Monday, February 13, 2012

மனதின் துக்கங்களை நீக்கும்,பற்றற்ற மனநிலையை உருவாக்கும் ஜீவசமாதியில் ஜபிக்கப்படும் ஓம்சிவசிவஓம்









கலிகாலமான நாம் வாழும் காலத்தில் தர்மம்,நீதி என்னும் தேவதைக்கு ஒரே ஒரு கால்தான் இருக்கும்;இதனால் தர்மம்,நீதி,நேர்மையோடு வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினம்;நேர்மையாக சம்பாதித்து செல்வந்தராவது முடியாத காரியமாகிவிட்டது.அதனால்,அநீதியான வழிமுறைகளில் பணம் சம்பாதித்தால்,செல்வச் செழிப்பு வந்தாலும்,அதே சமயம் அந்தச் செல்வச்செழிப்பின் விளைவாக கர்ம நோய்கள் தாக்குகின்றன.இதனால்,நோயில்லாத வியாபாரியே இல்லை;என்னுமளவுக்கு தமிழ்நாட்டுக்குடும்பங்கள் மாறத்துவங்கிவிட்டன.


கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே என்பது பகவத் கீதையில் க்ருஷ்ணபகவான் ,அர்ஜீனனுக்கு செய்த உபதேசம்.இதை கம்யூனிஸ்டுகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
தோழர்களே! க்ருஷ்ண பகவானே,முதலாளித்துவத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.அதனால் தான் கடமையை(வேலையைப் பார்!)ச் செய்; (ஆனால்)பலனை எதிர்பாராதே(சம்பள உயர்வை நினைத்துகூட பார்க்காதே) என்று பகவத் கீதையில் உபதேசித்திருக்கிறார்.


நிஜத்தில் இந்த கீதை உபதேசத்துக்கு அர்த்தம் என்ன?


நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான வேலைகள்,கடமைகள்,பொறுப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன.எனவே,ஒருவேலையை நாம் முடித்துவிட்டால்,அதற்கான பலன்கள் உடனே கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்க வேண்டாம்;(அப்படி காத்துக்கொண்டிருந்தால்,நேரம் வீணாகிவிடும்;அடுத்த வேலை தேங்கிவிடும்)உடனே,அடுத்த வேலை/பணி/பொறுப்பினைச் செய்ய ஆரம்பியுங்கள்.


இதையே சுவாமி விவேகானந்தர்,கர்ம யோகம் என்ற தனது நூலில் விளக்கமாகவும்,எளிமையாகவும், “உங்களுக்கு அருகில் உள்ள கடமைகளை செய்து கொண்டே செல்லுங்கள்” என்று விவரித்திருக்கிறார்.


தமிழ்நாட்டில் தன்னைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமலும்,தன்னைச் சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஏராளமான பொதுநலவாதிகள் இருக்கிறார்கள்.அவர்களால் தான் பல குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றன;அவர்களால் தான் பல நிறுவனங்கள் வளர்ச்சியடைகின்றன;அவர்களால் தான் ஓரளவுக்கு மழை பொழிகிறது.ஆனால்,அப்படிப்பட்ட பொதுநலவாதிகளை,யூஸ் அண்டு த்ரோவாகத்தான் அவர்களின் குடும்பங்கள் பயன்படுத்துகின்றன;அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சக்கையாகப் பிழிந்தெடுத்துவிடுகின்றன;சிவகாசி,திருப்பூர்,கோவை,ஈரோடு,   சென்னை,திருநெல்வேலி முதலான நகரங்களில் இப்பேர்ப்பட்ட பொதுநலவாதிகள் பல லட்சம் பேர்கள் வாழ்ந்துவருகின்றனர்.


இவர்களால் பலனடைந்த பலரில் ஒருவர் கூட இவர்களுக்கு ஒரு சிறு உதவி கூட செய்வதில்லை;மாறாக இவர்களது வளர்ச்சிக்குத்தடை செய்கின்றனர்.இவர்களுக்கு மட்டும்தான் தன்னைப் பற்றி பெருமையாகவும்,பிறரை மிகவும் இழிவாகவும் நினைக்கவும்,பேசவும் தெரியாது;இவர்களைத் தவிர,பெரும்பாலானவர்களுக்கு தன்னைப் பற்றி மிக உயர்வாகவும்,அடுத்தவர்களை மிக மிகக் கேவலமாகவும்(தனது மகன்/மகளாக இருந்தாலும்) நினைக்கவும்,பேசவும் தெரியும்.



