Tuesday, June 22, 2010

வேகமாக சம்பாதிக்கும் பணம் வேகமாகப் போய்விடும்


மதுரைக்குத் தெற்கே ஒரு ஊர்.அங்கே ஒரு புரோட்டாக் கடையில் புரோட்டாமாஸ்டர்.அவருக்கு இரண்டு மகள்கள்.முதல் மகளின் வயது 12,இரண்டாம் மகளின் வயது 8.சுமார் 11 வருடங்களாக அந்த புரோட்டா மாஸ்டர் லாட்டரி எடுக்கும் பழக்கம் வைத்திருந்தார்.
முதன் முதலில் அவருக்கு இரண்டரை கோடி ரூபாய்கள் லாட்டரியில் பரிசு விழுந்தது.வரி போக அவருக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் கிடைத்தது.
தினமும் அவர் குடிப்பார்;லாட்டரி வாங்குவார்;வீட்டுக்கு செலவுக்குப் பணம் தர மாட்டார்.மனைவி கூலி வேலைக்குப் போய் மகள்களை படிக்க வைக்கும்.

லாட்டரியில் பரிசு விழுந்ததும்,வேலையை விட்டார்.பரிசு விழுந்ததும்,ரோட்டில் போனவனெல்லாம் இவருக்கு உறவினரானான்.தனது 60 நண்பர்களுடன் குற்றாலம்,திருச்செந்தூர்,கன்னியாகுமரி,சென்னை என சுற்றினார்.வெறும் 100நாள்தான்.மீண்டும்,அதே புரோட்டாக்கடை;அதே புரோட்டா மாஸ்டர்.

எனது நண்பர் ஒருவர்.அவரது சம்பளமே மாதம்ரூ 2000/-தான்.2007 ஆம் ஆண்டில் அவர் வாரச் சந்தாவில் உறுப்பினரானார்.அவரும் அவரது மனைவியும் ஆளுக்கு ரூ.25/- ஒவ்வொரு ஞாயிறும் சேமித்து சந்தாவில் ரூ.50/-ஐ போட்டனர்.ஒராண்டில் சுமார் 3000/-பணம் திரண்டது.
சந்தா முடிவடைந்ததும்,கணவன் மனைவிக்குள் அந்த 3000 ஐ என்ன செய்வது என வாக்குவாதம் செய்தனர்.
மனைவி கலர் டிவிதான் தேவை என சொல்ல,கணவனோ செல்போன் தான் தேவை என மறுக்க,இருவரும் சேர்ந்து ஒருமுடிவு செய்தனர்.
இந்த 3000 ரூபாயை வங்கியில் போட்டு வைப்போம்;ஒரு மாதம் கழித்து எது அவசியம் என நினைக்கிறோமோ அதை வாங்குவோம் என்பது அந்த தம்பதியின் தீர்மானம்.
ஒரு மாதம் கழிந்ததும்,செல் போனின் முக்கியத்துவம் உணர்ந்தனர்.இருவருமே செல்போன் கடைக்குச் சென்று 3 வருடம் இன் கம்மிங் வசதியுள்ள செல்போன் வாங்கினர்.
இந்த அனுபவம் பணத்தை எப்படிக் கையாளவேண்டும்? என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

No comments:

Post a Comment