Wednesday, August 19, 2015

இந்தியா வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன?



அரசியலில் இறங்கித் தான் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற சூழ்நிலையெல்லாம் 1980 களோடு முடிஞ்சு போச்சு;
இந்தக் காலத்தில் அரசியல் மூலமாக செய்யும் மக்கள் சேவை குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது;

இப்போ என்ன வேலை பார்க்கிறோமோ,அந்த வேலையை ஒழுங்காக,பொறுப்புணர்ச்சியோட தினமும் பார்த்தாலே போதும்;அதன் தொடர்விளைவாக நாடு வல்லரசு நிலையை எட்டிவிடும்;

எதற்கெடுத்தாலும் குற்றம் குறை சொல்பவர்களின் இறுதி நிலை என்ன தெரியுமா?

எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுபவர்கள்,பிறரின் உழைப்பை உறிஞ்சி வாழ்பவர்கள்,பிறரின் வீழ்ச்சியால் மனம் மகிழ்பவர்கள் ஒரு போதும் ஜெயித்ததில்லை;இந்த குணங்கள் நமது நாட்டின் சுபாவங்கள் இல்லை;இவை 1947 க்கு முன்பே இறக்குமதி ஆனவை;

உழைப்போம்;நமது வேலைகளில் அர்ப்பணிப்பு மனப்பான்மையைக் கொண்டு வருவோம்;

பொதுத்துறை அரசுப்பணிகளில் பணிபுரிந்தாலும் சரி;தனியார் துறை பணிகளில் வேலைபார்த்தாலும் சரி; நேர்மைக்கும்,அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் வீழ்ச்சி என்பது ஒரு போதும் கிடையவே கிடையாது;

ஏழரைச் சனி,அஷ்டமச்சனி நடைபெறுபவர்களுக்கு அது முடிந்தப் பின்னரே உரிய அங்கீகாரம் கிடைக்கும்;அவ்வளவே!

சிங்கப்பூர் போன்ற சிறுநாடுகளில் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் உடனே கொண்டு வந்துவிடமுடியும்;ஆனால்,நமது நாடோ மிகவும் பெரியது;மக்கள் தொகையோ உலகில் இரண்டாவது;இங்கே சீர்திருத்தம் மெதுவாகத்தான் பரவும்;

நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தால் மட்டுமே நமது தேசத்தை வலிமை மிக்க,தன்னிறைவு மிக்க நாடாக மாற்றிட முடியும்;
எப்பப் பார்த்தாலும் குறை சொல்வதை விடுவோம்;இது நம்ம நாடு;இதில் ஏதும் குறை இருந்தால் நாம் தான் சரி செய்யணும்;

அடுத்து அடுத்தவன் வேலையில் மூக்கை நுழைப்பதைக் கைவிடுவோம்;இதுவும் நமது நாடு வலிமை மிக்க நாடாக மாறுவதைத் தடுக்கும் முக்கிய காரணி ஆகும்;

No comments:

Post a Comment