இப்படி நேர்மை,நீதி,நியாயத்துக்காக தன்னை பலி கொடுத்து ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியில் பணிபுரிபவர்கள் இன்று முதல் செய்ய வேண்டியது:முதலில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;பிறகு தினமும் 15 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.எங்கே? நீங்கள் வாழும் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சித்தர் பீடத்தில் அல்லது ஜீவ சமாதியில்!
முதல் வாரத்தில் ஒரு நாளுக்கு 15 நிமிடம் வரையிலும் இந்த ஜீவசமாதியில் மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்து(ஐந்து முக ருத்ராட்சமே போதுமானது) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.காலை அல்லது மதியம் அல்லது இரவு அல்லது நள்ளிரவு அல்லது அதிகாலை ஏதாவது ஒரு நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.

இரண்டாவது வாரத்தில் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வரையிலும்,மூன்றாவது வாரத்தில் ஒரு நாளுக்கு 45 நிமிடம் வரையிலும்,நான்காவது வாரத்திலிருந்து 1 மணி நேரம் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வருடத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர,நீதி நேர்மை,நியாயம்,தர்மத்துக்காக தன்னையே இழந்தவர்கள்,கிடைக்க வேண்டிய பதவி உயர்வு,ஊக்கத் தொகை எனப்படும் போனஸ்கள்,இழந்த பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தும் திரும்பக் கிடைத்துவிடும்.


இந்த அரிய உண்மையை எனக்கு போதித்த சிவகடாட்சம் மிஸ்டிக்  ஐயா  அவர்களுக்கு கோடி கூகுள் நன்றிகள்!!!


தமிழ்நாட்டில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல் பாகம் -1


அகத்தியர் = ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் வெளிப்பிரகாரம்,கும்பகோணம்.
போகர் = பழனி மலை
திருமூலர் = தில்லை
பதஞ்சலி= சேது சமுத்திரம்,திருப்பட்டூர்,ராமேஸ்வரம்,சிதம்பரம்
தன்வந்திரி = வைத்தீஸ்வரன் கோவில்
கருவூரார் = கரூர்
சுந்தரானந்தர் = மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மச்சமுனி = திருப்பரங்குன்றம்,திரு ஆனைக்கா(திருச்சி)
ராமதேவர் = அழகர்கோவில் மலை மேல் பகுதியில்
சட்டமுனி  = ஸ்ரீரங்கம்,சீர்காழி
வான்மீகர் = எட்டுக்குடி(நாகப்பட்டிணம் அருகே)
குதம்பைச் சித்தர் = மாயூரம்
பாம்பாட்டி சித்தர் = விருத்தாச்சலம்,சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலின் பின்புறம் செல்லும் ரோட்டில் ஊருக்குள்ளே; மருதமலை;துவாரகை
இடைக்காடர் = திரு அண்ணாமலை; இடைக்காட்டூர்;திருவிடை மருதூர்.
கோரக்கர் = பேரூர்,வடக்குப் பொய்கை நல்லூர்,கோரக்பூர்.
பிரம்மமுனி = பேரூர்
கொங்கணவர் = திருப்பதி மலை மேலே பாபநாசம் செல்லும் வழியில் இருக்கும் வேணுகோபால் கோவிலுக்குள்;
காலாங்கி = காஞ்சிபுரம்
கடுவெளிசித்தர் = காஞ்சிபுரம்
அகப்பேய்சித்தர் = திருவையாறு
எழுகண்ணி சித்தர்(சிலர் அழுகண்ணி சித்தர் என்பார்கள்)=நீலாயதாட்சி கோவில்,நாகப்பட்டிணம்
புலிப்பாணி = திருப்பட்டூர்
சிவவாக்கியர் = கும்ப கோணம்
புலத்தியர் = பாபநாசம்(திருநெல்வேலி அருகே);ஆவுடையார் கோவில்
தேரையர் = தோரணமலை(கேரளா)
காகபுஜண்டர் = உறையூர்,உத்திர கோசமங்கை.


$$$ மேற்கூறிய ஊர்களில் தினமும் சிவாலயம் செல்லும் பக்தர்களுக்கு சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்குமிடம் தெரிந்திருக்கும்.

ஒரு சித்தருக்கு அதிக பட்சமாக எட்டு இடங்களில் ஜீவசமாதிகள் இருக்கும்.

வீட்டை விட்டு எங்குமே செல்ல இயலாதவர்கள்,இந்த ஜீவசமாதிகளின் புகைப்படங்களை லேமினேஷன் செய்து,வீட்டிலேயே தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்தும் வரலாம்.


ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்
    திருநீறு அணியாது இருப்பதற்கு
    ஏதேனும் காரணம் உண்டா ?

    ReplyDelete
  2. In mum, where i stay, there r no Jeeva samadhis. Can i chant in, near by shiva aalayam?

    shashikala

    ReplyDelete