Wednesday, September 30, 2015

மகாளயபட்சம் ஆரம்பம் 28.9.15 முதல் 12.10.15 வரை


ஒவ்வொரு ஆண்டும் இறந்த முன்னோர்கள்,பித்ருக்களின் உலகில் இருந்து பூமிக்கு வருவது இந்த 15 நாட்கள் மட்டுமே! நமது வீட்டில் இருக்கும் நீர்நிலைகள் அல்லது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் இவர்கள் இந்த 15 நாட்கள் வாசம் செய்வர்;இந்த 15 நாட்களில் ஒரே ஒரு நாளாவது நமது வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் எவராவது பித்ரு தர்ப்பணம் செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் காத்திருப்பர்;


நாம் தான் பணத்தின் பின்னால் ஒடும்போது எப்படி இதையெல்லாம் செய்வோம்?இந்த ஒரே ஒரு கடமையைச் செய்பவர்கள் ஒராண்டு வரை எந்தவித பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ்வார்கள்;எந்தவிதமான ஆபத்துக்களும் இவர்களை நெருங்காது;எந்தவிதமான கஷ்டங்களும் இவர்களை நெருங்கவே நெருங்காது;முன்னோர்களின் ஆசிக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

அது எப்படி?

நாம் தினமும் வழிபட்டு வரும் கடவுளை விடவுமா?
ஆமாம்!


ராமயணகாலத்தில் ராமபிரான் வனவாசம் இருந்த போது, தனது தந்தையாகிய தசரத மஹாராஜாவுக்கு பித்ரு பூஜை செய்த இடங்கள் நிறைய உண்டு;அவற்றில் முக்கியமான இடங்கள் கும்பகோணம் மகாமகப் படித்துறையில் பைரவப் படித்துறையும்;அட்டவீரட்டானங்களில் முக்கியமான வீரட்டானம் என்று கருதப்படும் கொறுக்கை என்ற குறுக்கையும் ஆகும்;இவ்விடங்களில் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது,அதை ஏற்றிட தசமகாராஜாவே நேரில் வந்திருக்கிறார்;அவரை பார்க்க வெட்கப்பட்ட சீதா பர்ணசாலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாளாம்;


அருட்சக்தி என்று பார்த்தால்,தெய்வத்தின் அருளைக் காட்டிலும் பித்ருக்களின் அருளே அதிக சக்தி வாய்ந்தது;ஏன் எனில்,ஒரு தெய்வத்தை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அந்த தெய்வத்தின் அருள் பரவலாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது;ஆனால்,பித்ருக்களின் அருட்சக்தியோ தனக்கு கர்மா செய்யும் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது;ஆகவே,பித்ருக்களின் சக்தி அளவு அவர்களுக்கு அதிகமாகவே கிடைக்கிறது;

அதுமட்டுமா?

நாம் எந்தக்கோவிலுக்குச் சென்று என்ன பரிகாரம் செய்தாலும்,அதற்குரிய பலனை அந்தக் கடவுள் நேரடியாகத் தருவதில்லை;அப்படி ஒருவேளை தந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் ஆத்மபலம் நம்மிடம் இல்லை;அவை நமது பித்ருக்கள் மூலமாகவே நமக்குக் கிடைக்கிறது;குலதெய்வ வழிபாடும்,பித்ருக்கள் வழிபாடும் நமது இரு கண்கள்;இதை முறைப்படி யார் செய்கிறார்களோ அவர்களே சில ஆண்டுகளில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுகிறார்கள்;

இன்று இருக்கும் மேல்நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களின் சி.ஈ.ஓ  க்கள் யார் தெரியுமா?
முற்பிறவிகளில் இந்தியாவில் பிறந்து குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் பித்ருக்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தவர்களே!

ஒரு ஆண்டில்(ஒரு தமிழ் ஆண்டில் என்று எடுத்துக் கொள்ளவும்) ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்தமூன்றில் ஏதாவது ஒரு அமாவாசையில் மட்டும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அவசியம்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால்,கடந்த 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனைப் பெறலாம்;இந்த 15 நாட்களும் தாம்பத்தியத்தை நிறுத்தி வைப்பது அவசியம்;அது தொடர்பான எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது;பேசக்கூடாது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;


No comments:

Post a Comment