நாம் சாப்பிடும் உணவு தயாராவது நமது வீட்டுச் சமையலறையில்!
சமையலறைக்குத் தேவையான உணவுப்பொருட்களை பரம்பரை பரம்பரையாக அம்மா மூலமாக
மகளுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டு அறிந்து கொள்கிறாள்;
சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள் அஞ்சறைப்பெட்டி; இதில்
தான் கடுகு,உளுந்து,கொத்துமல்லி முதலான அனைத்தும் இருக்கும்;
இந்த அஞ்சறைப்பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை நமக்கு உலக
வரலாற்றில் வரையறுத்தது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பூமிக்குக்
கொண்டு வந்தவருமாகிய அகத்தியர் மகரிஷியே!
(தமிழ்,தமிழ்னு அரசியல் அரங்கில் கூப்பாடு போடுறவங்க அகத்தியரைப் பற்றி
எங்காவது பேசுகிறார்களா? நாத்திகத்தை ஏன் அவர்கள் பேசுகிறார்கள்;ஓ! நமது தமிழ் உணர்வைக்
கொச்சைப்படுத்துகிறார்கள்?!?!?!)
என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் என்னென்ன நோய் வராது என்பதை பற்றி சித்தர்
பெருமக்கள் ஒரு நூலாகவே உருவாக்கியுள்ளனர்;அந்த புத்தகத்தின் பெயர்: பதார்த்த குண சிந்தாமணி
யாரும் இப்போது வெளியிடவில்லை;பழைய புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்தால்
கிடைக்கலாம்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;
No comments:
Post a Comment