Wednesday, February 8, 2012

குடும்ப அமைப்பைப் புரிந்து கொள்ளாத முட்டாள் நார்வே அரசு


1.குழந்தைகளுக்கு விளையாட வயதுக்கேற்ற வகையில் தரமான மொம்மைகள் இல்லை;

2.குழந்தைகளின் உள்ளாடையை மேஜையில் இருத்தி மாற்றாமல் படுக்கையிலேயே மாற்றுகிறார்.

3.கைக்குழந்தையை சரியான நிலையில் இருத்தி தாய்ப்பால் புகட்ட அந்த அம்மாவுக்குத் தெரியவில்லை.

4.அம்மா படுக்கும் படுக்கையிலே குழந்தையைப் படுக்க வைக்கிறார்.குழந்தைக்கென தனிப்படுக்கை இல்லை.

5.மூன்று வயதாகும் பையனுக்கு தனிப்படுக்கை அறையில்லை;அவனுக்கு ஸ்பூனால் ஊட்டாமல் கையால் உணவு ஊட்டுகிறார்.


6.வீடும் 5+2 நபர் வசிக்கப் போதுமானதாக இல்லை.

இது போன்ற பல குற்றங்கள் காரணமாக, நார்வே அரசாங்கம் அனுரூப் சகாரிகா ஆகிய நார்வே வாழ் இந்தியத் தம்பதியினரிடம் இருந்து அவர்கலின் 2 குழந்தைகளை பறித்துச் சென்று அந்நாட்டு குழந்தைகள் நல காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டது?!?!??!!


வழக்கை விசாரித்த நீதிபதி இந்த குற்றங்கள்(?) நிரூபிக்கப்பட்டதால் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை அவை பெற்றோரை பிரிந்து அரசின் குழந்தைகள் நல காவல்துறை ஒப்படைக்கும் இரவல் பெற்றோரிடம்தான் வளர வேண்டும் என்றும்,வருடத்திற்கு மூன்றுமுறை வீதம்,ஒவ்வொருமுறையும் ஒரு மணிநேரம் வரை என பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்க அனுமதி உண்டு என்றும் தீர்ப்பு வழங்கினார்.


ஐயோ என்ன கொடுமை இது என்று கேட்டால், இது போன்று 12,000 குழந்தைகளை நார்வே அரசின் குழந்தைகள் நல காவல்துறை இரவல் பெற்றோர் மூலம் வளர்த்துவருவதாக அந்த அரசாங்கம் தெரிவிக்கிறது.நமது(பாரத) மத்திய அரசின் நேரடித் தலையீட்டால் இப்போது அந்த இந்தியக் குழந்தைகள் கொல்கொத்தாவில் உள்ள தங்களின் மாமா குடும்பத்தில் வளர ஒப்படைக்கப்பட்டது.


கையால் சாப்பிடக்கூடாது என்றால் தெற்காசிய நாட்டு மக்கள் கையால் தானே சாப்பிடுகிறார்கள்.திருமணங்களில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி விடுவது என்பது சடங்காகவே இருக்கிறது.தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ,மாணவியர்கள் கூட தங்கள் தாயார் கையால் சாப்பிட்டுவிட்டு தான் கல்லூரிக்கே செல்கின்றனர்.இன்றும் ராஜபாளையம்,மதுரை,சென்னை முதலான நகரங்களில் கூட இந்த பண்பாடு பரவலாக இருக்கிறது. ‘பொருளாதார வளர்ச்சி,மக்கள் நல அரசாங்கம்’ என்பவை எல்லாம் சமூகத்தின் பன்முகத்தன்மையை அழித்து,ஒரே சீரான தரத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

கம்யூனிஸத்தின் முகம் ஒருவிதமான சர்வாதிகாரம் எனில்,முதலாளித்துவத்தின் முகம் இன்னொருவிதமான சர்வாதிகாரம் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை;தந்தை சொல் மிக்க மந்திரமில்லை; என்பது இந்து தர்ம சித்தாந்தம்!!!
ஆனால்,அரசாங்கமே தெய்வம்;மந்திரம்,ஆலயம் எல்லாம் என கம்யூனிஸ நாடுகளும்,முதலாளித்துவ நாடுகளும், மதச்சார்பு நாடுகளும் கூறுகின்றன.உலகம் சுமுகமாக வாழ வேண்டுமெனில்,பன்முகத்தன்மையோடு குடும்ப சமூக உறவோடு நீடிக்க வேண்டும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment