தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்பது கடந்த 200 நூற்றாண்டுகளாக பாரத
தேசம் எங்கும் ஒலித்துவரும் யுகங்கள் கடந்த பழமொழி!
இந்த சிவ.ஆ.பக்தவச்சலம் அவர்கள் செய்யும் சிவத் தொண்டு நமக்கு முன் உதாரணமாக,நாமும்
அவரைப் போன்றே சிவத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்து சக்தியாக இருந்து வருகிறது;இந்த
ஒய்வு பெற்ற ஆசிரியர் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் சுமாராக 120 பாழடைந்த சிவாலயங்களை
(தமிழ்நாடு முழுவதும்)புனரமைத்திருக்கிறார்;அதுவும் எப்படி?
ஒரு கிராமத்தில் பாழடைந்த சிவாலயம் இருக்கிறது என அறிந்தால்,அந்த கிராமத்திற்கு
முறைப்படி வருகை தந்து,கிராம மக்களை ஒரு பொது இடத்தில் வரவழைப்பார்;பாழடைந்த சிவாலயத்தை
புனரமைத்தால் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் புண்ணியம் பற்றியும்,அந்த கிராமத்திற்கு
கிடைக்க இருக்கும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் ஒரு மணிநேரம் பேசுவார்;பிறகு,அங்கேயே
தகுதியான கிராம மக்களைக்கொண்டு புனர் நிர்மாணக் குழுவை அமைப்பார்;அந்தக் குழுவிடம்
முதல் ஆளாக சிவாலயப் புனரைப்பிற்காக முதல் ஆளாக சில ஆயிரம் ரூபாய்களை அன்பளிப்பாகக்
கொடுப்பார்;
அந்தக்கோவிலை புனர் அமைத்து குடமுழுக்கு செய்யும் வரை அந்த குழுவுக்கு
வழிகாட்டுவார்;இப்படி கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 120 சிவாலயங்களைச் சீரமைத்திருக்கிறார்;என்னைப்
பொறுத்தவரையிலும் இவர் ஒரு சிவகணம் தான்;(இது தொடர்பாக இவர் ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்;இதில்,எந்த
மாவட்டத்தில்,எந்த ஊருக்கு அருகில் இருக்கும் எந்த சிவாலயத்தை புனர் நிர்மாணம் செய்தார்;எப்போது
குடமுழுக்கு நடைபெற்றது என்ற விபரங்கள் இருக்கின்றன;இந்தப் புத்தகமே எமக்குத் தூண்டுகோலாக
இருக்கிறது)
இவர் தமிழ் வேதம் என்ற மாத இதழை நடத்தி வருகிறார்;இதன் ஆண்டுச் சந்தா
ரூ.100/- ஆயுள் சந்தா ரூ1000/- இதில் பல ஏராளமான சிவ வழிபாட்டு ரகசியங்களை வெளியிட்டு
வருகிறார்;
இந்த இதழைப் பெற: சிவ.ஆ.பக்தவச்சலம்
43,சந்நதி வீதி,நல்லூர்ப்பேட்டை,குடியாத்தம் – 632 602.வேலூர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.
என்ற முகவரிக்கு மணி ஆர்டர் அல்லது டிராப்ட் அனுப்பலாம்;
வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment