பவகார யோகம் என்றால் காற்றை சாப்பிடுவது என்று பொருள்.தொடர்ச்சியான பிராணயாமப் பயிற்சிகளால் யோகியானவன் உணவு வகைகளை,அதாவது திட மற்றும் திரவ உணவுவகைகளை ஒதுக்கி வாயுவாகிய காற்றை உண்டு(சுவாசித்து) மட்டுமே வாழக்கூடிய தகுதியைப் பெறுகிறான்.காற்றை மட்டும் உண்டு வாழும் யோகிக்கு உடலில் கழிவுப்பொருட்கள் உண்டாவதில்லை.உடல் எனப்படும் தேகம் பரிமள வாசனையோடும் இருக்கும்;இந்த யோகிகளுக்கு மரணம் என்பதே கிடையாது.மரணத்தின்மீது முழு ஆதிக்கம் செலுத்தி,மனதின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி,புலன் ஈர்ப்பு விசை எல்லைகளைக் கடந்து,புவியீர்ப்பு விசை எல்லைகளையும் கடந்து,மரணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கிடைக்கிறது.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து வரும் ஸ்ரீமகா அவதார பாபாஜி,அவர் தம் தமக்கையார்(சகோதரி) ஸ்ரீநாகலட்சுமி தேவியார் ஆகியோர் இவ்வகை யோகிகளுக்கு உதாரணம் ஆகும்.
மேலும் ஸ்ரீகவுரி சங்கர் பீடத்தில் பாபாஜியுடன் வசித்துவரும் 8 சிஷ்யர்களும் இதற்கு உதாரணம்.இமயமலை வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்துவரும் பல்வேறு யோகிகளும்,யூதரான ஈசா எனப்படும் யேசு,புனிதபவுல்,யோவான் ,எலீயா போன்றவர்களும் தங்கள் பருவுடலை நினைத்தபோது சிதைத்துக்கொள்ளும்,நினைத்தபோது மீண்டும் எடுத்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்று இருந்தது சிலவகை சித்தர்முறையிலான மூச்சுப்பயிற்சிகளால்தான்!!! ஆதாரம்:சித்தர் களஞ்சியம் ,பக்கம் 108
ஓம்சிவசிவஓம்
நண்பரே
ReplyDeleteகிறிஸ்துவுக்கோ அவரின் சீடர்களுக்கோ இந்த யோகங்கள் எதுவும் தெரியாது. நீங்கள் ஏன் சம்பந்தமில்லாமல் கிறிஸ்தவத்தையும் துணைக்கு இழுக்கிறீர்கள். பைபிளில் ஏசுதான் பலரைக் குணமாக்கினார் என்று உள்ளதே தவிர அவரின் சீடர்கள் குணமாக்கியதாகவோ, இறந்தவர்களை உயிர்ப்பித்ததாகவோ இல்லை. நம் மதத்தில் உள்ள உயர்ந்த விஷயங்களை ஒன்றுமே இல்லாத கிறிஸ்தவத்துடனும் இஸ்லாத்துடனும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.