Monday, December 19, 2011

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள்



300 ஆண்டுகளாக நம்மை ஆளுகிறேன் என்ற முகமூடி போர்த்தி,உலகின் செல்வச் செழிப்பாக இருந்த பாரதத்தை,சுரண்டி ஏழை நாடாக்கிவிட்டு,சுதந்திரம் கொடுத்துவிட்டுச் சென்றது கத்தோலிக்க பிரிட்டன்.அப்படி சுதந்திரம் பெற்றபின்னரும்,அதன் மிச்ச சொச்சங்களாக நம்மை காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக்கியது;ஆங்கிலமே உலகின் சிறந்த மொழி என்ற என்ற நம்பிக்கையை விதைத்தது;நமது வேர்களான இந்து தர்மத்திலிருந்து இந்துக்களாகிய நம்மை பிரித்து,நமது முன்னோர்களை நம்மை விட்டே அவமானப்படுத்தவைத்தது; பேண்ட் அணிவதை நாகரீகம் என நம்ப வைத்தது; ஆங்கிலக் கல்வி பயின்ற ஆக்ஸ்போர்டு மாணவரான நேருவை பிரதமராக்க வைத்தது;அதன் மூலமாக நிரந்தரமாக இந்தியாவை மேல்நாடுகளின் கொள்ளையடிக்கும் ஸ்தலமாக்கியது என நீநீநீநீண்ட பட்டியலே போடலாம்.
இறுதியாக பசுமை புரட்சி என்ற பெயரில் மிகவும் தீங்கு தரும்;மிக அதிகமான பக்கவிளைவுகளைத் தரும் ரசாயன உரங்களை இந்திய விவசாய நிலங்களில் தூவ வைத்ததன் மூலமாக,உணவு உற்பத்தியில் மறைமுகமாக மேற்கு நாடுகளையே நாம் சார்ந்திருக்கும் சூழ்நிலையை உண்டாக்கியது.இதன் விளைவாகத் தான்,நோய்களே இல்லாத நமது இந்தியா உலகின் இரண்டாவது சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு என்ற பெருமையை(?) பெற்றிருக்கிறது.
கஞ்சித்தொட்டி காலமான 1960களில் நமக்கு அமெரிக்கா கோதுமையை இலவசமாக தந்ததன் விளைவாக,நமக்கு சத்துகளே இல்லாத புரோட்டா அறிமுகமானது.தவிர ,நமது நீர்வளத்தை கெடுக்க அமெரிக்கா செய்த ஏராளமான முயற்சிகள் வெற்றியடைந்தன.இவைகளைப் பற்றி விவரிக்க இன்னொரு வலைப்பூவே உருவாக்கலாம்.
ஆனால்,ஒவ்வொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு என்ற இயற்பியல் விதி இப்போது செயல்படத்துவங்கியிருக்கிறது.இதற்கு இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் போன்ற பெரியவர்களின் தியாகபூர்வமான உழைப்பு தற்போது பலனளிக்கத்துவங்கியிருக்கிறது.
இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,காய்கறிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.இவையெல்லாம் நமது தாத்தா காலம் வரை எங்கும் கிடைத்தவை;இந்த இயற்கை விவசாயமுறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நம்மிடம் இருக்கும் சர்க்கரை நோய்,மூட்டுவலி,ஆஸ்துமா,மாத விலக்குக் கோளாறுகள்,உப்புச்சத்து போன்றவை காணாமல் போகும்.உங்களுடன் பழகுபவர்களிடம் இதற்கான ஆதாரங்கள் நிச்சயம் இருக்கும்.விசாரித்துப்பாருங்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூட இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கென்றே கடை ஒன்று இருக்கிறது.உங்கள் ஊரில் இதுபோன்ற கடைகள் இருப்பின் தெரிவிக்கவும்.அதன் முகவரி,புகைப்படம் அனுப்பினால்,ஆன்மீகக்கடலில் வெளியிடத்தயார்.
சென்னையில் இதற்கான கடை ஒன்று இருக்கிறது.அதன் இணையதள முகவரி: ஆரோக்கியச்சந்தை
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. 0679நன்றி! ஆரோக்கியச் சந்தை பற்றிய தகவல் தந்தமைக்கு!
    நா.செல்வராசன்,சென்னை - 9789999333

    ReplyDelete
  2. Really interesting and very useful, Thank your for your effort. Keep up the good work
    Theagu

    ReplyDelete