ஸ்ரீவித்யா உபாசனை என்பது மனோன்மணியை தரிசனம் செய்ய முயற்சி செய்வதே
ஆகும்;மனோன்மணி தரிசனம் செய்வதே சித்தர்களின் யுகலட்சியம் ஆகும்;(சாதாரண மனிதர்களுக்குத்
தான் வாழ்நாள் லட்சியம்!)
இதன் ஆரம்ப நிலையே அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது!
தான் உண்டு;தனது வேலை உண்டு என்று வாழ்ந்து வருபவர்களுக்கு பொறாமையால்
சக ஊழியரோ,உறவினரோ மாந்திரீகம் வைத்து முடக்குவது இந்தியாவில் சர்வசாதாரணமாக நடைபெற்று
வருகிறது;
இதில் இருந்து மீள விரும்புவோர் அசைவம் தவிர்க்க வேண்டும்;மது அருந்தக் கூடாது;போதைப்
பொருட்கள்(பீடி,சிகரெட்,பாக்கு வகைகள்) பயன்படுத்துவதை கைவிடவேண்டும்;
குறைந்த பட்சம் அசைவம்,மதுவைக் கைவிட வேண்டும்;அதன் பிறகு,பின்வரும்
அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,மாலையில் 15 நிமிடமும்
ஜபித்து வர வேண்டும்;குறிப்பாக காலை 6 மணிக்கு முன்பு ஏதாவது 15 நிமிடமும்,மாலை 6 மணிக்குப்
பிறகு ஏதாவது 15 நிமிடமும் ஜபித்து வர வேண்டும்;
வீட்டில் மஞ்சள் துண்டு விரித்து,அதன் மீது அமர்ந்து கொண்டு கிழக்கு
நோக்கி ஒரு தீபம் ஏற்றிக் கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஜபிக்கவும்;
ஓம் நமச்சிவாய நமக என்று ஒருமுறையும்
ஓம் (உங்கள் குலதெய்வம்$) நமக என்று ஒருமுறையும் ($குலதெய்வம் தெரியாதவர்கள்
இஷ்ட தெய்வத்தைக் கூறலாம்)
ஓம் கணபதி நமக என்று ஒருமுறையும் ஜெபித்துவிட்டு,இந்த 12 பெயர்களை ஜபிக்க
வேண்டும்;வாய்விட்டுச் சொல்லக் கூடாது;
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவா
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இப்படி குறைந்த பட்சம் 180 நாட்கள் ஜபித்து வரவேண்டும்;அதன் பிறகே,தினமும்
வராகி மாலையை பாடத் துவங்கலாம்;
இன்று 2.9.2015 புதன் கிழமை மதியம் 3.40 முதல் நாளை 3.9.2015 வியாழன்
மதியம் 1.26 வரை பஞ்சமீ திதி வருவதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் ஏதாவது ஒரு 15 நிமிடத்தில்
அன்னை அரசாலையை வழிபடத் துவங்கலாம்;
ஏற்கனவே,அன்னை அரசாலையை வழிபடத் துவங்கியவர்கள்,இன்று முதல் ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் தினமும் வழிபடத் துவங்குவது அவசியம்;
உதாரணமாக,வேலை முடிந்து வீட்டு வரும் நேரம் இரவு 8 மணி எனில்,இன்று முதல்
தினமும் இரவு 9 முதல் 9.15க்கு தினமும் இந்த 12 பெயர்களை ஜபிக்கத் துவங்கிடலாம்;ஒரே
நேரம் தினமும் ஜபிக்கத் துவங்குவதால்,மூன்றாவது நாளில் இருந்தே அன்னை அரசாலையின் அருள்
கிட்டும்;யாராலும் நமக்கு கெடுதி செய்ய முடியாது;
நாமும் நமது குடும்பமும் பத்திரமாக அன்னை அரசாலையின் அருட்பார்வைக்குள்
இருப்போம்;
இந்த அன்னை அரசாலையின் வழிபாட்டுமுறை பற்றி மேலும் அறிய நேரில் சந்திக்கவும்;
ஒம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment