யார் ஒருமுறை கூட அண்ணாமலைக்கு வந்ததில்லையோ,அவருக்கு இன்னும் பல ஆயிரம்
பிறவிகள் இருக்கின்றன என்று அர்த்தம்;
யார் ஒருமுறை கூட அண்ணாமலை கிரிவலம் செல்லவில்லையோ,அவருக்குரிய கர்மவினைகள்
அப்படியே இருக்கிறது(மனதிற்குள் ஆன்மீக மனோபாவம் மலரவில்லை) என்று அர்த்தம்;
யார் அண்ணாமலையாரை தரிசிக்கும் போது உடல் சிலிர்க்கவில்லையோ,அவர்கள்
இன்னும் மனப்பூர்வமாக ஆன்மீக வாழ்க்கைக்குத் தயாராகவில்லை(தனது குறைகளைத் திருத்திக்கொள்ளத்
தயாராகவில்லை) என்று அர்த்தம்;
அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ ஒருமுறை கூறினால் 3,00,000 முறை ஓம்
நமசிவாய நமஹ என்று ஜபித்தமைக்குச் சமம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;
பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப்
பஞ்சம் உண்டாகும்;என்பது பன்னிருத்திருமுறைகள் தெரிவிக்கும் சிவரகசியம்;
ஓம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment