Wednesday, September 2, 2015

அன்னை அரசாலையின் 12 பெயர்களுக்கான விளக்கங்கள்


பிரபஞ்சத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்னை வாராகியின் 1000 பெயர்களில் ஒன்றுதான் அரசாலை;இந்தப் பெயரில் அன்னையின் ஆலயம் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்திற்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது;

அன்னை அரசாலையை வழிபட பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்;முற்பிறவிகள் மூன்றில் முழுமையாக பைரவ வழிபாடு செய்திருக்க வேண்டும்;அல்லது ஒரு பிறவி முழுக்க பைரவப் பெருமானிடம் சரணடைந்திருக்க வேண்டும்;யாருக்கும் மாந்தீரீகத்தால் தீங்கு செய்திருக்கக் கூடாது;அவர்களுக்கு மட்டுமே இப்பிறவியில் அன்னை அரசாலை(வாராகி)யைச் சரணடையும் எண்ணம் தோன்றும்;

எதிரிகள் மற்றும் நவக்கிரகங்களால் ஏற்படும் துயரங்களை ஒரே நேரத்தில் தீர்த்துவைக்கும் தாய்மை சுபாவம் இவளுக்கு உண்டு;இவளுக்கு மட்டுமே உண்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்;

நமது வாழ்க்கையில் இருந்து வரும் துக்கங்கள்,சோகங்கள்,அவமானங்களைத் துடைத்து நம்மை அமைதியாகவும்,நிம்மதியாகவும் வாழ வைக்கும் ஒரே தெய்வம் அன்னை அரசாலை மட்டுமே!(அனுபவம் பேசுகிறது)

பஞ்சமீ = பஞ்சமீ திதியில் ஆதிபராசக்தியிடம் இருந்து தோன்றியவள் என்று அர்த்தம்;

தண்டநாதா = கையில் உலக்கை,கலப்பை என்ற இருவிதமான தண்டங்களை வைத்திருப்பவளே என்று அர்த்தம்;

விவசாயமே மனித இனத்தை உயிரோடு வாழ வைக்கிறது;அந்த விவசாயம் செய்ய அடிப்படைத் தேவை கலப்பை;விவசாயிகளின் தெய்வமாக பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வழிபடப்பட்டு வந்த அன்னை இவளே!

தன்னை வழிபடும் தனது பக்தர்களை தனது செல்லம் மிகு மகனாகவும்,மகளாகவும் நினைத்துப் பாதுகாப்பவள் அன்னை அரசாலை(வாராகி);அவர்களுக்கு எதிராக யாராவது ஏதாவது பில்லி,ஏவல் சூனியம் வைத்தால் அவர்களுக்குரிய தண்டனை இந்த உலக்கை மூலமாக கிடைக்கும் என்பதை சூட்சுமமாக விளக்குகிறாள்:

சங்கேதா = தன்னைப் படைத்த ஆதிபராசக்தி என்ற லலிதா பரமேஸ்வரியின் முகக்குறிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல செயல்படுபவள் என்று அர்த்தம்;

சமேஸ்வரி = தனது பக்தர்களின் கஷ்டநேரம் பார்த்து எதிர்பாராத விதத்தில் உதவிகளைச் செய்பவள் என்று அர்த்தம்;

சமய சங்கேதா =தன்னைப் படைத்த லலிதாபரமேஸ்வரியிடம் மன நிலையை அறிந்து அவளிடம் சமமான முறையில் உரையாடுபவள் என்று அர்த்தம்;(அன்னையைச் சரணடைந்தவர்களுக்கு இந்த சுபாவம் இயல்பாகவே கைகூடிவிடும்;இந்த ஒரு குணம் இருந்தாலே நாம் எந்தத் துறையில் இருந்தாலும் முன்னுக்கு வந்துவிடலாம்)

வராகீ =சம்ஸ்க்ருதத்தில் வாராகி என்று கூறுவர்;எப்படி அழைத்தாலும் நமது மனோபாவத்தை மட்டுமே அன்னை கவனிப்பாள்;

போத்ரிணீ =சபையில் கூறமுடியாத அளவுக்கு சக்திவாய்ந்த விளக்கம் இந்த வார்த்தைக்கு இருக்கிறது;

சிவை = சிவனும் சக்தியும் இணைந்த வடிவமாக இருக்கும் ஒரே தெய்வம் வராகி (ஓம் வராகி சிவசக்தி ஓம் என்பது கூட ஒரு மந்திரமே:நன்றி:வராகி பரணி)

வார்த்தாளீ = விவசாயத்துக்குரிய வராகி,ஆரோக்கியம் தரும் வராகி என்று இரு செயல்களுக்கும் ஒரே தெய்வமாக விளங்குபவள்;இவளை ப்ருஹத் வாராகி என்று அழைப்பர்;

மகாசேனா = ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவள்;லலிதாபரமேஸ்வரி என்ற ஆதிபராசக்தியின் படைகளை நடத்தும் தகுதி இவளுக்கு மட்டுமே உண்டு;

ஆக்ஞாசக்ரேஸ்வரீ = நமது புருவமத்திக்குள் இருக்கும் சக்கரத்தை இயக்குபவள் என்று அர்த்தம்;

அரிக்நீ = இதுவும் ரகசிய விளக்கமே!



ஓம் வராகி சிவசக்தி ஓம்

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment