Tuesday, February 28, 2012

சென்னை சபையர் தியேட்டர் மூடியிருப்பதன் காரணம் என்ன?


சென்னையில் பிரபலமான நிறுவனக்குழுமம் விகம்சி(Veecumsee)ஆகும்.இந்த நிறுவனக்குழுமங்களின் தொழில்கள் தங்கம்,வைரம் வியாபாரத்தில் முன்னணி நிறுவனங்களாக இருந்தன;தவிர,சபையர்,எமரால்டு,புளுடையமண்டு என்ற பெயர்களில் திரையரங்குகளும் நடத்திவந்தன.இருப்பினும்,இந்த நிறுவனக்குழுமம் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்ன?
சென்னை சபையர் தியேட்டர் இருந்த இடத்தில் ஒரு மகானின் ஜீவசமாதி இருக்கிறது.அந்த மகானுடைய ஜீவசமாதியின் மேல் கோவில் மட்டுமே இருக்க வேண்டும்;மாறாக விகம்சி நிறுவனக்குழுமம் அதற்கு நேர்மாறான தொழிலை தனது பணபலத்தால் நடத்தியது.விளைவு? அந்த நிறுவனக்குழுமமே வீழ்ச்சியடைந்தது.சபையர் தியேட்டரை விற்கும் நிலைக்கு வந்துவிட்டது.

சபையர் தியேட்டரை தற்போதைய அ.இ.அ.தி.மு.கட்சியானது  வாங்கியிருக்கிறது.அக்கட்சிக்கு ஒரு ஆன்மீக வேண்டுகோள்:தயவு  செய்து சபையர் தியேட்டர் இருக்கும் இடத்தில்  ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து,கோவில் அமைக்க வேண்டும்.

நன்றி:சித்தர் களஞ்சியம் பக்கம்232.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment