Tuesday, June 15, 2010

சங்க இலக்கியங்களில் ஜோதிடம்

மனித இனம் நாகரீகமடைந்து,சுமார் 20 லட்சம் வருடங்கள் ஆகின்றன.இராமாயணம் நம் பாரத நாட்டில் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன.(ஆனால்,வெள்ளைக்காரன் உண்டாக்கிய நமது பாடத்திட்டத்தில் நமது பாரத நாட்டுக்கு வெறும் 5000 வருட வரலாறு மட்டுமே உண்டு என நம்மை முட்டாளாக்கியிருக்கிறான்.நாமும்,நமது குழந்தைகளும் இந்த பொய்யை பாடமாகவே படித்துவருகிறோம்)
மனிதன் குரங்கிலிருந்து நாகரீகமடையத்துவங்கிய கால கட்டமே கிஷ்கிந்தா அரசு இருந்த,ஆஞ்சநேயர் வாழ்ந்த கால கட்டம்.

திங்கள் சகடம் மண்டிய என்ற அகநானூற்றின் பாடல் வரிகள் கூறும் கருத்து என்னவெனில், ரோகிணி நட்சத்திரம் நின்ற நாட்களில் திருமணம் செய்துள்ளனர்.

இருபெருங் குரவரும்
ஒரு பெரு நாளான்
மணவணி காண மகிழ்ந்தனர் - சிலப்பதிகாரம்

பொருள்: திருமணம் ஒரு நல்ல நாளில் நடந்ததால் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

பிணி கிடந்தார்க்குப்

பிறந்தநாள் போல

அணியிழை அஞ்சவருமால் - முத்தொள்ளாயிரம்

பொருள்: ஒருவன் நோய்வாய்ப்படும்போது,அவன் பிறந்த நட்சத்திரம் வந்தால்,அந்த நாளன்று அவனது நோய்த்துன்பம் மிகும்.

ஆக,எழுதப்படாத வரலாற்றிற்கு முன்பிருந்தே நமது இந்துதர்மம்,நமது ஜோதிடக்கலை,நமது சாஸ்திரங்கள் மிகவும் வளமடைந்துவிட்டன.
அதே காலகட்டத்தில்,ஐரோப்பிய அமெரிக்க மக்கள் நாகரீகமடையாத காட்டுவாசிகளாக இருந்தார்கள்.இந்த நவீன காலத்திலோ,உலக மயமாக்கல்,தாராளமயமாக்கல்,சிறப்புப் பொருளாதார மண்டலம்,குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்ற பெயரில் மறைமுகமாக உழைத்து மட்டுமே பிழைக்கும் ஆசியா,ஆப்ரிக்கா நாடுகளை சுரண்டுகின்றன.
(இதுபற்றி விரிவான கட்டுரைகள் விரைவில் . . .)

1 comment:

  1. Dear Sir
    Sorry for writing in English.
    Just today I saw this webpage. I like the articles very much especially the ones on Astrology.
    Please keep posting.
    I'll read your other artilces too as I find them very useful.
    Thankyou
    Saravanan

    ReplyDelete