நம்மில் பெரும்பாலானவர்கள்,சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்துகிறோம்;அல்லது
சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துகிறோம்;இரண்டுமே நமது சீரணமண்டலத்தின் இயக்கத்தை ஸ்தம்பிக்க
வைப்பவை;இதனால் தான் குண்டாகிறோம் அல்லது கர்ப்பிணிப்பெண்களுக்கு இணையான அளவில் தொப்பையை
வளர்க்கிறோம்;
சாப்பிட்டு முடித்ததும்,வாயைக் கொப்பளிக்கக் கூடாது;அதை அப்படியே விழுங்குவது
அவசியம்;அப்படி விழுங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகபட்சம் 15 மி.லி.தண்ணீர் மட்டுமே
அருந்த வேண்டும்;
அதே போல,காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலும் தொப்பையை உருவாக்கிவிடும்;
எப்போது தண்ணீர் அருந்தலாம்?
சாப்பிடும் நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாக அல்லது சாப்பிட்டு முடித்த
30 நிமிடம் பின்பாக மட்டும் தண்ணீர் அருந்தலாம்;
சரி! முழு ஆயுள் பெற நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதுதான்;
ஒருலிட்டர் முடியாவிடில் கொஞ்சம்,ஒரு தம்ளர் அளவுக்கு ஒவ்வொரு ஒரு மணி
நேரத்திற்கு ஒருமுறையும் தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்;
ஏன் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்?
நமது உடலில் 70% தண்ணீர் இருக்க வேண்டும்;அலைச்சல்,கடும் வேலை,தொடர்
பயணம் இவைகளால் தண்ணீரை நமது உடலில் இருந்து இழக்கிறோம்;அதை ஈடுகட்டிட ஒருமணி நேரத்திற்கு
ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும்;மினரல் வாட்டர் தொடர்ந்து அருந்துவதால்,நமது உடலானது
நோய் எதிர்ப்புத் திறனை படிப்படியாக இழக்கிறது என்பதை பாட்டி மருத்துவமும் தெரிவித்தது;நவீன
மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment