Thursday, September 10, 2015

உலக அரசியலில் இனி நடக்க இருப்பது. . .


1995 ஆம் ஆண்டுடன் கம்யூனிஸம் உலக அரசியலில் இருந்து காணாமல் போனது;

2005 ஆம் ஆண்டில் இருந்து முதலாளித்துவம் சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது;கோடிக்கணக்கான பணம் தான் அந்தச் சிதைவை தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது;

முதலாளித்துவ நாடுகளுக்கு ஒரு பயம்;எங்கே மீண்டும் கம்யூனிஸம் வந்துவிடுமோ? என்று! கம்யூனிஸம் உருவாக எவையெல்லாம் காரணிகளாக இருக்கின்றனவோ அவைகளை திட்டமிட்டு அழிக்கும் (உலக அளவில்) வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;

மிஞ்சி இருப்பது பாரதத்தின் கிராமம் சார்ந்த தன்னிறைவுப் பொருளாதாரம் தான்;இதுவே அடுத்த 20 நூற்றாண்டுகளுக்கு உலகை ஆளப் போகிறது;

வாஷிங்டன் ஆப்பிள் அல்லது நியூசிலாந்து ஆப்பிளை நம்ம தெரு சுப்பனோ குப்பனோ என்னிக்காவது கேட்டானா? இந்த அமெரிக்கா உலக வர்த்தக அமைப்புங்கற பெயருல காராமணித் தெருவுல வந்து இந்த ஆப்பிள்களை விக்குது;
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை நியூயார்க் லேன்யூ சாப்பிடுவாளா?


அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களே அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவாக இருக்கும்;இதுதான் பாரதப் பொருளாதாரத்தின் அடிப்படை!

No comments:

Post a Comment