டான் பிரவுன் என்ற எழுத்தாளர் எழுதிய டாவின்ஸி கோடு என்ற நாவலை மையமாகக்
கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமே டாவின்ஸி கோடு;தமிழ் மொழிபெயர்ப்புடன் சில
ஆண்டுகளுக்கு முன் வெளியானது;இதில் கூறப்படும் அனைத்தும் கற்பனையே! என்று தெரிவித்து
திரைப்படம் பிரபலமடைந்தது;
கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த ஏசு என்ற ஜீசஸின் வாழ்க்கையில் இதுவரை எவரும்
சொல்லாத சில பக்கங்களை விவரிக்கும் விதமாக டாவின்ஸி கோடு நாவல் உருவாக்கப்பட்டது;ஏசுவுக்கு
மகதலினா மரியாள் என்ற மனைவி உண்டு;குழந்தை உண்டு;என்ற தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும்
இருக்கும் சர்ச் அமைப்பில் பிஷப் பதவியில் இருக்கும் ஒருவர்,ரகசிய கிறிஸ்தவ இயக்கத்தை
நடத்துகிறார்;அந்த இயக்கத்தின் வேலையே ஏசு கிறிஸ்துவின் வாரிசுகளைக் கண்டுபிடித்து
கொன்றுவிடுவதுதான்;இதுதான் அந்த நாவலில் விளக்கப்படும் அம்சம்;
இதை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும்,அவரைத் தேடி வரும் ஒரு இளம்பெண்ணும்
இருவரையும் துரத்தும் அந்த ரகசிய கிறிஸ்தவ இயக்கத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரியும்
என்று கதை போகிறது;கதை முழுக்கவும் ஏசுகிறிஸ்து வாழ்ந்த காலத்துக்கு முந்தைய சின்னங்கள்,அவைகளின்
சுபாவங்கள்,அவைகள் உருவான விதம் பற்றிய விளக்கங்களை கதாபாத்திரங்கள் கலந்துரையாடுவது
போல நாவல் நெடுக வடிவமைத்துள்ளனர்;
இந்த சின்னங்களை ஹீப்ரு மொழி ஜோதிடமுறையான டாரட்டின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது;எனவே
டாரட் ஜோதிடம் கற்க விரும்புவோர் டாவின்ஸி கோடு நாவலை அடிக்கடி வாசிப்பது அவசியம்;
இதன்
மூலமாக டாரட் ஜோதிடத்தின் மீது ஆர்வம் உண்டாகும்;இணையப் பெருங்கடலில் டாரட் சின்னங்கள்
பற்றி பல ஆயிரக் கணக்கானவர்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றனர்;தமிழில் டாரட் கற்க விரும்புவோர்
இந்த நாவலை வாசிப்பது அவசியம்;
உதாரணமாக,ஸ்வஸ்திக் சின்னத்தை தவறான விதத்தில் பயன்படுத்தியதால் தான்
ஹிட்லருக்கு மகத்தான அழிவு உண்டானது;
ஒன்றின் மீது ஒன்று தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும் முக்கோணம் மேற்கு
நாடுகளில் மட்டுமல்ல;நமது முருகக் கடவுளின் வேலுக்குள்ளும் வரையப்பட்டிருப்பதை நாம்
கவனித்திருக்கலாம்;
டாவின்ஸி கோடு நாவலை தமிழில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எதிர்ப்பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது.விலை ரூ.600/-
செல் எண்;9942511302
விரும்புவோர் தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம்;
இது போன்ற பல அரிய,அபூர்வமான தலைப்புக்களில் தமிழ்நாட்டின் பிரபலமான
பதிப்பகங்கள் புத்தகம் வெளியிடுவதில்லை;ஏன் என்று தெரியவில்லை;ஆனால்,தமிழ் புத்தக வாசிப்பாளர்கள்
தேடும் பல அபூர்வமான நூல்களை இது போன்ற பிரபலம் ஆகாத பதிப்பகங்களே வெளியிட்டு வருகின்றன;
ஆன்மீகம் மற்றும் அரிதான விஷயங்கள் பற்றிய புத்தகங்கள் தேடுபவர்களுக்கு
இந்த நூல் மிகவும் தூண்டுகோலாக இருக்கும்;
ஓம் வராகி சிவசக்தி ஒம்
No comments:
Post a Comment