Wednesday, June 23, 2010

நேர்மை இன்றும் பாரதத்தில் இருக்கிறது:நன்றி தினமலர் 23.10.2010

"கலிகாலத்தில் இப்படியும் ஒருவரா' : இளையவர் காலில் விழுந்த மூதாட்டி







தேனி : தேனி பஸ் ஸ்டாண்டில் கிடந்த 15 சவரன் தங்க நகையை தவற விட்ட முதியோர் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்து பெற்றுக்கொண்டனர். தேனி பஸ் ஸ்டாண்டில் நேற்று 15 சவரன் தங்க நகை கிடந்தது. அரசு பஸ் டைம்கீப்பர் ஆனந்தன் அந்த நகையை எடுத்து, போலீசிடம் ஒப்படைத்தார். நேற்று காலை மதுரை தெற்கு வெளிவீதி, முத்துப்பள்ளி தெருவில் வசிக்கும் மணி (82), ஜாய்சரோஜினி (72) தம்பதி அந்த நகையை கேட்டு, தேனி ஸ்டேஷனுக்கு வந்தனர்.



மதுரையில் இருந்து லட்சுமிபுரம் திருமண விழாவிற்கு தனியே சென்றபோது, நகையை கழுத்தில் அணிந்து வர தயங்கி, மூதாட்டி சரோஜினி இடுப்பில் மறைத்து வைத்து வந்தபோது, தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார்.தேனி எஸ்.ஐ., மீனாட்சி வேறு நகைகளை கொண்டு வந்து "இது உங்கள் நகைகளா', என மூதாட்டியிடம் கேட்டனர். தம்பதியினர்," இது இல்லை' எனக்கூறி விட்டனர். பின்னர் எஸ்.ஐ., மீனாட்சி, நகைக்கடையில் இருந்து வாங்கிய சில நகைகளுடன் பஸ் ஸ்டாண்டில், எடுத்த நகையை வைத்து காட்டினார். தம்பதியினர் அவ்வளவு நகைகளுக்கு நடுவில், பஸ் ஸ்டாண்டில் கிடந்த தங்களது நகைகளை அடையாளம் காட்டினர்.



அதன் பின், உண்மையிலேயே தம்பதிகள் தான் நகையை தவற விட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர்களிடம் ஒப்படைத்தனர். நகைகளை வாங்கிய மூதாட்டி சரோஜினி, அவற்றை கண்டெடுத்த ஆனந்தன் காலில் விழுந்து "இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு நேர்மையான மனிதரை பார்த்ததில்லை' எனக்கூறி கண்ணீர் விட்டார். பின், ஆனந்தனுக்கு பரிசு ஒன்றை கொடுத்து விட்டு, தம்பதியினர் மதுரை புறப்பட்டனர்.

No comments:

Post a Comment