உலகமயமாக்கலின் விளைவாக, நமது ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையையும் செல்போனும்,இணையமும் படுவேகமாக மாற்றிவிட்டன; இந்த உலகமயமாக்கலே குடும்ப அமைப்பின் முதல் எதிரி ஆகும்;குடும்ப அமைப்பு சிதைந்து போய்விட்டால்,தனிமனித ஒழுக்கம் காணாமல் போய்விடும்;தனிமனித ஒழுக்கம் காணாமல் போய்விட்டால்,(வேதாத்திரி மகரிஷியின் ஆன்மீக ஆராய்ச்சியின் படி) வான் காந்தம் கடுமையாக பாதிக்கப்படும்;வான் காந்தம் பாதித்துவிட்டால்,பூமியில் நீராலும்,நிலநடுக்கத்தாலும் அழிவுகள் பெருமளவு பெருகிவிடும்.இந்த சூழ்நிலையை இணையத்தின் பரவல் 1990 முதல் 2010க்குள் உண்டாக்கிவிட்டது. தவிர,வல்லரசு நாடுகள் எனப்படும் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான்,சீனா போன்றவைகளின் பேராசையால்,பூமியின் பல்வேறு நாடுகளில் இருக்கும் அனைத்துவிதமான இயற்கை வளங்களை வேகமாகவும்,பிரம்மாண்டமாகவும் நுகர்வு செய்ய ஆரம்பித்திருக்கிறான் மனிதன்.இது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
இந்த அழிவுக்கான சுழற்சியை நிறுத்திட,நாம் தமிழ்நாட்டில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு மாதம் ஒரு நாள்/வாரம் ஒரு நாள் சென்று வழிபடுவது அவசியம் ஆகும்.மாதம் ஒரு நாள் என்பது மாதாந்திர பவுர்ணமி/மாதாந்திர அமாவாசை/மாதாந்திர சிவராத்திரி அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திரம் நிற்கும் நாளில் வழிபாடு செய்வது உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும்,நமது பாரத நாட்டிற்கும்,நமது நாட்டிற்கும் நன்மை பயக்கும்.பூமியின் நலனைக் கெடுப்பவர்களின் செயல்பாட்டை முடக்கிவைக்கும் என்பது உண்மை.
திண்டிவனம்
சாரம்
முத்துராம பிரம்மம்
திண்டிவனம் டூ ஒலக்கூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சாரம் கிராமம்.இங்கிருக்கும் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா இங்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் வரும் திருஓணம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
மயிலம்
சிவஞான பாலசித்தர்
திண்டிவனம் டூ புதுச்சேரி சாலையில் மயிலம் மலை மேல் உள்ள முருகன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
திருவக்கரை
குண்டலினி சித்தர்
மயிலத்தை அடுத்த திருவக்கரை வக்கிரகாளி கோவிலில் சந்திரமவுலீஸ்வரர் சன்னதியின் இடப்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு சித்தரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பெருமுக்கல்
முத்தாலீஸ்வரர்
திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் பெருமுக்கல் கிராமத்தில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
உப்புவேலூர்
குழந்தைவேல்சாமி
திண்டிவனம் டூ கிளியனூர் சாலையில் 18 கி.மீ.தூரத்தில் இருப்பது உப்புவேலூர்.இங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
வன்னியநல்லூர்
ஸ்ரீதேவராசு சுவாமிகள்
சூனாம்பேடு அருகில் வன்னியநல்லூர் கிராமத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு ஆனி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!
புதுச்சேரி சுற்றுப்புறம்
இரும்மை மாகாணம்
கழுவெளி சித்தர்
ஆரோவில்லில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் இந்த சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
புதுச்சேரி
அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை
பறவைச் செட்டித் தெரு கடைசியில் அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை இருவரது ஜீவசமாதிகளும் இருக்கின்றன.
தொள்ளை காது சாமிகள்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகருக்குப் பின்புறம் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
மவுலானா சாகிப் மெய் ஞான சாமிகள்
பாண்டி முல்லா வீதியின் கடைசியில் தர்கா அருகில் இவரது ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
நாகலிங்கசாமிகள்
புதுவை அம்பலத்தாடையர் மடம் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பின்புறம் இவரது ஜீவசமாதிகள் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 7 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
அக்கா பரதேசி சாமிகள்
முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதி குதிரைக்குளம் அருகே ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி
ஸ்ரீகம்பளி ஞான தேசிக சாமிகள்
தொழிற்பேட்டை பின்புறம் ருத்ரபூமியில் உள்ள ஆஸ்ரம வளாகத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு கருவறையில் உள்ள நந்தியின் கீழ் சுவாமிகளின் சீடர் அம்பலவாண சாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரியவர்களுக்கு பெரியவர்
கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக்குப் பின்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
சித்தன்குடி
யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள்
சித்தன்குடி பிருந்தாவன் 3 வது குறுக்குத் தெருவின் மடத்தில் ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.
எல்லப்பிள்ளை சாவடி
சுப்ரமணிய அபிநவ சச்சிதானந்த சுவாமிகள்
எல்லப்பிள்ளள சாவடியில் இருக்கும் ஸ்ரீசாரதா கோவிலில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீசச்சிதானந்த சாமி
ஸ்ரீசாரதா சிவகெங்கை மடத்திற்கு மேற்கில் 100 அடி சாலையில் 21 எண் வளாகத்தின் உட்புறம் மண்டபத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.
முத்திரைப்பாளையம்
ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்
பழைய பஸ் ஸ்டாண்ட் டூ தென்னஞ்சாலை கோவிந்தசாமி முதலியார் தோட்டம்(சுதேசி காட்டன் மில் எதிரில்) இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முத்தியால் பேட்டை அம்பிகா திரையரங்கம் எதிரில் திரு முத்துகுமாரசாமி முதலியார் தோட்டத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறாது.இந்த ஜீவபீடம் வேலாயுத ஈசுவரர் திருக்கோவிலாக வழிபடப்படுகிறது.இங்கு சீடர் கோவிந்தசாமியின் சமாதி அருகில் உள்ளது.
அரியூர் சர்க்கரை ஆலை
குருசாமி அம்மையார்
சர்க்கரை ஆலை காம்பவுண்டு தாண்டியவுடன் ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை சித்திரா பவுர்ணமி!!!
பிள்ளையார் குப்பம்
ரெட்டியப்ப சுவாமிகள்
கிருமாம்பாக்கம் அருகில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
திருபுவனை
சிற்றம்பல அப்பார்
திருபுவனையில் அப்பார் சன்னதி என்றழைக்கப்படுகிறது.
ஏம்பலம்
அம்பலத்தாடி அப்பர்
ஏம்பலம் மடத்திற்கு அருகில் ஜீவசமாதி இருக்கிறது.வருடம் தோறும் வரும் புரட்டாசி 15 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சிங்காரப்பட்டு
ரெங்கசாமி சித்தர்
புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ.தூரத்தில் மண்ணடிப்பட்டு இருக்கிறது.அங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் சிங்காரப்பட்டு இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் சிறிய முருகன் கோவில் கருவறை முன்பு உள்ள மயில் பீடம் இவரது சித்தர்பீடம் ஆகும்.
லாலப்பேட்(கருவடிக்குப்பம்)
சித்தானந்த சுவாமிகள்
கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
ஸ்ரீகணபதி சுவாமிகள்
கருவடிக்குப்பம் டூ இடையஞ்சாவடி ரோட்டின் கடைசியில் ஆஸ்ரமமும் அதன் அருகில் சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த மேடையின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காராமணிக்குப்பம்
ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகள்
காராமணிக்குப்பம் ரயில்வே கேட் தாண்டி உள்ளது.
மண்ணடிப்பட்டு
பவழக்கொடி சித்தர்
புதுச்சேரி மண்ணடிப்பட்டு சாலையில் சோம்பட்டு கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் தொடக்கத்தில் பவழக்கொடி சித்தரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சின்னபாபு சமுத்திரம்
ஸ்ரீமகான் படே சாயபு
பாண்டி டூ விழுப்புரம் சாலையில் இருப்பது கண்டமங்கலம்!இந்த கிராமத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது சின்னபாபு சமுத்திரம் என்னும் கிராமம்.இங்கு இவரது ஜீவசமாதி கோவில் இருக்கிறது.செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
அரும்பார்த்தபுரம்
தேங்காய் சுவாமிகள்
புதுவை கட்டாஞ்சாவடி எதிரில் சிறிய சமாதி பீடம் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பள்ளித்தென்னல்
தட்சிணாமூர்த்தி சாமிகள்
புதுவை விழுப்புரம் சாலையில் பள்ளித்தென்னல் கிராமம் அமைந்திருக்கிறது.இங்கு ஐயனார் கோவிலும் குளமும் உள்ளன.இந்த குளத்தின் வட கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுப்பட்டு
ஸ்ரீலட்சுமண சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டு காட்டுப்பகுதியில் ஐயனாரப்பன் என்னும் மஞ்சனீஸ்வரன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறம் வடமேற்கு மூலையில் சமாதிபீடம் அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முருகனடிமை பச்சையம்மாள்
கருவடிக்குப்பம் மயானத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.
வில்லியனூர்(ஓதியம்பட்டு)
வண்ணார் பரதேசி சாமிகள்
புதுவை டூ முருகம்பக்கம் வழி வில்லியனூர் சாலையில் 7 கி.மீ.தூரத்தில் ஒதியம்பட்டு இருக்கிறது.இந்த ஊருக்கு மேற்கே சமாதி பீடம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கணுவாய் பேட்டை
திருக்காஞ்சி சாமியார்( எ) வியோமா முனிவர்
வில்லியனூர் கணுவாய் பேட்டை மல்லிகா தியேட்டர் வீதி கடைசியில் சாமியார் தோப்பு இருக்கிறது.இந்த தோப்பினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சுல்தான் பேட்டை
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
சுல்தான்பேட்டை திருப்பத்தில் (பைபாஸ் ரோடு அருகில்) மூலக்கடையில் பிருந்தாவன ஜீவபீடம் இருக்கிறது.
நல்லாத்தூர்
சிவப்பிரகாச சாமிகள்
வில்லியனூர் ஏம்பலம் நல்லாத்தூர் சிவஞான பாலைய சாமிகள் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு இவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தென்னம்பாக்கம்
அழகர்சாமிகள் & சாம்பசிவசாமிகள்
வில்லியனூர் ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் இருக்கிறது.தோப்பிற்குள் அழகுமுத்து அய்யனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் பீடத்திற்குப் பின்னால் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
வளவனூர்
ஸ்ரீமுத்தையாதேசிகன் சுவாமிகள்
வளவனூர் வன்னி மடாலயத் தெருவிலுள்ள மடாலயத்தில் ஜீவசமாதி தரைமட்டத்திற்குக் கீழே பாதாளத்தில் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் வரும் மகம் நட்சத்திரம்!!!
சத்சொரூபானந்த சுவாமி
வளவனூர் முதல் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் சொரூபானந்த சாமி ஐயப்பன் மடம் இருக்கிறாது.இந்த மடத்தில் வலப்புறம் கிழக்குப் பார்த்த சிறிய கருவறையே இவரது ஜீவசமாதி பீடம் ஆகும்.இங்கு கருங்கல்லால் வடிக்கப்பட்ட திருவடிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தை மாதம் வரும் உத்திரட்டாதி வருடாந்திர குருபூஜை நாள்!!!
ஸ்ரீசண்முக சுவாமிகள்
வளவனூர் சத்திரம் ஜீவசமாதி!
ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிகள்
வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டில் இருக்கிறது.
பொம்மபுரம்
ஸ்ரீசிவஞான பாலைய சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ.தூரத்தில் பொம்மபுரம் என்னும் பொம்மையார்புரம் சிற்றூர் இருக்கிறது. பொம்மபுர ஆதீனத் திருமடம் முருகன் சன்னதியில் திரு உருவத்திற்கு முன்னதாக உள்ள சுரங்கப்பாதையில் ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!
ஓம்சிவசிவஓம்
அன்புள்ள அய்யா
ReplyDeleteநான் புதுச்சேரி ஸ்ரீகாந்த்.
எங்களுர் புதுவையில் இவ்வளவு சித்தர்களா என ஆச்சர்யம் அடைந்தேன்
இனி இதில் உள்ள இடங்களுக்கு சென்று ஆசி பெறுவதே என் பணி
im also from pondicherry .millions of thanks for ur valuable information .
ReplyDeleteom siva om