பசுமலையில் படித்துக்கொண்டிருந்தபோது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று முருகக்கடவுளை மனமார வழிபடுவது வழக்கம்.
அப்படி ஒருசமயம் அவர் திருப்பரங்குன்றம் சென்ற போது வழியில் ஒரு பெருங்கூட்டம் இருந்தது.அந்த பெருங்கூட்டத்துக்கு நடுவே ஒரு பாதிரியார்,
“இயேசுவே உண்மையான தெய்வம்.அவரை வழிபடாதவர்கள் பாவிகள்.அவரைப் பின்பற்றுபவர்களின் பாவத்தை மன்னித்து மோட்சம் அளிக்கிறார்” என்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்.அப்போது ஒரு கல்லைக் காட்டி, ‘இது என்ன?’ என்று கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.கூட்டத்தினர், ‘கல்’ என்று சொன்னார்கள்.
“இதுவும் கல்தான்; கோயிலில் நீங்கள் வழிபடும் சிலையும் கல்தான்.அப்படி இருக்க ஒரு கல்லைப் போய் கடவுள் என்று நீங்கள் வழிபடலாமா?”என்று எகத்தாளத்தோடு கேட்டார்.கூட்டம் மவுனமாக இருந்தது.
முத்துராமலிங்கத்தேவருக்கு பொறுக்கவில்லை;அவர் பாதிரியிடம், “ஐயா, உங்களுக்கு அம்மா,மனைவி,சகோதரி எல்லொரும் பெண்கள் தானே.இவர்கள் அனைவரையும் நீங்கள் ஒன்றுபோலத் தான் நடத்துகிறீர்களா? ஒன்றுபோலத் தான் பார்ப்பீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.இந்த பதிலடியால் பாதிரியின் முகம் பேயறைந்ததுபோலானது.
சில நொடிகள் மவுனத்துக்குப்பின்னர், தேவர் திருமகனார், “அதுபோலத் தான் நாங்கள் ஒரு கல்லை சிலை வடிவாகவும்,மற்றொன்றை வீடு கட்டவும்,இன்னொன்றை சாலை போடவும் பயன்படுத்துகிறோம்”என்றார்.கூட்டம் ஆர்ப்பரித்தது.
ஓம்சிவசிவஓம்
இந்து தர்மத்தைப்பரப்ப உலகம் முழுவதும் பயணிப்போம்;விமானம்,கப்பல் வழியாக மட்டுமல்ல;இணையம் வழியாகவும் தான்!!!
meendum oru தேவர் iyya vendum,
ReplyDeleteJAI HIND