Friday, June 18, 2010

நன்றி:தமிழ் வெப்துனியா:-சீனர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து,தமிழக முன்னாள்முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை

‌‌‌சீன‌ர்களா‌ல் இல‌ங்க‌ை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆப‌த்து: ம‌த்‌திய அரசு‌க்கு ஜெயலலிதா எச்சரிக்கை
செ‌ன்னை, வெள்ளி, 18 ஜூன் 2010( 12:37 IST )

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதா‌ல் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான ஆபத்து காத்திருக்கிறது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுடன் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

3 comments:

  1. சீனாவின் நோக்கம் தான் என்ன?

    ReplyDelete
  2. சீனாவானது அடுத்த உலக வல்லரசாக ஆசைப்படுகிறது.அது தவறில்லை.ஆனால்,அது உலக வல்லரசாவதற்கு இந்தியாவாகிய நாம் தடையாக இருப்போம் என சந்தேகப்படுகிறது.ஏனெனில்,உலக அரசியலில் ஜனநாயகத்துடன் கூடிய ஒரே நாடு நாம்தான்.

    அமெரிக்கா கூட ஜனநாயக நாடாக இருந்தாலும்,அதன் நோக்கங்கள் ஆயுத விற்பனையும்,கிறிஸ்தவ மதமாற்றத்தால் உலகம் முழுவதையும் கிறிஸ்தவ பூமியாக்குவதுதான்.
    தவிர, உலகில் அமெரிக்கா எதிர்க்காத நாடுகளே கிடையாது.அமெரிக்காவின் உளவு வலிமையால் எல்லா நாடுகளும் இன்றுவரை பாதிக்கப்பட்டுவருகின்றன.
    நமது நாட்டில், பிரமோத் மகாஜன் போன்ற சிறந்த இளம்தலைவர்களைக் கொன்றது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.,தான்.
    தவிர, உலக அரசியலில் அசைக்க முடியாத பங்காக அமெரிக்கா இருக்கிறது.ஜோதிடப்படியும்,அரசியல் பொருளாதார ரீதியாகவும் 2011 ஆம் ஆண்டுடன் அமெரிக்கா உலக வல்லரசு என்ற அந்தஸ்த்தை இழந்துவிடும் என்பது அமெரிக்காவுக்கே தெரியும்.(


    சீனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியாக ஒன்றுபட்டால்,டாலரும் யூரோவும் செல்லாக்காசாகிவிடும்.இதை தெளிவாக உணர்ந்துகொண்ட அமெரிக்காவும்,ஐரோப்பாவும் எப்படியாவது சீனாவும் இந்தியாவும் சண்டையிடாதா ? என நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உள்ளடி அரசியலில் ஈடுபடுகின்றன.

    அதைவிட கொடூரமானது சீனாவின் உலக வல்லரசு ஆசை.
    இந்தியாவாகிய நாமே ஒரு இத்தாலிக்கரியின் அடிமையாக இருக்கிறோம்.இந்துமத விழிப்புணர்வு இல்லாவிட்டால்,இந்த இழிநிலை தொடரும்.என்ன செய்வது நமது இந்துதர்மம் பரந்த மனப்பான்மை,எல்லோரையும் வரவேற்றல்,விட்டுக்கொடுத்தல் அதன் மூலம் சமுதாய அமைதி,தேச ஒற்றுமை என வலியுறுத்தியதால்,இது வாடிகனுக்கு வசதியாகப் போய்விட்டது.
    இந்துதர்மத்தின் விசாலநோக்கும்,அமெரிக்காவின் நாசகார செயல்பாடும் சீனாவுக்கு மிகவும் உகந்ததாக மாறிவிட்டது.சீனாவின் திட்டம் என்ன என்பதை நமது ஆன்மீகக் கடலில் பலமுறை விரிவாக எழுதுவிட்டோம்.

    சீனாவின் வக்கிரமான கொடூரமான ஆசையைப் பற்றி இந்தியாவில் எந்த பத்திரிகையும் எழுதாது.ஏனெனில்,எல்லா பத்திரிகையாளர்களும் கம்யூனிஸ்டுகள்.பிறகு எப்படி எழுதுவார்கள்.
    உலக அரசியலில் இனி என்ன நடக்கும்? என்ற தலைப்பில் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் நமது ஆன்மீகக் கடலில் எழுதியுள்ளோம்.படித்தால் உங்களுக்குப் புரியும்.

    ReplyDelete
  3. The Indian Congress leaders are scared to China - China's only interest is to make India a beggar nation - Every Indian should realise this and take appropriate steps to safeguard India.

    ReplyDelete