசாலை என்ற வராகி!!!

ஆனால் நீங்கள் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிரான,உங்களுக்கு எதிரான நல்ல மனிதர்களை அழிக்க இந்த அன்னையை பிரார்த்திக்கக்கூடாது;அப்படிச் செய்தால்,இந்த பிரபஞ்ச அன்னையை ஏமாற்றிட முடியாது;ஒருபோதும் வரம் தரமாட்டாள்;

நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும்;உங்கள் எதிரிகள் நியாயமற்ற அநீதியாளர்களாக இருக்க வேண்டும்;அவர்களை அழிப்பதற்கே அன்னை தன் அருளை உங்களுக்கு வாரி வழங்குவாள்; உங்களுக்கு அதிக சக்திவாய்ந்த சூட்சும பாதுகாப்பை அன்னை வழங்குவாள்;

கழுகுகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்க பெட்டைக் கோழி எப்படி ஆக்ரோஷமாகப் பாய்ந்து பருந்தை துரத்தி அடிக்கிறது!!!
அப்படித்தான் இந்த பிரபஞ்ச அன்னை அரசாலையும் தன் அன்புக் குழந்தைகளான பக்தர்களைக் காக்க எதிரிகள் என்னும் வல்லூறுகளைத் தாக்கி அழித்து காப்பாற்றுகிறாள்;
அன்னை அரசாலை(வராகி)யை உபாசிப்பவர்கள் அன்னையிடம் சரணடைந்தால் போதும்;நமது கோரிக்கை எதுவாக இருந்தாலும் படிப்படியாக நிறைவேறிவிடும்;

திருமணத் தடை,கல்வித்தடை,கடன் தொல்லை,நோய் உபாதை,சொத்துப் பிரச்சினை, ஆன்மீகத்தில் முன்னேற விரும்பியும் தகுந்த குரு கிடைக்காமை,நீண்டகாலமாக குழந்தையின்மை,நீண்டகாலமாக சோகத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருத்தல்,தொழிலில் முன்னேற்றமின்மை,வேலையில் அக்கறையின்மை முதலான சகல தினசரி வாழ்வியல் சிக்கல்களையும் தீர்க்க அன்னை அரசாலையைச் சரணடைவோம்;

அன்னை அரசாலை(வராகி)யை தொடர்ந்து வழிபடுபவர்களின் வாக்கு வன்மையை அதிகரிப்பாள்;கர்வம் பிடித்தவர்களை பலம் குன்றிப் போகச் செய்வாள்;

பிறப்பும்,இறப்பும் அற்ற இந்த அன்னை ப்ராஞப்தம்,சஞ்சிதம்,ஆகாம்யம் ஆகிய மூன்று கர்மங்களையும் தனது ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளுபவள்;

நியாயமற்றவர்களை பாரபட்சமின்றித் தண்டிப்பாள்;

ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருக்க இவள் ஒருத்திக்கே வல்லமை உண்டு;ஆளுமை உண்டு;
அவளது வேகமும்,கம்பீரமும் அவள் குதிரை மீது வரும் போது தெரியும்;அவள் தண்டனையின் உக்கிரம் அவள் கையில் உலக்கை கொண்டு வரும் போது தெரியும்;
தன்னிடம் அடைக்கலம் பெற்றவர்களை அவள் என்றுமே காப்பாற்றாமல் விட்டதில்லை;

தூய மனம்,குற்றமற்ற நடத்தை,நிஜமான பக்தி இவற்றைக் கொண்டவர்களையே அவள் தனது பக்தர்களாக ஏற்பாள்;
வெறும் பூஜைகளாலும்,தீப தூபங்களாலும் அவளை ஏமாற்ற முடியாது;

நீங்கள் அவளுக்கு எப்போதும் பிரியமானவராக இருங்கள்;
அவள் அருள் தானாகவே உங்களுக்கு வந்து அடையும்;உங்கள் இடையூறுகள் நீங்கும்;எதிரிகள் வீழ்வார்கள்;உங்கள் வாழ்க்கை முழுவதும் அவள் அருள் நிலைத்திருக்கும்;

வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment