Monday, June 28, 2010

இந்துமதம் எதனால் சீரழிகிறது? ஓஷோவின் பார்வையில்


கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.

சிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"

20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.

ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.

இரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.

நமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.

200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.

அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.

நன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ
வெளியீடு,கண்ண்தாசன் பதிப்பகம்,சென்னை.

இந்த உணர்வுடன் தான் நமது ஆன்மீகக் கடல் உருவாக்கப்பட்டது.இந்த உணர்வுடைய இந்துக்கள்,முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,சீக்கியர்கள்,பார்சிகள் அனைவரையும் நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
இந்த உணர்வை நமது பாரத தேசமெங்கும் பரப்புவதே எனது வேலை.இந்த உணர்வு பாரதம் முழுவதும் பரவினால்,நாம் ஒவ்வொருவரும் செல்வ வளம் மிக்கவர்களாக மாறுவோம்.இந்த உணர்வுதான் நமது மேதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு இருக்கிறது.இந்த உணர்வுதான் என்னை சுயச்சார்புள்ளவனாக மாற்றியுள்ளது.இந்த உணர்வை நான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாம்களில் பெற்றேன்.

இந்த உணர்வை அரசியல் துறையில் பரப்புவதே பாரதிய ஜனதாக்கட்சி,சிவசேனாக்களின் வேலை.
இந்த உணர்வை தொழிற்சங்கத்துறையில் பரப்புவதே பாரதிய மஸ்தூர் சங்கத்தின் வேலை.
இந்த உணர்வை கல்வித்துறையில் பரப்புவதே வித்யா பாரதி,சிவானந்த வித்யாலயா,ராமகிருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,சாரதா வித்யா பீடம் இவற்றின் வேலை.
இந்த உணர்வை மாணவர் சங்கத்தில் பரப்புவதே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் வேலை.
இந்த உணர்வை கிராமக்கோவில் பூசாரிகளிடம் பரப்புவதே கிராமக்கோவில்பூசாரிகள் பேரவையின் வேலை.
இந்த உணர்வை தமிழ்நாட்டு இந்துக்களிடம் பரப்புவதே இந்துமுன்னணியின் வேலை.
இந்த உணர்வை கோவில்கள்,அதைச் சார்ந்து இயங்கும் ஆன்மீக மடங்களிடம்,அதன் பக்தர்கள்,மடாதிபதிகளிடம் பரப்புவதே விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வேலை.
இந்த உணர்வை பத்திரிகையுலகில் பரப்புவதே ஆர்கனிசர்,விஜயபாரதம்,இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு,பசுத்தாய் போன்ற பத்திரிகைகளின் வேலை.
இந்த உணர்வை வலைப்பூ நடத்துபவ்ர்கள்,வாசிப்பவர்களிடையே பரப்புவது நமது ஆன்மீகக் கடலின் வேலை.

2 comments:

  1. சிதைந்து கொன்டு வரும் நமது கலாச்சாரம் விழிப்படயசெய்ய கடக்கவேண்டிய பாதை மிகவும் கடினமானது. ஒவொரு தனிமனித மனமும் இதை பற்றி சிந்திக்கவேண்டும். கஷ்டம் வரும்போது தான் இறைவனை தேடியும் ஜாதகம் பாக்கவும் செல்வார்கள். அப்போதும் இவர்கள் கடைபிடிக்கவேண்டிய முறைகளையும் பின்பற்றமாட்டர்கள். கஷ்டப்படாமல் பலன் அடையவேண்டும் என்ற மனநிலையும் மேலைநாட்டு தாகமும் தான் இதற்க்கு காரணம். இவை மாறும் காலம் நேரிங்கிவிட்டது. அரசாங்கத்தின் ஒருதலை பட்சமான போக்கும் இதற்க்கு ஓர் காரணம். கோவில்களில் வசூல் ஆகும் பணம் எந்த ஒரு நன்மைக்கும் கிடைக்காமல் அரசாங்கம் எடுத்துகொள்கிறது அது போல் மற்ற மதங்களின் மசுதிகளிலோ, சர்ச் போன்ற தேவாலயங்களில் அரசாங்கம் கைவைப்பதில்லை. ஏன் இந்த பாகுபாடு?. நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் சிந்திக்கவில்லை, தவறான கண்ணோட்டத்தில் சுயநல நோக்கத்திலும் நாடும் நாட்டு மக்களும் செல்கின்றனர். விழிப்புணர்வு வந்தாலும் மக்கள் அடிபட்டால் தான் திருந்துகின்றனர். இந்து மக்களுக்கு உரிய குணமான ஆன்மீக ஒழுக்கமும், மனிதாபிமான எண்ணமும், பொது நலநோக்கும், சுயசிந்தனையும் என்று வருமோ? அந்தநாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    தங்களின் பதிவுகள் மக்கள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    குருஅருளை நாடி,
    ச.விஜயராகவன், கத்தார்.

    ReplyDelete
  2. நான் பிரதமரனால் என்ன செய்வென் தெரியுமா?
    முதல் வேலையே ஒரே நாளில் கேமிரா செல்போன்களை தடை செய்வேன்.ஒவ்வொரு மாநிலமாக ஒரு நாள் வீதம் 35 நாட்களில் அனைத்துக் கேமிரா செல்போன்களையும் பறிமுதல் செய்வேன்.இன்னும் நிறைய்ய திட்டம் இருக்கிறது.இதையும் அரசியல் கட்சிகள் சொந்த ஐடியாவாக ஆக்கிவிடும். மற்றவை நான் ஆட்சிக்கு வரும்போது.(நான் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கவில்லை)

    ReplyDelete