Tuesday, June 8, 2010

குருபூர்ணிமாவன்று புண்ணியம் தேடுவோம்


ஆனிமாதம் வரும் பவுர்ணமியே குருபூர்ணிமா ஆகும்.வேதங்களை தொகுத்த வியாஸர் மகரிஷியின் பிறந்த நாள் இதுதான்.இந்த விக்ருதி வருடம் ஆனிமாதம் பவுர்ணமியானது 25.6.2010 வெள்ளி மாலை 5.15க்குத் துவங்கி,26.6..2010 சனிக்கிழமை மாலை 5.46க்கு நிறைவடைகிறது.
கடவுளின் அருளைப் பெறவும், கலிகாலத்திலும் மனிதன் நிம்மதியாக வாழவும், 18 புராணங்களையும்,மகாபாரத இதிகாசத்தையும் இயற்றியவர் வேதவியாசர் ஆவார்.இவரையும்,நமக்கு எழுத்தறிவித்த ஆசிரியர்களையும்,ஆதிகுருநாதர்கள் எனப்படும் 8 மூல குருமார்களையும் பாதந்தொட்டு வணங்கி வழிபடவேண்டிய நாள் இதுதான்.
அத்திரி மகரிஷி, புவஸ்திய மகரிஷி, பிருகு மகரிஷி, வசிஸ்ட மகரிஷி, ஆஸ்கீரஸ மகரிஷி, கவுதம மகரிஷி, மரீசி மகரிஷி, ஸ்ரீமாங்கல்ய மகரிஷி ஆகிய இந்த எட்டுப்பேரும்தான் இந்த பிரபஞ்சத்தின் மூல குருநாதர்கள் ஆவர்.
இவர்களை பின்வரும் வேதவியாசரின் தியான மந்திரத்தினால் பவுர்ணமியன்று ஜபித்து,வழிபட்டு,அவர்களின் ஆசிபெற்று நிம்மதியாக வாழ்வோம்.

வ்யாஸஸம் வஸிஷ்ட நப்தாரம்
சக்தேஹ பவுத்ரம் அகஸ்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸீகதாதம் தபோதிதிம்

No comments:

Post a Comment