Monday, February 27, 2012

சித்தர்களைப் பற்றிய ஒரு முழுமையான அனுபவ நூல்:சித்தர்களஞ்சியம்




சித்தர்களை தரிசித்துவிட்டால்,நமது அத்தனை கர்மவினைகளும் தீர்ந்துவிடும் என்பது நமது நம்பிக்கை ஆகும்;ஆனால்,நடைமுறையில் இந்த நம்பிக்கையானது முற்றிலும் பொய் என்பதை ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,நமது ஆன்மீக மானசீக குருவுமான மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தனது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.சித்தர்களில் யாராவது ஒருவரை நாம் பார்க்கவிரும்பினாலும்,நமக்கு பூர்வபுண்ணியம் இருந்தால் அந்த சித்தரை தரிசிக்க செய்ய வேண்டிய வழிபாட்டுமுறை தெரியவரும்;அதன்பிறகு,நமது மன உறுதி,ஆர்வம்,சிரத்தை,தினசரி வழிபாடு போன்றவற்றால் நாம் விரும்பும் சித்தரை தரிசிக்கமுடியும்.இப்படி தாம் விரும்பும் சித்தரை தரிசித்தவர்கள் ஏராளமானவர்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.பெரும்பாலும் அகத்தியர்,காகபுஜண்டர்,மச்சமுனி,போகர் முதலான 18 சித்தர்களை தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பலர் தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சித்தர்களை நேரில் தரிசித்தாலும்,அவர்கள் மனது வைத்தால் மட்டுமே நமது கர்மவினைகளைத் தீர்க்க முடியும்.இல்லாவிட்டால்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்;நாம் தான் அடிக்கடி அன்னதானம்,அண்ணாமலை கிரிவலம்,ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவி,யாருக்கும் எந்த கெடுதியும் செய்யாமல் இருத்தல்,ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விதானம்(பள்ளி மற்றும் கல்லூரி பீஸ் கட்டுதல்,நோட்டுக்கள் புத்தகங்கள் வாங்கித்தருதல்),ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஐந்துவருடங்கள் வரையாவது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் மூன்று வருடங்கள் வரையாவது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தல் போன்றவற்றால் நமது கர்மவினையைக் கரைக்கமுடியும்.
இந்த புத்தகத்தின் தலைப்பான சித்தர்கள் களஞ்சியம் என்பதற்கேற்ப நிஜமாகவே சித்தர்களைப் பற்றி வேறு எந்த புத்தகங்களிலும் இல்லாத அளவுக்கு ஏராளமான சித்தர்களைப் பற்றிய உண்மைகள் கொட்டிக் கிடக்கின்றன.சித்தர் மந்திரங்கள்,சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்கள்,சித்தர்களின் வாழ்வியல்,சித்தர்களின் பூசை முறைகளும் மந்திர உச்சாடன முறைகளும்,ஒரே நேரத்தில் 200 விஷயங்களில் கவனம் செலுத்தும் கவனக்கலையானது சித்தர்களின் திறமைகளில் ஒன்று,வஜ்ரோலி முத்திரை,சித்தர்களின் இறவா நிலை தரும் மூவகை வழிகள்,ஓங்காரம் என்ற பிரணவம்,சித்தர்களைப் பற்றிய அனுபவ உண்மைகளை ஆன்மீகச் சாறாக தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பிழிந்து தந்திருக்கிறார் யோகி கைலாஷ்நாத்.
வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்,4/2,சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்),தி.நகர்,சென்னை-17.தொலைபேசி:044 24314347. இணையதளம் இருக்கிறது.விலை.ரூ.160/-

இந்த புத்தகம் ,சித்தர்களைப் பற்றிய உங்களின் தேடலுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.                         
இவரது ஆசிரமம் முகவரி:விஷ்ராந்தி யோகா(அமைதி மற்றும் சர்வமத சங்கமம்),பதஞ்சலி யோக மந்திரம் ட்ரஸ்ட்,சித்தர் கோவில்,ஸ்ரீசிவலோகம்,கோம்பைப்பட்டி,கணக்கன்பட்டி-அஞ்சல்,பழனி தாலுகா,திண்டுக்கல் மாவட்டம்-624613.

ஓம்சிவசிவஓம்



No comments:

Post a Comment