Friday, February 3, 2012

IMPORTENT RESPONSIBLE IS ANCHESTOR'S POOJAI TO EACH AND EVERY MAN AND WOMAN



IMPORTENT RESPONSIBLE IS ANCHESTOR'S POOJAI TO EACH AND EVERY MAN AND WOMAN


பித்ரு பூஜை அசுப காரியம் அல்ல! அவசியம் செய்ய வேண்டிய சுப காரியம்-ஒவ்வொரு மனிதருக்கும்;
கேள்வி:காலம் சென்ற எனது மாமனாருக்கு வருடா வருடம் தவறாமல் திதி கொடுத்து வருகிறார் என் கணவர்.நான் ஒவ்வொரு அமாவாசை அன்றும்,என் மேல் எனது அப்பா போல பாசம் செலுத்திய என் மாமனாருக்காக வீட்டில் அன்னம் வைத்து படையலிட்டு,ஓர் அதிதி(விருந்தாளி)முதலில் உணவளித்துவிட்டு,வ்ஸ்திர தானமும் அளித்து வருகிறேன்.ஒரு சிலர்,சுமங்கலிகள் இவ்வாறு செய்வது தவறு என்று கூறி தடுக்கின்றனர்.என்ன செய்வது?
திருமதி ஜெயலட்சுமி,அடையாறு

பதில்: (திரு.ஏ.எம்.ஆர்.அவர்கள்)பித்ருக்களை பக்தியுடன் பூஜிப்பது பற்றி பலர் பலவிதமாக பேசுவதற்குக் காரணம் பித்ருபூஜை என்பது அசுப காரியம் எனப் பலரும் நினைப்பதுதான்.இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
இறைவனை பூஜிப்பது எந்த அளவிற்கு புனிதமானதோ,எந்த அளவிற்கு அவசியமானதோ அந்த அளவிற்கு புனிதமான கடமை ஆகும்.பித்ரு பூஜை என்பது!
தன் பிள்ளைக்குத் தங்களை திருமணம் செய்து கெஒண்டதன் மூலம் தங்களுக்கு ‘சுமங்கலி’ என்ற அந்தஸ்த்தினை அளித்தவரே அவர்தான்.ஆதலால்,தாங்கள் அமாவாசை அன்று தங்கள் மாமனாரை நினைத்து செய்துவரும் பூஜையை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.பித்ரு பூஜைக்குப் பிரதியாக நமக்கு ஆசி வழங்கி அனைத்து நன்மைகளையும் அளிப்பவர்கள் நால்வர் எனப் புராதன நூல்களும்,ஸ்ரீமத் மகாபாரதமும்,கருடபுராணமும் விளக்கி உள்ளன.


No comments:

Post a Comment