சீக்கிரமே புண்ணியம் சேர சில வழிமுறைகள்
1.விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நமது ஜோதிடக்கலை.(எல்லாத் துறையிலும் போலிகள் இருப்பதுபோல் ஜோதிடத்துறையிலும் போலிகள் இருக்கிறார்கள்.அவர்களால்தான் ஜோதிடத்துறைக்கே கெட்டப்பெயர் உருவாகிறது)
கிரகங்களின் சுழற்சியை பக்திமயமாக சாதாரணமக்களுக்கு உணர்த்தவே இந்துஜோதிடம் உண்டானது.ஜோதிடத்தின் பிறப்பிடம் தமிழ்நாடுதான்.
தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சூரியக்கிரகணம்,சந்திரக்கிரகணம்,தினசரி சூரிய உதயத்திற்கு முந்தைய 90 நிமிடங்களில் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
தொடர்ச்சியான மந்திர ஜபம் நமது,நமது முற்பிறவி,நமது இப்பிறவி,நமது முன்னோர்களின் பாவத்தைக் கரைத்துவிடும்.
நமது பூமியில் 7,00,00,000 (ஏழு கோடி) மந்திரங்கள் இருக்கின்றன.இதில் வாழ்க வளமுடன் என்பதும் ஒரு மந்திரமே!திருப்பாவை,திருவெம்பாவை,திருமந்திரம்,
சமஸ்க்ருத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,கந்த சஷ்டிக் கவசம் என ஏராளமான மந்திரங்கள் இருக்கின்றன.இதில் ஏதாவது ஒன்று அல்லது ஒரு சில மந்திரங்களை வரிசைப் படுத்தி ஜபித்துக்கொண்டே இருக்கவும்.
2.விழுப்புரம் அருகிலிருக்கும் திரு அண்ணாலைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலிருக்கும் சதுரகிரிக்கும் அடிக்கடி பயணம் செய்யவும்.கோவிலின் உட்பிரகாரத்தில் ஏதாவது ஒரு மந்திரம் ஜபிக்கலாம்;அல்லது அன்னதானம்,ஆடை தானம் செய்யவேண்டும்.
3.பவுர்ணமி, அமாவாசை,கிரகண நேரங்களில் கடலோரம் இருக்கும் கோவில் நகரங்களுக்கு முதல் நாளே வந்துவிடவும்.வந்து உரிய நாளில் காலை 4.30 முதல் சூரிய உதயம் வரையிலும் ஏதாவது ஒரு மந்திரத்தை (இடுப்பளவு கடலில் நின்று,மூன்றுமுறை மூழ்கிவிட்டு) 108,1008,10,008,1,00,008 முறை ஜபிக்கவும்.
4.அனாதை இல்லங்களில் அன்னதானத்துக்கு பணம் தருவதோடு, உங்கள் பணத்தைச் செலவிடும் நாளில் நீங்கள் அங்கே சென்று நீங்களே உணவு பரிமாறுவது மிக நன்று.
5.உங்கள் ஜாதியில் அல்லது ஊரில் இருக்கும் ஏழை மற்றும்/அல்லது அனாதை மாணவன்/மாணவிக்கு பாலிடெக்னிக்/பட்டப்படிப்பு வரையிலும் படிக்க வைப்பது.
6.ஏழை/அனாதைப் பெண்ணுக்கு உங்கள் சொந்தச் செலவில் திருமணம் செய்து வைப்பது.
7.உங்கள் ஊரின் அருகில் இருக்கும்/ஊருக்குள் இருக்கும் பாழடைந்த கோவிலை தத்தெடுத்து,அங்கே ஒரு வேளை பூஜை நடக்க பண உதவி செய்வது.
8.இலவசமாக ரத்ததானம் செய்வது, கண் தானம் செய்வது,உறுப்புதானம் செய்வது.
9.உங்கள் உறவுகள்,நட்புக்களிடம் அடிக்கடி கோபப் படாமலிருப்பது.
10.உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு தேவைப்படும் போது ஆறுதல் சொல்லுவது
11.சுய முன்னேற்றக் கருத்தரங்கங்கள் உங்கள் பள்ளியில் உங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்வது.
12.இலவசமாக ஐ.டி.ஐ.நடத்துவது
13.மாநிலத்திலும்,உங்கள் மாவட்டத்திலும் 3,4,5 ஆம் இடங்களைப் பிடித்த 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு அடுத்த மேற்படிப்பை படிப்பதற்கு முழு உதவி செய்வது.
14.தினமும் ஒரு மரக்கன்று நடுவது.
15.உங்கள் பகுதி வயதான ஆதரவற்ற தம்பதி, ஆண் பெண்ணுக்கு முதியோர் இல்லத்தில் இடம் வாங்கித் தந்து அவர்களது மாதாந்திர பராமரிப்புச்செலவை ஏற்றுக்கொள்ளுவது.
16.தாழ்த்தப்பட்ட பகுதிகளில் இலவச ஸ்போக்கன் ஆங்கிலம் விடுமுறை நாட்களில் பயிற்சியளிப்பது, மனதத்துவ முன்னேற்ற கருத்தரங்கம் நடத்துவது.
அவர்களின் வட்டார்த்திருவிழாக்களில் மரக்கன்றுகளை அவர்களைக் கொண்டே நடச்செய்வது.
17.புதிய நகர்ப்பகுதிகளில் விநாயகர் கோவில்களை நிறுவுவது; மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது.
18.யாருக்கும், எப்போதும்,எந்த சூழ்நிலையிலும் மனதாலும், உடலாலும் தீங்கு தராமலிருப்பது.பிறரால் வர இருக்கும் தீங்கினைத் தடுப்பது.
19.உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருப்பது.உங்கள் பெற்றோரிடம் அன்பாக நடந்துகொள்ளுவது.
அருமை
ReplyDeleteஇவற்றை வாசகர்கள் அறியச்செய்வதும் பெரிய புண்ணியம் தான்.
ReplyDeletewe have to say truth even in an uncontrolled conditions
ReplyDeletewe have to obey our parents
ReplyDelete