பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;(இந்த அரிய தகவலை நமக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்து சொன்னவர் எனது ஜோதிட மானசீக குரு அமரர்.பி.எஸ்.பி.ஐயா அவர்கள்;இவர் சென்னையில் அஞ்சல் வழி ஜோதிடப் பயிற்சிக்கல்லூரியை நடத்திவருகிறார்.)இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;
விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்
திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.
சாத்தூர்
மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தட்சிணாமூர்த்தி சுவாமி
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.
சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
பொன்னம்பல சுவாமி
அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.
கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
சிவானந்த ஜோதி
மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.
கோட்டூர்
கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.
வடக்கு நத்தம்
ஆறுமுகச்சாமி
அருப்புக்கோட்டையிலிருந்து பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
துத்தி நத்தம்
சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.
பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
அழகாபுரி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ரெட்டியபட்டி
ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.
ராஜபாளையம்
குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.
குமராண்டி சுவாமி
ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.
திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
கொம்புச்சாமி
ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில் அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
பாலத்தடி சுவாமி
ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
அருணாச்சலேஸ்வரர்
ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில் சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.
பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.
சென்னிகுளம்
அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
ராஜபாளையம் சத்திரப்பட்டி
சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.
அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.
அயனாவரம்
ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.
பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.
ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.
மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment