Saturday, February 4, 2012

பரோட்டா பிரியர்களே..............!


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு......

இன்று தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு, குற்றாலம் பார்டர் பரோட்டா,
விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி பரோட்டா ,கொத்துப் பரோட்டா ,சில்லிப் பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பின்னாடி படிங்க!....


பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு பதார்த்தம். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.


பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டித், திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.பரோட்டா மட்டுமல்லாது நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,

மைதா எப்படித் தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவிற்குக் காரணமாகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப் படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இந்த Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவழைப்பதற்குப் பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.


மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கோளாறுகள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .



மைதாவின் தீமைகள் குறித்து நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.




முதுகுத்தண்டுக் கோளாறு, ருமாடிசம், ஆர்தரடிஸ், வாய்வுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படும் நண்பர்கள், தயவு செய்து பரோட்டாவைப் பார்க்கக் கூடச் செய்யாதீர்கள். பரோட்டா மலச்சிக்கலை ஏற்படுத்தி வாதத்தன்மையை அதிகப்படுத்தும்.

நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, தினை,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .



2 comments:

  1. maida maavu thayarippathu kurithu enathu siru vilakkam;- kothumai muzhuvathaga araithaal kothumai maavu thaan kidaikkum. maida kidaikkaathu. oru muzhu kothumai thaaniyam eduthuk kondaal athil ravaa, maida, atta, flakes,thavidu enru pala porul thani thaniye kidaikkum. kothumai aravi mill kalil ore nerathil ivai thani thanoyaka machine moolam pirikkapadum. Muthal naal iravil kothumai thanneeril ooravaikkapattu adutha naal 4th flooril kottapadum kothumai ground flooril naangu idangalil ravaa, maida, atta, flakes enru mootaikalil pidikkapadum. so, chemical kalappathu enra pechukke idamillai.

    ReplyDelete
  2. @nanniyer :

    Please read the below post from Wikipedia about Maida preparation.

    http://en.wikipedia.org/wiki/Maida_flour

    In the above post they mention it very clearly that,

    "Maida contains Alloxan, the source of which may be direct use as softener or the by-product of the bleaching agent Chlorine dioxide.

    Maida is often softened using Alloxan which is known to destroy beta cells in the pancreas of rodents and other species, causing Diabetes mellitus.

    The bleaching agent, Chlorine dioxide, used to bleach flour is reported to produce diabetes-causing contaminant alloxan when reacting with the proteins contained in flour.

    Studies show that alloxan, the chemical that makes white flour look "clean" and "beautiful," destroys the beta cells of the pancreas."

    So what aanmigakadal has said is perfectly RIGHT!! No doubt about it!!!

    ReplyDelete