Saturday, August 22, 2015

திட்டுபவர்களையும் மதிக்கலாமே?!


(பொறாமையினால்) காரணம் இல்லாமல் ஒருவர் நம்மை திட்டினால்,நாம் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவரைச் சென்றடையும்;மேலும்,அவர் செய்த புண்ணியத்தில் ஒரு பகுதி நம்மை வந்தடையும்;

தேவையில்லாமல் அடுத்தவரின் அந்தரங்க விஷயங்களை அரை குறையாகக் கேள்விப்பட்டு,அதற்கு கண்,காது,மூக்கு வைத்து வதந்தியை உருவாக்கி,வதந்தீயாக மனிதர்களுக்கிடையே நடமாடவிடுவதில் நம்மவர்கள் கில்லாடிகள்;

அப்படி அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைத்து அதை ஊரெல்லாம் பரப்பினால்,அந்த நாளில் அப்படி பரப்பியவர் செய்த புண்ணியம் அனைத்தும் அவரை விட்டுச் சென்றுவிடும்;யாரைப் பற்றி அவதூறாகப் பரப்பினாரோ அவர்களுக்குச் சென்றுவிடும்;

இதுவும் நிரூபிக்கப்பட்ட வாழ்வியல் உண்மை;


No comments:

Post a Comment