Friday, February 3, 2012

ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?


ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?

ஆன்மீகம் நமக்கு அவசியமா?ஏன்? எதற்கு?

இந்த கேள்வி கேட்பது மிகச் சுலபமானது.ஆனால் பதிலோ மிக விரிவானது.
இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவில் செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான் என்ற கட்டுரையை வாசித்திருப்பீர்கள்.இதெல்லாம் நிஜமா? என சந்தேகம் கூடப்பட்டிருப்பீர்கள்.இதே தகவலை அமெரிக்கா அல்லது ஆங்கில நாடு வெளியிட்டிருந்தால் நாம் காலரைத் தூக்கிக் கொண்டாடியிருப்போம்.இல்லையா? இந்த சம்பவம் நிஜமாக இருந்தும் கூட ஏன் அமெரிக்கா இதைப் பிரபலப்படுத்தவில்லை?
ஏனென்றால்,இந்த அதிசயம் இந்து மதத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா எப்படி இதை ஒப்புக்கொள்ளும்?!

ஒரு மாறுதலுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவில் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.சனிபகவான் கிறிஸ்தவமதத்திற்குச் சொந்தம் என்று வைத்துக்கொண்டால்,கதையே வேறு.மாதம் 1000 கோடி டாலர்கள் செலவழித்து சனிபகவான் கோவிலை பிரபலப்படுத்தியிருப்பர்.இஸ்லாமிய நாடுகளில் இந்த விஷயத்தை-அதிசயத்தை பிரபலப்படுத்தியே இஸ்லாம் மத மக்கள் தொகையை 99% அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு மாற்றத்துவங்கியிருப்பர்.ஒசாமா பின்லேடன் சனிபகவான் கோவிலைத் தாக்க தனி பயங்கரவாதக்குழுக்களை அனுப்பி.. ..
சரி! இந்துக்களாகிய நாம் ஏன் இந்த விஷயத்தைக் கொண்டாடுவதில்லை.இந்த விஷயம் பிரபலமடையாமல் தி.மு.க., கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் மிகக் கவனமாக பார்த்து-இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.அப்படி பிரபலப்படுத்த விட்டால்,இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வளர்ந்துவிடுமே!
அரசியல் வேறு,நமது பெருமைமிகு பண்பாடு வேறு என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.பிறகு,எப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெருமை தெரியும்?
ஒரு சாதாரண இந்த அதிசய சம்பவத்திற்கே இப்படி என்றால் சேது சமுத்திரத்திட்டம்,அயோத்தி ராமர் கோவில் பிரச்னை,அமர்நாத் பனிலிங்கம் சார்ந்த பிரச்னை,சபரிமலை தந்திரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு,திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ (ஆந்திர முதல்வர் சாமுவேல் ராஜ சேகர ரெட்டி)செய்யும் சேட்டைகள் 100 பக்கம் எழுதலாம்.தினமும் ஒரு பிரச்னையைப்பற்றி பார்க்கலாம்.

No comments:

Post a Comment