Monday, December 5, 2011

சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் ஆசி பெற்ற சடதாரியம்மன்






சிவலோகத்தில் சிவ வழிபாடு செய்து வரும்போது,ஒரு நாள் ஒரு பாடகரின் இனிய குரலில் மயங்கிய ஒரு தேவலோகத்துப்பெண்,அந்தப் பாடகரை காதலோடு நோக்கிட,அந்த பாடகரும் இந்தப் பெண்ணை நோக்கிட,இருவரும் சிவனது சாபத்துக்கு ஆளானார்கள்.

அதன் படி, வத்திராயிருப்பு அருகில் இருக்கும் கோட்டையூரில் தில்லைக்கோன்+திலகவதி தம்பதியருக்கு மகனாக அந்த பாடகர்  பிறந்தார்.தில்லைக்கோனின் தங்கை சிங்காரமங்கை+செங்கமலக்கண்ணன் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக,ஒரே மகளாக அந்த தேவலோகத்துப் பெண் பிறந்தாள்.
அவரின் உடல் பச்சை உடலாக இருந்தமையால் அவருக்கு பச்சைமால் என்ற பெயர் சூட்டப்பட்டது.அந்த தேவலோகப் பெண்ணுக்கு சடை மங்கை என்று பெயராகியது.இருவருக்கும் திருமணம் நிறைவுற்று,பச்சைமால் தனது குலத் தொழிலான மாடு மேய்த்தலைச் செய்துவந்தார்.பசுவின் பாலைக் கறந்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்கள்;


இந்நிலையில் சிவபெருமானின் சாபப்படி,சிவபெருமானே துறவி வேடம் பூண்டு, சடை மங்கையிடம் தினமும் பால் வாங்கி அருந்திக்கொண்டிருந்தார்.இதனால்,பாலின் அளவு குறைந்தது;இதை ஒரு நாள் கண்டறிந்த பச்சை மால்,அவளை கடுமையாகத் தண்டித்தார்.

தண்டனை தாங்க முடியாமல்,அந்த துறவியிடம் போய் சடைமங்கை அழ,துறவியோ தனது சுய உருவாகிய சிவ வடிவம் பெற்று,சடையம்மாள் என்ற பெயரிட்டு,நவ சக்திகளில் ஒருத்தியாக அருள்பாலித்தார்.கலிகாலத்தில் சடையம்மாளை வழிபடுபவர்களுக்கு எந்த விதமான மனக்கஷ்டங்களும் நீங்கும் என்றும் வரம் வழங்கினார்.

வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் சென்று,மாவூத்து என்ற இடத்துக்குச் சென்றால்,சடையம்மாள் கோவிலைச் சென்றடையலாம்.இந்த சடையம்மாளின் புராணத்தை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.


 நன்றி: சதுரகிரித் தல புராணம்,பக்கம் 30,31.
பதிப்பாசிரியர்:ஆர்.சி.மோகன், வெளியீடு:தாமரை நூலகம்,(இது ஒரு பதிப்பகம்) 7,என்.ஜி.ஓ.காலனி,3வது தெரு,வடபழனி,சென்னை-26.விலை ரூ.120/-பக்கங்கள்:260


முக்கிய குறிப்பு:இன்றும் வத்திராயிருப்பு,சுந்தரபாண்டியம்,எஸ்.இராமச்சந்திரபுரம் பகுதிகளில் சடையம்மாள் என்ற பெயரை தங்களின் மகள்களுக்கு சூட்டுவதை பெருமையாக இப்பகுதி மக்கள் எண்ணுகின்றனர்.இப்பெயரைச் சூட்டிய பெண் குழந்தைகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகின்றன.சுமார் 3000 குடும்பங்களுக்கு  சடையம்மாள் குல தெய்வமாக அருள்பாலித்துவருகிறாள்.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்






1 comment:

  1. Ungal sevai yai paratta, adiyenuku vayathu illai. Thodarnthu seiyunkal OM SIVA SIVA OM.

    ReplyDelete