Friday, June 4, 2010

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகம் சொல்லும் ஜோதிட நிஜங்களும்

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகமும்

இந்தியாவின் பிறந்த ராசி கடக ராசியாகும்.கடக ராசிக்கு தற்போது ஏழரைச்சனி 26.6.2009 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. நவம்பர் 2011 வரை கடகராசிக்கு 3 ஆம் இடத்தில் சனி நிற்கிறார்.இதனால்,நவம்பர் 2011 வரை இந்தியாவின் வளர்ச்சி,ஒளி வேகத்தில்! (விநாடிக்கு 3,00,000 கி.மீ)இருக்கும்.
அதே சமயம்,நவம்பர் 2011 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சனிபகவான் துலாம் ராசியினை கடக்கிறார்.சனியைப் பொறுத்தவரையிலும், சனியின் பார்வைகள் கொடூரமானது. சனி தான் இருக்குமிடத்திலிருந்து 3,7,10 ஆம் இடங்களை(ராசிகளை) பார்க்கிறார்.இதில் 10 ஆம் பார்வை முழுப்பார்வையாகும்.

நவம்பர் 2011 முதல் துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சியானதிலிருந்து, சனி தனது 10 ஆம் பார்வையாக முழுப் பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.இந்தப் பார்வையால் கடகராசிக்காரர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டி,நிம்மதியின்றி தவித்தாக வேண்டும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அப்போது போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஆக, அப்படி நடப்பதற்கான அறிகுறியாகத் தான் சீனா முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் இந்தியாவைச் சுற்றிலும் இருக்கும் நாடுகளை தனது அரசியல் நோக்கத்திற்கு வளைத்துவருகிறது.

முதலாவதாக,அந்தமான் தீவுகளுக்கும் மியான்மர்(பர்மாவுக்கும்) இடையில் பர்மாவுக்குச் சொந்தமான ஒரு தீவை சீனா 99 வருடக் குத்தகைக்கு எடுத்து,அதை ராணுவத் தளமாக மாற்றியுள்ளது.
அடுத்ததாக இந்தியா மீது மதத்தின் பெயரால் நிழல் யுத்தம் நடத்தும் நம்ம குட்டி பங்காளி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தனது சொந்த துறைமுகமாகவே மாற்றிவிட்டது சீனா.
இந்து மகா சமுத்திரத்தின் கண்ணீர்த்துளியான இலங்கையில் சீனாவின் ஆதரவு அரசாங்கத்தால், திருகோணமலையையும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் கச்சத்தீவையும் சீனா தன்வசப்படுத்திவிட்டது.
இலங்கை தனது நாட்டின் சீரமைப்பிற்காக உலக நாடுகளிடம் வாங்கியுள்ள மொத்தக் கடன் 3,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.அதே அளவுத் தொகையை சீனா மட்டும் இலங்கை அரசுக்குக் கொடுத்து,கச்சத்தீவை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் அமைதி தேசமான திபத்,இந்தியாவை தனது குருவாகவும்,நட்பு நாடாகவும் நம்பியிருக்கிறது. புத்தமதத்தை தனது தேசியமாக வைத்திருக்கும் திபத்தை 1950களிலேயே சீனா ஆக்கிரமித்துவிட்டது.இந்தியாவாகிய நாம் இதை ஒரு மரியாதைக்குக் கூட கண்டிக்கவில்லை;இன்று, திபத்தை தனது மாநிலங்களில் ஒன்றாகவே சீனா மாற்றிவிட்டது.திபத்தில் சீனர்களின் குடியிருப்பை பரவலாக்கிக் கொண்டே போவதுடன், 22 விமான தளங்களை அமைத்திருக்கிறது.
சுறுசுறுப்புடன் உலகின் ஒரே இந்துதேசமான நேபாளத்தில் அரசியல் சாதுரியத்துடன் தனது மார்க்ஸிஸ்ட் அரசாங்கமாக மாற்றியதுடன்,இந்துதேசம் என்ற அடையாளத்தையும் அழித்துவிட்டது.
அடுத்த கட்டமாக, இந்தியாவில் நக்சலைட்டுகள் பல மடங்கு பலம் பெற்று, இந்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல்,இந்தியாவின் மத்திய அரசு இதுபற்றி என்ன எதிர் நடவடிக்கை எடுத்திருக்கின்றது? என்பதைப் பற்றி தகவல் வெளியிடுவதில்லை.
சீனாவானது அருணாச்சலப்பிரதேசம்,நாகலாந்து பகுதிகளைக் கைப்பற்றும் எண்ணத்திலிருக்கிறது.

சீனாவின் ராணுவ ஆலோசகர்கள்,இந்தியாவை 37 துண்டுகளாக்கி,37 சிறு நாடுகளாக்கினால்,சீனாவின் உலக வல்லரசாகும் எண்ணத்தினை நிஜமாக்கிவிடலாம் என்றே கணக்குப் போடுகிறது.

எம்.எல்.எம்., என்ற போர்வையில் சீன நிறுவனங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இந்தியா முழுக்க தனது உளவாளிகளை நடமாட வைத்திருக்கிறது.
சீன எம்.எல்.எம்.நிறுவனங்கள், தனது வர்த்தகக் கூட்டாளிகளை(டிஸ்டிரிபியூட்டர்கள்) சீனாதான் சிறந்த நாடு என்று மூளைச்சலவை செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்துகொண்டே இருப்பதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போரைத் தூண்டிவிட, நயவஞ்சகமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இருநாடுகளும் சண்டையிட்டால், தனது ஆயுத வர்த்தகம் பல மடங்கு பெருகி, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளத்துடிக்கிறது.
சீனாவோ, திட்டமிட்டு செயல்பட்டு, அமெரிக்காவையை தனது நோக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அளவுக்கு வளைத்துவருகிறது.அமெரிக்காவில் அதிகமான முதலீடு செய்துள்ள முதல் நாடு சீனா.

ஆசியாவின் தலைமைக்கு ஆசைப்பட்ட சீனா, ரஷ்யாவின் பிரம்மாண்டத்தின் முன்னால் அமைதிகாத்தது 1990கள் வரையிலும்!
ரஷ்யா துண்டு துண்டாக உடைந்ததும், இந்தியாவை எப்படி நசுக்குவது என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.
இது பற்றி இந்தியாவின் பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவுக்கு மறைமுக நெருக்கடிகள் இருக்கின்றன.பெரும்பாலான பத்திரிகையாளர்கள் கம்யூனிஸ்டுகள்.
அதையும் மீறி இந்திய எல்லையில் சீனாவின் வாலாட்டம்,ஊடுருவல், சில்மிஷங்கள் ஏதாவது பத்திரிகையில் வந்தால், அந்தப் பத்திரிகையின் மீது வழக்குத் தொடுப்பதில் இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.(இது நமக்கு உலக அரங்கில் அவமானத்தைத் தராதா?)

இந்தியாவை பிரபஞ்சத்தைப் படைத்த சக்தி கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது;(இது வெறும் நம்பிக்கையில்லை; நிஜம்)அந்த சக்தி தனது பிரதிநிதியை பூமிக்கு அனுப்பிவிட்டது.அந்தப் பிரதிநிதி இந்தியாவின் அதிகாரபீடத்தினை நெருங்கிவிட்டது.விரைவில், இந்தியாவின் தலைமை பீடத்தை அடையும்.அந்த சக்திக்கு ஆதரவாக சித்தர்கள் இருப்பார்கள்.உலக வரலாற்றில் தெய்வீக சக்தியுடன் கூடிய ஒரு மாபெரும் தலைவன், தலைமையில் இந்தியா தனது உள்ளுணர்வுடன்,உள்ளூக்கத்துடன் விழித்தெழப்போகிறது.
நீதி, நேர்மை,அகிம்சை,பிறருக்கும் உதவும் மனப்பான்மை போன்ற மனித நேயசக்திகள் இந்தியாவின் அரசு இயந்திரமாக மாறும்,இந்து தர்மம் உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.

(தகவல் ஆதாரங்கள்: உலக வரலாறு, இந்தியா டுடேக்கள் 2008,2009,2010, அரசியல் இணைய தளங்கள்,ஜோதிட இதழ்கள்,ஜோதிட ஆராய்ச்சிக்கட்டுரைகள்,எனது குருநாதரின் போதனகள்,சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள்)

3 comments:

  1. நாம் விட்டலாச்சாரியார் காலத்தை கடந்துவிட்டோம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் உங்க ளைப்போன்றவர்கள் மூலம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனாலேயே இன்றும் கூட தெய்வத்தை மட்டுமே நம்புவதை விட்டு தெய்வத்தின் பெயரால் ஏமாற்றிவரும் சாமியார்களை நம்பி மக்கள் இன்னும் சென்று ஏமாந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை இன்னும் முட்டாளாகவே வைத்திருக்க தங்களது கட்டுரை பயன்படும். ஆனால் சீனாவின் நிலைப்பாட்டினை விவரித்த விதத்தினை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்திய கையாலாகாத கைச்சின்ன ஆட்சியும் தமிழ்நாட்டின் அஸ்தமனத்திற்கு முழுமூச்சாக உழைத்துக்கொண்டிருக்கும் சூரியனும் தங்களது சுயநல ஆட்சியிலிருந்து மாறி என்றைக்கு மக்கள் நலனுக்காக (உண்மையான மக்கள் நலகுக்கு) பாடுபட முயற்சிக்கின்றதோ அன்றுதான் இந்தியாவும் தமிழ்நாடும் பிழைக்கும். அதுவரை நீங்கள் சொல்லும் ஆன்மீகவாதி வந்தால் கூட காப்பாற்ற முடியாது. தாங்கள் கூரிய ஆதாரங்களானவற்றை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

    ReplyDelete
  2. விட்டலாச்சாரியாராவது அறிவியல் பூர்வமானதைத் தான் திரைப்படமாகத் தந்தார்.நீங்களே மேல்நாட்டு அங்கீகாரத்துக்கு ஏங்கும் மெக்காலே கூட்டத்தில் ஒருவர்தானே! அதனால்தான் உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கூடத் தராமல் "என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப"சொல்லிவிட்டீர்கள்.

    சரி மேட்டருக்கு வருவோம்.110கோடி என்பது சாதாரண எண்ணிக்கையா? இந்தியாவில் மட்டும்தான் சாமியார்களிடம் ஏமாறுகிறார்கள் எனக்கூறுகிறீர்களா?
    போலித்துறவிகளிடம் மட்டுமா நமது இந்திய ரத்தங்கள் ஏமாறுகின்றன?

    பலகோடிரூபாய்கள் கமிஷனுக்காக அமெரிக்காவின் 60 வது மாநிலமாக நமது நாட்டை மாற்றிக்கொண்டிருக்கும் அலுவாலியாக்கள்,மன்மோகன்களிடமும்தான் ஏமாறுகிறோம்?

    டாலர், ஸ்ட்ராங்கர்,ஷார்ப்பர் என பொய்யை விளம்பரப்படுத்தும் ஹார்லிக்ஸ் போன்ற பன்னாட்டு வர்த்தக திமிங்கலங்களிடமும் ஏமாறுகிறோம்?

    சன் டிவிபோன்ற ஊடக ரவுடிகளிடமும் தான் நாம் தினமும் ஏமாறுகிறோம்?

    மக்களிடமிருந்துதான் ஆட்சியாளர்களும்,ஆட்சியாளர்களிடமிருந்துதான் ஒரு தேசத்தின் கொள்கைமுடிவுகளும் உருவாகின்றன என்பதை நீங்கள் ஏன் உணருவதில்லை.

    மக்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருப்பதால்,மோசமான பிராடுகள் சூப்பராக நடித்தும்,ஏமாற்றியும் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள்.

    என்னை எனது நண்பனின் அப்பா "வாடா பிராடு"எனச் செல்லமாகத் திட்டி வரவேற்பார்.நான் அவரிடம் பதிலடியாக "ஆமா! உண்மையே பேசினால் நீங்களெல்லாம் என்னை நிம்மதியாக வாழவைத்துவிடுவீர்களா?" என கேட்டேன்.நான் பேசியதில் ஏதாவது தவறு உண்டா? சொல்லுங்கள் பார்ப்போம்.

    பிராடுத்தனத்தின் உச்சமான நமது ஆட்சியாளர்கள்,ஆளத்துடிப்பவர்கள் இடைத்தேர்தலுக்கு மக்களையே ஊழல்பேர்வழியாக்கிவிட்டார்களே! அதை என்ன செய்ய?
    ராமனாதபுரம் கூட்டுக்குடிநீர்திட்டத்தினை ராமேஸ்வரத்தில் துவக்கிவைத்த நமது துணை முதல்வர்,இது ராமேஸ்வரத்தின் 25 ஆவது தீர்த்தமாக இருக்கும் என அறிவித்தார்.(இது நக்கல் இல்லையா?)
    நாத்திகத்தை தனது கொள்ளையாக வைத்திருக்கும் ஒரு அமைச்சர்,ஆத்திகத்தினை மேற்கோள் காட்டுகிறார்.சரி போகட்டும் மன்னிக்கலாம்.திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு குழாய்கள் பதித்து,காவிரித்தண்ணீரை ராமேஸ்வரத்துக்கு தருகிறதே நமது கழக அரசு? இதுவா தண்ணீர்ப்பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்கான தீர்வு?
    ஹை. . . ஹை... மரம் நட்டால் கோடிகளில் கமிஷன் அடிக்கமுடியாதே! என அரசியல்வாதிகள் மட்டுமில்லை;அரசு அதிகாரிகளும் 'புரிந்து'கொண்டுவிட்டனர்.

    மாற்றம் என்பது உங்களிடமிருந்துகூட துவங்கலாம்.ஏன் நீங்கள் மாற்றத்தின் ஆரம்பப்புள்ளியாக இருக்கக்கூடாது?

    ReplyDelete
  3. ஜீ....
    அந்த மாவீரன் எப்போது வருவார் என்று ஒரு தோராயமாக கூறமுடியுமா?
    நானும் அந்த வீரனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

    மற்றபடி தங்களுடைய வலைமனை சிறப்பாக இருக்கிறது. தகவல்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன.

    ReplyDelete