Friday, September 11, 2015

அன்னை அரசாலையின் அருளை விரைவாகப் பெற


நாம் இந்தக் கலியுகத்தில் பிறக்கக் காரணமே நமது கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;ஆனால்,இறை சக்தி கருணையுள்ளது;திருந்த வேண்டும்;மனம் வருந்த வேண்டும் என்பதற்காக பல சந்தர்ப்பங்களை இறை சக்தி நமக்குத் திரும்பத் திரும்ப நம் வாழ்நாளில் அடிக்கடி உருவாக்கிக் கொண்டே இருக்கிறது;                                                         அதில் முதன்மையானதும்,முக்கியமானதும்,அவசி
யமானதும் தான் அன்னை அரசாலை வழிபாடு;

வராகி அன்னையின் 1000 பெயர்களில் ஒன்றுதான் அன்னை அரசாலை! மும்மூர்த்திகளை விடவும் உயர்ந்தவர்;அவர்களது செயல்களை நிர்ணயிப்பவர் மகா காலபைரவப் பெருமான்;அவரது சக்தியாக இருப்பவளும்,பிரபஞ்சம்,உயிர்கள்,கடவுள் சக்திகள்,குலதெய்வங்கள் என அனைத்துக்கும் இயங்கு சக்தியாக இருப்பவளே வாராகி என்ற அரசாலை!

இல்லறவாசிகளுக்கு உடனடியாக அருளை வாரி வழங்கி நிம்மதியையும்,செல்வ வளத்தையும்,அருட் செல்வத்தையும் தருவதில் பெற்ற அன்னைக்கு நிகர் இந்தப்  பிரபஞ்சத்தில் உண்டா?

சதாசிவனோ அல்லது காலபைரவப் பெருமானோ வரங்களைத் தரும் போது சில சமயம் அந்த வரம் முழுமையில்லாமல் இருப்பதுண்டு;அதை உடனே கவனித்து அந்த வரத்தை முழுமைப்படுத்துவது அன்னையே!

நாளை 12.9.15 சனிக்கிழமையும்,நாளை 13.9.15 ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசைத் திதி அமைந்திருக்கிறது;தவிர,12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமையும் சிம்மகுருவும் உடன் இருப்பதால் இந்த நாளில் அன்னை அரசலை(வராகி)யை வழிபடத் துவங்குபவர்கள் முற்பிறவிகள் மூன்றில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்ட சித்த சீடர்கள் என்பதே சூட்சுமம்!!!

சூரியனுடைய வீடான சிம்மத்தை குரு கடப்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே! இந்த மாதமே ஆவணி மாதம்;முன்னொரு காலத்தில் தமிழ் வருடப்பிறப்பு ஆவணி மாதம் முதல் நாளாக இருந்தது;இந்த ஆவணி மாதம் முழுவதும் ஆத்மக்காரகனாகிய சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்;குரு உச்சத்துக்குரிய சக்தியுடன் சிம்மத்தில் இருக்கிறார்;அடுத்த இரண்டு நாட்களில் மனக்காரகனாகிய சந்திரனும் வர இருக்கிறார்;இந்த அதி நுட்பமான,விஷேசமான நாளில் ஜோதிடர்களும்,ஜோதிட ஆர்வலர்களும் அன்னை அரசாலையை(வராகி) வழிபடத் துவங்கிடலாம்;இதன் மூலமாக தன்னுடைய வாக்கு பலத்தை அதிகரித்துக்  கொள்ள ஒரு சுலபமான வாய்ப்பு;

இன்றும் நம்மில் பலர் ஏதாவது ஒரு அம்மனை தினமும் வழிபட்டு அல்லது துதித்து வருகின்றனர்;அவர்கள் அந்த அம்மன் வழிபாட்டோடு அன்னை அரசாலை(வராகி)யை வழிபடத் துவங்கினால்,அவர்கள் வழிபடும் பெண் தெய்வத்தின் அருள் அதிவிரைவில் கிட்டிவிடும்;கடந்த ஒராண்டாக நேரில் உணர்ந்த ஆன்மீக உண்மை இது;

அன்னையின் 12 பெயர்களை தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை தினமும் காலையிலும்,இரவிலும் ஜபிப்பதே அன்னை அரசாலையைச் சரணடைவதன் முதல் கட்டம்!

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்கள் அல்லது உக்கிரமான பெண் தெய்வக் கோவில்கள் அல்லது சப்த கன்னியர்கள் சன்னதிகள் இருக்கும் எந்தக்கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவில்கள் அல்லது குலதெய்வக்கோவில்களில் தினமும் இரவு 8 முதல் 8.30 க்குள் அன்னையின் 12 பெயர்களை ஜபிக்கலாம்;இதன் மூலமாக பல ஆண்டுகளாக உங்களுக்கு இருந்து வரும் வாழ்வியல் சிக்கல்கள் தீர வழிகிடைக்கும்;கடன் கள் தீர எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்;

தினமும் கோவிலுக்குச் சென்று ஜபிக்க முடியாதவர்கள்,உங்களுக்கு வசதியான நாட்களில் ஜபிக்கலாம்;வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது உங்களுக்கு எப்போதெல்லாம் ஆலயத்திற்குச் செல்ல முடியுமோ அப்போதெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு 30 நிமிடத்தில் ஜபிக்கலாம்;


ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அன்னை வராகியின் சன்னதிகள் அல்லது தனிக்கோவில்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன;


அன்னையின் வழிபாட்டைத் துவக்கிட நமக்குத் தேவையான தகுதிகள்:

1.அசைவம் சாப்பிடக் கூடாது;(புரோட்டா,முட்டை வகை உணவுகள் அசைவமே)

2.யாருக்கும் மனதால் தீங்கு நினைக்கக் கூடாது;பிறர் நமக்கு நினைத்தால் அதை அன்னை அரசாலையிடம் முறையிட்டுவிட்டு,நமது வேலை/தொழிலை பார்த்துக்கொண்டே சென்றால் போதும்;

3.இப்படிப்பட்ட வழிபாட்டை பின்பற்றத் துவங்குவதையோ அல்லது வழிபாடு செய்வதையோ எவ்வளவுக்கெவ்வளவு ரகசியம் காக்கிறோமோ அவ்வளவு நன்மை தரும்;

அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை ஒருமுறை ஜபித்தால்,ஐந்து முறை வராகி மாலையை பாடியதற்குச் சமம்;

அந்த 12 பெயர்கள் வருமாறு:

பஞ்சமீ

தண்டநாதா

சங்கேதா

சமேஸ்வரீ

சமய சங்கேதா

வராகி

போத்ரிணி

சிவை

வார்த்தாளீ

மகாசேனா

ஆக்ஞாசக்ரேஸ்வரீ

அரிக்நீ

ஏற்கனவே,அன்னையின் 12 பெயர்களை ஜபித்து வருபவர்கள் 12.9.15 சனிக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்கலாம்;அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்கலாம்;

13.9.15 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 6 மணி முதல் 7 மணிக்குள் அல்லது இந்த நேரங்கள் அனைத்திலும் அருகில் இருக்கும் சிவாலயத்தில் சிவன் சன்னதி முன்பாக பாதிநேரமும்,அம்பாள் சன்னதி முன்பாக மீதி நேரமும் ஜபிக்கலாம்;

இதன் மூலமாக அமாவாசை திதி,குருச்சந்திரயோகம்,சிவராஜயோகத்தின் பலன் போன்றவைகளை முழுமையாகப் பெறலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


No comments:

Post a Comment