சென்னை கே.கே.நகர்,சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து.பன்னாட்டு பற்பசை நிறுவனமான கோல்கேட் பால்மோலிவ்(இந்தியா)நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தலைவர் ,சென்னை,தி.நகர்=ஜி.என்.செட்டிச் சாலை யுனிட்டி எண்டர்பிரைசஸ் உரிமையாளர் மற்றும் அசோக் நகர்,2 வது அவென்யு செல்வி ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் அவரது வாதம்:
செல்வி ஸ்டோர்ஸில் கடந்த 15.2.2004 இல் மளிகைப் பொருட்களுடன் 100 கிராம் கோல்கேட் மூலிகை டூத் பேஸ்டும் வாங்கினேன்.இரண்டு நாட்கள் கழித்து,அதைக் கொண்டு பல்துலக்கிய என் மனைவிக்கு, வாந்தி பேதி ஏற்பட்டது.பின்னர் சோதித்துப் பார்த்தபோது, ‘டூத் பேஸ்ட்’நிரப்பப்பட்ட குழாயில்,கரப்பான் புச்சியின் உடல் உறுப்புகளை ஒத்த,கருமை நிறப்பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.நேர்மையற்ற முறையில் வணிகம் செய்ததற்கு நஷ்ட ஈடாக ஒன்பது லட்சம் ரூபாய் தர வேண்டும்.
மனுவை விசாரித்த சென்னை (தெற்கு) நுகர்வோர் நீதிமன்றத்தின் நீதிபதி கோபால்,தீனதயாளன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கிண்டியில் உள்ள ,தொழில் கூட்டுறவு பகுப்பாய்வகம் தமது சான்றிதழில்,மனுதாரர் வாங்கிய பற்பசை தரம் குறைந்தது என குறிப்பிட்டுள்ளது.நேர்மையற்ற வழியில் வணிகம் செய்ததற்கு அபராதமாக எதிர்மனுதாரர்கள் மூவரும்,மனுதாரருக்கு ரூ.50,000/-நஷ்ட ஈடும்,வழக்குச் செலவிற்காக ரூ.5000/-வழங்க வேண்டும்’ என ஆணையிட்டுள்ளனர்.
நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 13,பிப்ரவரி 2012.
அங்கேயுமா ? !
ReplyDelete