எனது அப்பாவின் குணம் எனக்கும் இருக்குமில்லையா? நிச்சயம் இருக்கும்.இருந்தது.இந்த நிலையில் எனது இரண்டாவது குழந்தையின் பிறப்பு என்னை,எனது வீம்பான மனநிலையை,எனது முன்கோபத்தை,எனது கெட்ட குணங்களை அழித்துவிட்டது.8.8.2004 முதல் ஒரு யதார்த்தமான சென் டிமெண்ட் நிகழ்ச்சியால் பத்திரகாளியம்மன் வழிபாட்டினை தினமும் செய்யத்துவங்கினேன்.அன்று முதல் எனது வாழ்க்கையானது பத்திரகாளியின் அருளுக்கும் அமிழ்ந்துவிட்டது.பாவம் செய்வதை கிட்டத்தட்ட 80% குறைந்தே போனது.
எனது இரண்டாவது குழந்தையின் பிறப்பினால்,அதற்கு வந்த கேது மகா திசையானது என்னை ஞான மார்க்கத்தில் திருப்பிவிட்டது.அந்த ஞான மார்க்கத்தின் வெளிப்பாடே இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ.
ஒரு மாதத்திற்கு ரூ100/-க்கு ஜோதிட இதழ்கள்வாங்கி வருகிறேன்.அதில் வெளிவரும் ஜோதிட ஆராய்ச்சிக்கட்டுரைகளை எனது ஜோதிட வாடிக்கையாளர்களின் ஜாதகங்களோடு ஒப்பிட்டுப்பார்த்ததின் விளைவே இந்த கட்டுரை.
எல்லோருக்கும் பேராசை வந்துவிட்டது.செல்போன்,இணையம்,வேகமான வாழ்க்கை,உலக மயமாக்கல் இவற்றின் விளைவுகள்தான் மணவிலக்குகள்,பணத்துக்காக விபச்சாரம் கூட செய்வது.ஏமாற்றிப்பிழைப்பது,
முடிந்தவரையிலும் யாருக்கும் தீங்குதராமல் வாழப்பழகுங்கள்;
முடிந்தவரையிலும் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்க்கைப்பாதையை ஓட்டப்பாருங்கள்;
முடிந்தவரையிலும் அன்னதானம், மந்திரங்களை ஜபித்தல்,ஆடை தானம் செய்தல்,திரு வண்ணாமலையில் கிரிவலம் செல்லுதல்,பக்கத்துவீட்டினருக்கு தொந்தரவு தராமலிருத்தல், பிறருக்கு பிரதிபலன் இல்லாமல் உதவுதல்,பிறரது மனம் நோகாமல் பேசுதல் என்று வாழ்ந்தாலே போதுமானது.
மாமியார்கள் தனது மகனையும் மருமகளையும் பிரித்துவைத்து வாழ்வது மஹாபாவம்;
பல மாமியார்கள் தனது மகளைத் திருமணம் செய்வித்து, வேண்டுமென்றே தனது மருமகனிடமிருந்து பிரித்து, (பெற்ற மகளையே) விபச்சாரத்திற்கு தள்ளும் கொடூரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
ஜோதிடர்களாக இருப்பவர்கள் மற்றவர்களின் ஜோதிட அந்தரங்கங்களை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது.ஜோதிட ஆய்விற்கு பெயர்,ஊர் சொல்லாமல் மட்டும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
கோவில்,ஆன்மீகம்,அறக்கட்டளை,கோவில்களில் அரசுப்பணியில் இருப்போர் சர்வ ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் 16 தலைமுறைகள் பாதிக்கப்படும்.எச்சரிக்கை!
மிகப் பிரமாதம், உங்களது ஜோதிட அனுபவம் எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. நன்றி.
ReplyDeleteDear sir,
ReplyDeleteYou are doing fentastic job for the welfare of the soceity thru this blog.Your thoughts and ideas are greatful.Continue your service and GOD bless you.
vazhga valamudan. ungaludaya padivu indraya samugathirku thevayana vizhayangalai nermayaga solgirathu. arumai.
ReplyDeleteயாருக்கெல்லாம் குரு நீசம் ஆகும்? விளக்கம் கூறுங்கள்.
ReplyDeleteமகர ராசியை குரு கடக்கும் காலமே குருவின் நீச காலம்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சம்பவம் நடைபெறும்.
ReplyDelete