மனதில் அச்சம் ஏற்படுவது எதனால்?
செவ்வாய், 8 ஜூன் 2010( 14:55 IST )
தமிழ்.வெப்துனியா.காம்: தங்களுடைய மனதில் ஒருவிதமான அச்சம் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். எதைப்பற்றியாவது அந்த அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்காலத்தைப் பொறுத்த அச்சம் என்பது பொதுவானது. அப்படிப்பட்ட அச்சம் ஏன் வருகிறது. இதற்கு ஏதேனும் ஜோதிட தொடர்பு உண்டா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: இயல்பான இயக்கங்களில் கிரகங்கள் இருக்கும் போது மக்கள் மனதில் அச்சம் ஏற்படுவதில்லை. சூரியன் 1 மாதத்திற்கு ஒரு வீடு, செவ்வாய் என்றால் 40 நாட்களுக்கு ஒரு வீடு, சுக்ரன் 28 நாட்களுக்கு ஒரு வீடு, புதன் 18 நாட்களுக்கு ஒரு வீடு என்பது இந்த கிரகங்களின் இயல்பான இயக்கம்.
குரு பகவான் என்றால் ஒரு வருடத்திற்கு ஒரு வீடு. சனி பகவான் என்றால் இரண்டரை வருடத்திற்கு ஒரு வீடு. இது இயல்பான இயக்கம். ஆனால் சமீப காலமாக, ஏறக்குறைய ஒன்பதே கால் மாதமாக செவ்வாய் ஒரே வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு வக்கிரமாகிவிட்டார். செவ்வாய் இரத்தத்திற்குரிய கிரகம். இரத்தம் கெடும்போதோ, இரத்தத்தோட தன்மை மாறுபடும்போதே உடல்நிலை மாறும். அடுத்து உடம்பு நன்றாக இல்லாதபோது மனசு நன்றாக இருக்க முடியாது. எனவே மனதும் பேதலிக்கும், பாதிக்கும், கவலை கொள்வது போன்றதெல்லாம் உண்டாகும்.
குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒரு வீடு இருக்க வேண்டும். ஆனால் அவர் டிசம்பரில் மாறினார். மாறி உடனடியாக வக்ரம் அதிசாரம் என்று சொல்லிவிட்டு மே மாதத்தில் இருந்து அடுத்த வீட்டிற்குப் போய்விட்டார். இந்த மாதிரி கிரகங்களினுடைய இயல்பான இயக்க நிலை மாறுபட்டு வரும்போது மக்கள் மனதில் ஒரு அச்சம், பீதி, கவலை, அதாவது இனம் தெரியாத மனக் கவலை என்று சொல்வார்களே - என்னய்யா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய். ஒன்றுமில்லீங்க, என்னமோ போல இருக்கிறது என்று சொல்வார்கள் - அதுதான் கிரகங்கள் வக்கிரமாக இருப்பதன் விளைவு. வக்கிரமாக இருக்கும்போது எதிர்மறை சிந்தனைகள் வரும். ஒரு வில்லங்கமான ஆள், வக்கிரபுத்திக்காரன் என்று சொல்வோமே அதுதான். கிரகங்கள் வக்கிரமாகும் போது இதுபோன்ற சங்கடங்கள், சலனங்கள், முறையற்ற பாலுணர்வு, வக்கிர புத்தி, விபத்துகள் இதெல்லாம் உண்டாகும்.
நல்ல இடுகை. ஒருவருக்கு மெய்ஞானம், மோட்சம், ஆன்மீகம் போன்றவற்றில் நாட்டம் இருக்குமா, இருக்காதா? என அவர் ஜாதகத்தை பார்த்து கூற இயலுமா? அப்படி இருப்பின், யாருக்கெலாம் அது வாய்க்கும். விளக்கம் வேண்டும் அய்யா.
ReplyDeleteஒருவருக்கு மெய்ஞானம், மோட்சம்,ஆன்மீக நாட்டம் இவற்றில் ஆர்வம் இருக்குமா அல்லது கிடைக்குமா? என்பதை அவரவர் பிறந்த ஜாதகத்தினைப் பார்த்து, ஜோதிட ரீதியாகக் கணித்து உறுதிபடக் கூற முடியும்.
ReplyDeleteஇதையே ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்திலும் முதல் பக்கம் பாடலாகவே எழுதியிருக்கும்.
"ஜனனீ ஜன்ம சவுக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ, பூர்வ புண்யானம் லிக்யதே சுபஸ்ரீ ஜென்ம பத்ரிகா"- ஒரு மனிதன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கேற்ப அதன் பலனை அனுபவிக்கவே மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான்.