Monday, February 6, 2012

தைப்பூசத்தன்று(7.2.12 செவ்வாய்) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அளவற்ற சிவகடாட்சம் பெறுவோம்!!!


பவுர்ணமிகளில் மிகவும் புனிதமும்,அளவற்ற தெய்வீக சக்தியையும் அள்ளித்தருவது பெரிய கார்த்திகை எனப்படும் கார்த்திகை மாத பவுர்ணமியும்; சந்திரன் ஆட்சிபெற்று,முழுபலம் பெறும் தைமாத பவுர்ணமியும் தான்!!! இதில் சந்திரன் உச்சமாகும் ரோகிணி நட்சத்திரத்தில் கூட பவுர்ணமி உருவாகுவதில்லை;ஆட்சி பெறும் பூசம் நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதே தைப்பூசம் ஆகும்.பலமிழந்த சூரியன் பலம்பெறும் மாதமான தை மாதத்தில்,சந்திரன் ஒளிமிகுந்த நட்சத்திரமான பூசத்தில் பவுர்ணமியாகப் பிரகாசிக்கிறார்.மிகவும் பிரமிக்கத் தக்க பவுர்ணமியே தைப்பூசம் ஆகும்.


இந்துக்காலக் கணக்குப்படி, வைவஸ்தய மன்வந்திரம்,கலியுகாதி 5112 ஆம் ஆண்டு,தமிழ் வருடம்  கர,தைமாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை (6.2.2012) மதியம் 1.24க்கு பூசம் நட்சத்திரம் உதயமாகி,மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.37க்கு நிறைவடைகிறது. பவுர்ணமி திதியானது,திங்கட்கிழமை பின்னிரவு(செவ்வாய்க்கிழமை வைகறை)4.19க்கு ஆரம்பமாகி,செவ்வாய்க்கிழமை பின்னிரவு(புதன்கிழமை வைகறை) 3.38க்கு நிறைவடைகிறது.இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவுதான் தை மாத பவுர்ணமி வருகிறது.


இந்த நாளில்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க மிகச் சிறந்த நேரங்கள்: 7.2.12 செவ்வாய்க்கிழமை காலை 5 முதல் 6 மணி வரை;மதியம் 12 முதல் 1 வரை;இரவு 7 முதல் 8 வரை;நள்ளிரவு 2 முதல் 3 வரை;இந்த நேரங்கள் சுபமான குரு ஓரைகள் ஆகும்.இந்த நேரங்களில் ஏதாவது ஒரு மணி நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நமக்கு மிகுந்த நன்மைகளைத் தரும்.
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது ஜாதகத்தில் இருக்கும் சகலவிதமான தோஷங்களும்,கர்மவினைகளும் அடியோடு விலகிவிடும் என்பது சத்தியம்.


இதுவரை நமது வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையாக இருந்தாலும்,எவ்வளவு இழிவானதாக இருந்தாலும்,எவ்வளவு சோகமுள்ளதாக இருந்தாலும்,எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் சரி! நமது தலைவிதியை நாமே தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக மாற்றிவிடமுடியும் என்பது சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.


ஓம்சிவசிவஓம்

6 comments:

  1. குரு ஹோரையில் ஜபிக்கமுடியாமல் போனால் பலன் கிடைக்காதா?
    பத்மநாபன் ஜோர்டான்

    ReplyDelete
  2. பத்மநாபன் அவரகளே! நமது பதிவுகளை ஆரம்பம் முதலே வாசித்துவந்தீர்கள் எனில்,உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.அது என்னவெனில்,இருப்பதிலேயே சிறப்பான ஆன்மீக வழிகாட்டுதலே ஆன்மீகக்கடலின் நோக்கம் ஆகும்.குரு ஓரையில் ஜபித்தால்,விரைவான,அளப்பரிய,ஆழ்ந்த பலன்கள் கிடைக்கும்.குரு ஓரையில் ஜபிக்க முடியாதவர்கள் எப்போதும் ஜபிக்கலாம்.தப்பில்லை;தோஷமுமில்லை;

    ReplyDelete
  3. Chanted "OM siva siva om" in the temple, whn abhishekam was going on for Lord Muruga. felt nice.


    shashikala

    ReplyDelete
  4. sir,

    just wanted to know whether we can chant "om siva siva om" while doing household work - like cooking etc.
    also during Mahasivarathri, i go to one house for doing seva..they have Pooja in their house, throught the day.so while doing seva, can we chant?
    pl clarify.

    thx

    shashikala

    ReplyDelete
  5. sir,
    one more clarification:- everyday when u chant "om siva siva om" mor/eve, it should be done only during "Guru Horai".. ?

    shashikala

    ReplyDelete