எந்த ஜன்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ,இப்படி கஷ்டப்படுறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்காக மட்டுமே இந்த பதிவு; மற்றவர்கள் அப்படியே தாவிக் கொண்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடலாம்;அல்லது வேறு பதிவுகளை வாசிக்கலாம்; நம்முடைய கர்மவினைகளில் நமது பங்கு 70% இருக்கிறது;25% நமது பெற்றோர்களின் பங்காக இருக்கிறது;5% நமது முன்னோர்களின் பங்காக இருக்கிறது; ஜோதிடப்படி,நமது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் மறைவுஸ்தானங்களில் இருந்தால்,இப்பிறவியில் நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கான பலனை அடுத்தப் பிறவியில் தான் அனுபவிக்க முடியும்;ஒருவேளை,நமது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் மறையாமல் இருந்தால் இப்பிறவியில் நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கான பலனை இப்பிறவியிலேயே அனுபவிக்கலாம்; உதாரணமாக சினிமா நடிகைகளைத் தான் சொல்ல முடிகிறது;ஆளையெல்லாம் சொல்லக் கூடாது; ஹாலிவுட்டில் ஒரு நடிகை 1975 இல் பிறந்தவர்;அழகோ அழகு அவ்வளவு அழகு;கொள்ளை அழகு;பல ஹாலிவுட் படங்களில் அரைகுறை ஆடைகள் அணிந்து நடித்து பலரின் உணர்ச்சியை கடந்த 25 ஆண்டுகளாகத் தூண்டியவர்;அந்த கவர்ச்சியாலேயே அவர் 25 ஆண்டுகளாக கதாநாயகியாக மட்டும் நடித்தவர்;இன்றும் அவர் மீது கிறக்கம் உள்ள ரசிகர்கள் கோடிக்கணக்கில் எல்ல நாடுகளிலும் இருக்கிறார்கள்;விஷயம் அதுவல்ல;அவர் சில மாதங்களுக்கு முன்பு மார்பகப் புற்று நோயில் இருந்து தப்பிக்க,மார்பகத்தையே ஆபரேஷன் மூலம் நீக்கிக் கொண்டார்;இதையும்,சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் மறையாமல் இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்? கோடிக்கணக்கான ஆண்களின் உணர்ச்சியை சாதாரண திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தே தூண்டியுள்ளனர்;அதன் எதிர்விளைவாக இன்று மார்பக ஆபரேஷன் செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது;இவர்களிடம் இல்லாத பணமா? இதை வைத்து எத்தனை யாகங்கள்,அன்னதானங்கள் செய்து அவர்களுடைய கர்மவினையைத் தீர்த்திருக்கலாம்;இருந்தும் இவர்களுக்கு ஏன் இந்த நிலை? யாராலும் நமது கஷ்டங்கள்,சோகங்களிடமிருந்து காக்க முடியாது;அண்ணாமலைக்கு ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக 10,00,000 பேர் கிரிவலத்திற்கு வருகின்றனர்;ஏன் இவ்வளவு கூட்டம்? பௌர்ணமி கிரிவலத்திற்கு சித்தர்கள் வருவார்கள்;அவர்கள் நம்மை பார்த்தாலே நமது அனைத்து கர்மவினைகளும் பொசுங்கிவிடும் என்ற பாமர நம்பிக்கைதான்; இதே நம்பிக்கையோடு நானும் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தேன்;அண்ணாமலையாரை வலம் வந்தாலே நமது கர்மச்சுமைகள்,சோகங்கள்,பாவ வினைப்பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் துவங்கும்;அதே சமயம், நமது முற்பிறவிகள் மூன்றுக்குள் யாராவது ஒரு சித்தரின் சீடராக இருந்திருந்தால்,இப்பிறவியில் நாம் பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலைக்கு வரும் போது அந்த சித்தர் குருவும் கிரிவலம் வந்திருந்தால் மட்டும் நமது கர்மவினைகள் ஒரே விநாடியில் மொத்தமாக அழிந்துவிடும்;இந்த அரிய நிகழ்வு ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும்;மீதி 99,99,999 பேர்கள் தமது கர்மவினையில் இருந்து தப்பிக்க யார் உதவுவார்? அவர்களுக்கு அவர்களே சுய உதவி செய்து கொள்ள வேண்டியதுதான்;எப்படி? தினமும் பைரவ வழிபாடு செய்தல்; அல்லது மாதம் ஒருமுறை(பவுர்ணமி அன்று தான் என்று இல்லை;எந்த நாளாக இருந்தாலும் சரி) அண்ணாமலை கிரிவலம் செல்லுதல்; அல்லது தினமும் ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபித்தல்; அல்லது தினமும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று சிவவழிபாடு செய்தல்; அல்லது தினமும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று உழவாரப்பணி செய்தல்; அல்லது தினமும் சிவத் தொண்டு ஏதாவது ஒன்று செய்தல்; அல்லது தினமும் அன்னை அரசாலை வழிபாடு செய்தல்; அல்லது தினமும் ஏதாவது அன்னை அரசாலை(வராகி) மந்திரம் ஜபித்தல்; அல்லது தினமும் அன்னதானம் ஒருவருக்காவது செய்தல்; அல்லது தினமும் யோகா செய்தவாறு மந்திரம் ஜபித்தல்; அல்லது தினமும் வில்வமரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல்; அல்லது தினமும் ஒரு வில்வமரம் நட்டு அவைகளை பராமரித்தல்; அல்லது தினமும் ஒருவரை பைரவ வழிபாடு அல்லது வராகி வழிபாட்டிற்கு கொண்டு வருதல்(ஜோதிடர்களுக்கு மட்டும்); அல்லது தினமும் நமது பிறந்த நட்சத்திரமரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல்; அல்லது இவைகளில் ஏதாவது ஒன்றை/ஒன்றுக்கு மேற்பட்டவைகளைச் செய்தல்; இவைகளைத் தவிர,ஒவ்வொரு ஜாதகரின் பிறந்த ஜாதகப்படி ஒரு சில குறிப்பிடத்தக்க விசேஷமான தியானமுறை அல்லது பூஜைமுறைகளை வீட்டில் செய்து வருவதன் மூலமாகவும் பிறவிக்கர்மாக்களில் இருந்து மீள முடியும்; வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!! |
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Wednesday, August 12, 2015
நமது கஷ்டங்கள்,அவமானங்கள் அடியோடு யாரால் மாறும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment