Friday, September 18, 2015

அன்னை அரசாலை(வராகி)யின் அருளைத் தரும் புரட்டாசி பஞ்சமி(18.9.15 வெள்ளி)


சப்த கன்னியர்களில் ஐந்தாவதாக இருக்
கும் கன்னியே வராகி;இதனால் வராகிக்கு பஞ்சமீ என்றொரு பெயரும் உண்டு;ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து உருவானதாலும் இந்தப் பெயர் உருவானது;

18.9.2015 வெள்ளிக்கிழமையன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள் மற்றும் பஞ்சமீ திதி ஒன்றாக வருகிறது;இந்த நாளில் அன்னை அரசாலை(வராகி)யின் அருளைப் பெறுவது மிகவும் சுலபம்;தமிழ் மாதப்பிறப்பன்று சூரியன் ஒரு ராசிக்குள் நுழைந்த நாளாக இருக்கிறது;அதனால் சூரியன் முழு பலத்தோடு இருப்பார்;புரட்டாசி மாதத்தில் தான் நமது முன்னோர்களில் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் பித்ருக்களாக காலம் காலமாக மாறியிருப்பர்;அவர்கள் தர்மதேவதை,பித்ருக்களின் தலைமை கடவுளிடம் அனுமதி பெற்று பூவுலகிற்கு வருவர்;வந்து தமது பரம்பரையினரை நேரில் சந்திப்பர்;

ஆவிகள் உலக ஆராய்ச்சி செய்பவர்கள்,லக்னத்துக்கு 5 ஆம் இடம் அல்லது 9 ஆம் இடத்தில் செவ்வாய்+சுக்கிரன்+கேது சேர்ந்திருப்பவர்களுக்கு காட்சியளிப்பர்;

கலியுகமாக இருப்பதால்,நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் வருவது நமது கண்களுக்குப் புலப்படுவது இல்லை;தினமும் ஏதாவது ஒரு இறை மந்திரம் ஜபித்துக்கொண்டு,அந்த ஜப நாட்கள் 1000 ஐக் கடந்திருப்பவர்களுக்கு பித்ருக்கள் கண்களுக்குத் தெரிவார்கள்;

எப்படிப் பார்த்தாலும்,நம்மில் பலர்,பல குடும்பத்தினர் கடன் சுமையில் வாடிவருகின்றனர்;அல்லது நிரந்தர வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்;சிலர் திருமண வயதைக் கடந்தும் கூட திருமணம் முடியாமல் தவித்துவருகின்றனர்;இன்னும் சில கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் கூட அதை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்;இன்னும் சிலர் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் வரவுக்கும் செலவுக்கும் நடுவே திண்டாடி வருகின்றனர்;பல குடும்பங்களில் கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள்,மருமகன் மருமகள் இடையே ஒற்றுமையில்லை;இவைகள் அனைத்திற்கும் காரணம் தெய்வ நம்பிக்கை குறைவாக இருப்பதும்,ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்யாமல் இருப்பதுமே காரணம்;


புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று 18.9.15 வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பின் வரும் அன்னை அரசாலை(வராகி)யின் பெயர்களை ஜபிக்கத்துவங்கினாலே அடுத்த சில நாட்களில் நமது கஷ்டங்கள் தீர வழி கிடைத்துவிடும்;

அன்னையின் பெயர்களை ஜபிக்க வயது வரம்பு இல்லை;ஆனால்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;இன்றைய நாகரீக உலகில் முட்டையும் அசைவமே! புரோட்டாவும் அசைவமே!!

அருகில் இருக்கும் கோவிலில் அம்மன் சன்னதியில் அல்லது சிவபெருமான் சன்னதியில் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் ஜபித்தாலே அன்னை அரசாலை(வராகி)யின் அருள் கிட்டிவிடும்;


முறைப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாளும் இதுவே:ஏற்கனவே அன்னை வழிபாடு செய்து வருபவர்களும் இந்த நாளில் அதிகமான அளவில் அன்னையின் பெயரை ஜபிப்பது அவசியம்;

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களையும் ஒருமுறை ஜபித்தால்,வராகி பரணியை ஒருமுறை ஜபித்தமைக்கு இணையான புண்ணியம் கிட்டும்;ஆனால்,இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் ஒருமுறை ஜபித்தால்,10,000 முறை வராகி பரணியை ஜபித்தமைக்கு ஈடான புண்ணியம் கிட்டும்;இரவு 8 முதல் 9 க்குள் ஒருமுறை ஜபித்தால்,1,00,000 முறை ஜபித்தமைக்கான புண்ணியம் கிட்டும்;


வீட்டில் அல்லது ஏதாவது ஒரு அன்னையின்(காளி,மாரி,துர்க்கை,பட்டத்தரசி,அங்காளபரமேஸ்வரி,தண்டுமாரியம்மன்,செல்லியம்மன்,புன்னைநல்லூர் மாரியம்மன்,ஆதிபராசக்தி,சப்த கன்னியர்,கனகவல்லி,செங்கோடம்மா,குலதெய்வம் சன்னதி,) சன்னதியில் இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி ஜபித்தால் மேலே கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு புண்ணியம் கிட்டும்;

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் அனைத்திலும் ஊடுருவி சக்தியாக பரிமணித்து நம்மை இயக்கி வருவது அன்னையே!

அன்னை வழிபாடு செய்வதன் மூலமாக பில்லி,சூனிய பாதிப்பு மூன்றாம் நாளில் இருந்தே விலகத் துவங்கும்;
நவக்கிரகங்களால் உண்டாகியிருக்கும் எந்த தோஷமும் கரையத் துவங்கும்;

கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,அது தீர்வதற்குரிய நேர்மையான வழிமுறை தேடி ஓடி வரும்;


அன்னை வராகியின் சன்னதிகள் இருக்கும் ஊர்களில் உள்ளவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பெயர்களால் ஜபிப்பதன் மூலமாக அன்னையை சூட்சுமமாக தரிசிக்கும் பாக்கியம் பெறலாம்;கடந்த 25,000 ஆண்டுகளாக அன்னையை அப்படி தரிசித்துள்ளனர் பல ஆயிரம் பேர்கள்;


அன்னை வராகி அருள்பாலிக்கும் ஊர்கள்:

உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசியில் பிந்துமாதவர்  கோவிலுக்கு அருகில்
உத்திரகோசமங்கை
தஞ்சைப் பெரியகோவில்
பள்ளூர்(காஞ்சிபுரத்திற்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைந்திருக்கும் சிறு கிராமம்)
திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி
திருப்பூந்துருத்தி அ/மி.புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் நான்கு கரங்களுடன்
ஒரிசா மாநிலம் பூரியில் ஜகன்னாதர் ஆலயத்திற்கு அருகில்
மற்றும் சப்த கன்னியர்கள் இருக்கும் ஆலயங்கள் அனைத்திலும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


No comments:

Post a Comment