Saturday, August 22, 2015

சித்தர்கள் மட்டுமே அறிந்த ஜோதிட ரகசியம்


சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் அதிக வலிமையோடு இருக்கும்;சூரியனிடம் இருந்து அதிகதூரம் விலகிச் செல்லும் கிரகம் வலிமை குறையும்;எனவே இதை வக்கிரம் என்று அழைக்கிறோம்;

சந்திரன்,ராகு,கேது போன்ற கிரகங்கள் வக்கிரமடைவது கிடையாது;சூரியனுக்கு அருகில் இருந்து கொண்டே வக்கிரமடைபவை சுக்கிரனும்,புதனும்!

சூரியன் இருக்கும் ராசியில் இருந்து 5,6,7,8,9 ஆம் ராசியில் இருக்கும் கிரகங்கள் வக்கிரமடையும் என்பது ஜோதிட விதி;அரிதாக சூரியன் இருக்கும் ராசியில் இருந்து 4 வது ராசியில் கூட சில சமயம் கிரகம் வக்கிரமடையும்;

ஒருகிரகம் வக்கிரமடைந்தால்,அந்த கிரகத்தின் சுபாவங்கள் எதுவோ,அதற்கு எதிரான சுபாவங்களை உரிய ஜாதகருக்குத் தருவார்;

செவ்வாய் பாசக்காரகன்;பூமிக்காரகன்;சகோதரக் காரகன்;
புதன் மாமாவர்க்கம்,ஜோதிடம்,நகைச்சுவைக்குணம்,மூலிகைகளை அறியும் சுபாவம்;சிற்பக்கலை ஊட்டுபவர்;நரம்புக்காரகன்;
சுக்கிரன் களத்திரக்காரகன்;சகோதரிக்காரகன்;அழகாக ஆடை உடுத்தும் காரகன்;பிறப்பு உறுப்புகளைப் பாதுகாப்பவன்;ஒருவரது அடுத்த பிறவியை நிர்ணயிப்பவன்;ருசியான புதிய உணவுகளை சாப்பிட வைப்பவன்;காதலுக்குரியவன்;சுகமாகத் தூங்க வைப்பவன்;தங்க நகைகளுக்கு அதிபதி;
குரு புத்திரக் காரகன்,தங்கத்துக்கு அதிபதி;கோவில்,ஜோதிடம்,மடாலயம்,ஆசிரமம்,கோவில்கள் இவைகளை பிரதிபலிப்பவன்;ஆசிரியத் தன்மைக்கு அதிபதி;

அதே சமயம்,நட்சத்திரங்கள் வக்கிரமடைவது உண்டு;இதை சாதாரண மனிதர்களாகிய நாம் கணிக்கவோ,அறியவோ முடியாது;சித்தர்களால் மட்டுமே அறிய முடியும்;


No comments:

Post a Comment