Friday, September 18, 2015

குரு பலம் தரும் ஸ்ரீஅசிதாங்க பைரவப் பெருமான்!!


நவக்கிரகங்களின் பிராணதேவதையாக அஷ்டபைரவர்கள் இயங்கிவருகின்றனர்;சூரியனின் பிராணதேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இயங்கிவருகிறார்;குரு கிரகத்தின் பிராணதேவதையாக ஸ்ரீஅசிதாங்க பைரவர் செயல்பட்டுவருகிறார்;தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த அஷ்டபைரவப் பெருமான் கள் அருள்பாலித்துவருகின்றனர்;


ஸ்ரீஅசிதாங்க பைரவரின் சன்னதி வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு நாகநாதர் திருக்கோவிலில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவரும்,ஸ்ரீஅசிதாங்க பைரவரும் அருள்பாலித்துவருகின்றனர்;

குரு பலம் இல்லாதவர்கள்(மகர ராசியில் குரு இருக்கும் போது பிறந்தவர்கள்),தகுந்த ஆன்மீக குருவைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்,குரு பலம் இல்லாததால் திருமணம் அல்லது குழந்தைப் பேறு தாமதம் ஆகிறது என்பதை தமது ஆஸ்தான ஜோதிடர்கள் மூலம் அறிந்தவர்கள் இந்த ஸ்ரீஅசிதாங்க பைரவப்பெருமானை வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபடலாம்;


பின் வரும் முறைப்படி மூன்று வியாழக்கிழமைகள் வழிபடுவதன் மூலமாக குருவின் அருளைப் பெற முடியும்;

இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு நாகநாதரை வில்வத்தளங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு இங்கே இருந்து அருள்பாலித்து வரும் அன்னையை குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,இங்கே அருள்பாலித்து வரும் அன்னை வராகியை (சப்தகன்னியர்கள் இருக்கின்றனர்) வழிபட்டுவிட்டு,பிறகு கால பைரவப் பெருமானை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 12 முறை ஜபித்துவிட்டு,பிறகு பின் வரும் அசிதாங்க பைரவ காயத்ரியை 12 முறை ஜபிக்க வேண்டும்;


ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்சத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்

ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்,புரோகிதம் செய்பவர்கள்,ஜோதிடர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,வருவாய்த் துறையில் பணிபுரிபவர்கள்,டியூசன் நடத்துபவர்கள்,பொற்கொல்லர்கள்,நவரத்தினங்கள் விற்பனை செய்பவர்கள்,அருள்வாக்கு சொல்பவர்களும் இந்த முறையில் அசிதாங்க பைரவப் பெருமானை வழிபடலாம்;

குரு திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஒரு வியாழக்கிழமை அன்று இங்கே வந்து இந்த முறைப்படி வழிபட வேண்டும்;

படத்தில் காணப்படுவது காலபைரவருடன் அருள்பாலித்து வரும் ஸ்ரீஅசிதாங்க பைரவப் பெருமான்;ஆம்பூர்,வேலூர் மாவட்டம்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!! 

No comments:

Post a Comment