Showing posts with label சதுரகிரி. Show all posts
Showing posts with label சதுரகிரி. Show all posts

Monday, December 5, 2011

சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் ஆசி பெற்ற சடதாரியம்மன்






சிவலோகத்தில் சிவ வழிபாடு செய்து வரும்போது,ஒரு நாள் ஒரு பாடகரின் இனிய குரலில் மயங்கிய ஒரு தேவலோகத்துப்பெண்,அந்தப் பாடகரை காதலோடு நோக்கிட,அந்த பாடகரும் இந்தப் பெண்ணை நோக்கிட,இருவரும் சிவனது சாபத்துக்கு ஆளானார்கள்.

அதன் படி, வத்திராயிருப்பு அருகில் இருக்கும் கோட்டையூரில் தில்லைக்கோன்+திலகவதி தம்பதியருக்கு மகனாக அந்த பாடகர்  பிறந்தார்.தில்லைக்கோனின் தங்கை சிங்காரமங்கை+செங்கமலக்கண்ணன் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக,ஒரே மகளாக அந்த தேவலோகத்துப் பெண் பிறந்தாள்.
அவரின் உடல் பச்சை உடலாக இருந்தமையால் அவருக்கு பச்சைமால் என்ற பெயர் சூட்டப்பட்டது.அந்த தேவலோகப் பெண்ணுக்கு சடை மங்கை என்று பெயராகியது.இருவருக்கும் திருமணம் நிறைவுற்று,பச்சைமால் தனது குலத் தொழிலான மாடு மேய்த்தலைச் செய்துவந்தார்.பசுவின் பாலைக் கறந்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்கள்;


இந்நிலையில் சிவபெருமானின் சாபப்படி,சிவபெருமானே துறவி வேடம் பூண்டு, சடை மங்கையிடம் தினமும் பால் வாங்கி அருந்திக்கொண்டிருந்தார்.இதனால்,பாலின் அளவு குறைந்தது;இதை ஒரு நாள் கண்டறிந்த பச்சை மால்,அவளை கடுமையாகத் தண்டித்தார்.

தண்டனை தாங்க முடியாமல்,அந்த துறவியிடம் போய் சடைமங்கை அழ,துறவியோ தனது சுய உருவாகிய சிவ வடிவம் பெற்று,சடையம்மாள் என்ற பெயரிட்டு,நவ சக்திகளில் ஒருத்தியாக அருள்பாலித்தார்.கலிகாலத்தில் சடையம்மாளை வழிபடுபவர்களுக்கு எந்த விதமான மனக்கஷ்டங்களும் நீங்கும் என்றும் வரம் வழங்கினார்.

வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் சென்று,மாவூத்து என்ற இடத்துக்குச் சென்றால்,சடையம்மாள் கோவிலைச் சென்றடையலாம்.இந்த சடையம்மாளின் புராணத்தை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.


 நன்றி: சதுரகிரித் தல புராணம்,பக்கம் 30,31.
பதிப்பாசிரியர்:ஆர்.சி.மோகன், வெளியீடு:தாமரை நூலகம்,(இது ஒரு பதிப்பகம்) 7,என்.ஜி.ஓ.காலனி,3வது தெரு,வடபழனி,சென்னை-26.விலை ரூ.120/-பக்கங்கள்:260


முக்கிய குறிப்பு:இன்றும் வத்திராயிருப்பு,சுந்தரபாண்டியம்,எஸ்.இராமச்சந்திரபுரம் பகுதிகளில் சடையம்மாள் என்ற பெயரை தங்களின் மகள்களுக்கு சூட்டுவதை பெருமையாக இப்பகுதி மக்கள் எண்ணுகின்றனர்.இப்பெயரைச் சூட்டிய பெண் குழந்தைகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகின்றன.சுமார் 3000 குடும்பங்களுக்கு  சடையம்மாள் குல தெய்வமாக அருள்பாலித்துவருகிறாள்.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்






Thursday, February 24, 2011

சதுரகிரி மாத இதழை இலவசமாகப் பெற




விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,வத்திறாயிருப்பு அருகில் அமைந்திருப்பது சதுரகிரி.வத்திறாயிருப்பு அருகில் அமைந்திருக்கும் மகாராஜாபுரம் கிராமத்தில் கொழுக்கட்டை சாமிகளின் 18 சித்தர்கள் தர்ம சேவாஸ்ரமம் இருக்கிறது.இவர்கள் தான் சதுரகிரி என்ற ஆன்மீக மாத இதழை இலவசமாக வெளியிட்டுவருகின்றனர்.

இந்த இதழைப் பெற விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு ரூ.4/-மதிப்புள்ள ஸ்டாம்ப் 12 ஐ அனுப்ப வேண்டும்.தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.

வெளிநாடுகளில் இருப்போர்,12 ஏரோகிராமில் சுயமுகவரியை ஆங்கிலத்தில் எழுதி,ஒரு கவரில் வைத்து அனுப்பவேண்டும்.சதுரகிரி மலையில் நடக்கும் ஆன்மீக அதிசயங்கள் இந்த இதழில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

கொழுக்கட்டை சாமிகளின் 18 சித்தர்கள் தர்ம சேவாஸ்ரமம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம்,வத்ராயிருப்பு மெயின் ரோடு,மகாராஜாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.

Monday, November 16, 2009

சதுரகிரி மூலிகைகள்


சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!

Saturday, August 22, 2009

சதுரகிரியில் நடைபெற்ற ஆன்மீக அதிசயம்

சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்:
கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.

நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.

அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.
நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)
தனிச்சுற்றுக்கு மட்டும்
முகவரி:ந.ராதாகிருஷ்ணன்
6,பழைய நெசவாளர் காலனி,
7 வது தெரு,மதுரை ரோடு,
அருப்புக்கோட்டை.செல் எண்:9865926214.
மற்றும்

த.ச.தவசிமணி (இணை ஆசிரியர்)
திரைப்படபாடலாசிரியர்
25,கணபதி தெரு,மேற்கு மாம்பலம்,
சென்னை-33.