Wednesday, December 21, 2011

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்: செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்மீகக்கடலின் ஆரம்ப கால பதிவு



சுமார் பத்தாண்டுக்கு முன்பு,அமெரிக்கா அனுப்பிய சில உளவு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வரும்போது,அவை பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் வரை ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன.(இயற்பியல் விதிப்படி, வட்டமாகவோ,நீள் வட்டமாகவோ சுற்றும் ஒரு பொருள் திடீரென ஒருபோதும் நிற்காது.அப்படி நின்றால்,அது வெடித்துவிடும்). 3 விநாடிகளுக்குப் பிறகு ,அவை வழக்கம் போல பூமியை சுற்றி வருகின்றன.
இந்த சம்பவத்தினை அறிந்த  (உலகின் பல நாடுகளைப் பகைத்துக் கொண்ட) அமெரிக்காவுக்கு பயம் வந்துவிட்டது;யாராவது நம்மை விட லேட்டஸ்ட் டெக்னாலஜி கண்டுபிடித்துவிட்டார்களோ?  என்ற எண்ணத்தில்,இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.தனி செயற்கைக் கோளையே ஏவி,ஆராய்ச்சி செய்தது.
அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள்,பூமியின் எந்த இடத்தைக் கடக்கும்போது இவ்வாறு 3 விநாடிகள் ஸ்தம்பிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தது;அந்த இடம் பூமியில் அறிவாற்றல் மிகுந்த சமுதாயம் வாழும் இந்தியாவில்,உலகின் மூத்த இனமான தமிழினம் வாழும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான (அட பாண்டிச்சேரியின் தாய் மொழி தமிழ்தானே!)திருநள்ளாறு என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டதோடு,மேலும் சந்தேகப்பட்டது.ஒருவேளை இந்தியா ஏதேனும் ரகசிய ஆராய்ச்சியின் மூலமாக விண்வெளியில் தன்னை மிஞ்சிவிடுமோ? என்றெல்லாம் பயந்து,மேலும் ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் விளைவாக,சனிக்கிரகத்திலிருந்து விநாடி தோறும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியில் இருக்கும் சனிபகவான் சிலையின் மீது கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போது,இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி  பல மடங்கு அதிகரிக்கிறது.சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்ட 45 நாட்களுக்கு இந்த அடர்த்தி அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டறிந்தது.இந்த ஆய்வின் முடிவில்,அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா விஞ்ஞானிகள்,பல கருவிகளைக் கொண்டு திருநள்ளாறுக்கு நேரடியாக வருகை தந்து இந்த ஆச்சரியமான அதிசயத்தை உறுதிபடுத்திக்கொண்டனர்.அக்காலத்தில் ஜீனியர் விகடனில் தொடர்ந்து நான்கு இதழ்களில் இது தொடர்பான கட்டுரைகள் வெளிவந்தன.
நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து,யாரோ தமிழ் வார இதழ்களுக்குச் சொல்ல,அவற்றில் இந்த பதிவு வெளிவந்திருக்கிறது.
இப்போது சொல்லுங்கள்: யார் அதிமேதாவிகள் இந்துக்களாகிய நமது முன்னோர்களா? இல்லை வெறும் மிரட்டலை ஆயுதமாகக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா முதலான வல்லரசுகளா?
ஓம்சிவசிவஓம்

7 comments:

  1. viduthalai to be sent a copy of this

    ReplyDelete
  2. Thirunallar Saturn effect on Satellites and NASA considered its a miracle as they could not find a reason. Just checked internet about this, i couldn't get any resource or proof for this. i was humiliated in front of some other religions friends and even our religion people don believe this. Kindly post a solid proof or reference about "The News about Saturn's UV rays that falls on Thirunallaaru Temple which freezes the Satellites pass through the path". Seriously i do not want to mark a statement that this information is wrong, but i do not want anybody think that we Hindu's are stupid to believe such a News without any proof anywhere. As with no reference or no proof, this will absolutely be considered as a spam, a false message that just travels around web to confuse people. As far i know NASA scientists dont believe in miracles, and the satelites orbiting the globe will be slowed down at many certain places due to gravity or any such factors and i am not sure whether UV rays transmitted from Saturn as it is a planet and not a star. It can only absorb from Sun's light, but even if it is Sun's UV will be much more higher than Saturn's if it emits any such rays of its own. May be this comment would make u think i am not a Hindu, but i know that everyone on the Earth is a Hindu and have the right to Question. Kindly enlight me in this as i do not want our Hindu Belief getting humiliated because of a so called miracle or just a bogus internet news. Sorry if i am wrong in case u too were innocent by just posting a message which is quite good when looking from inside a circle called Hinduism. Dont be ignorant by avoiding the Truth, i like all the Stories of Swami Vivekananda, especially the story "Kinatru Thavalai(Frog in Well)". I dont want any of us to be such frogs drawing circles around us and defending such news in the web. Judge anything after analysing, because none of us can define GOD as GOD is the one who cant be proved or but GOD gave us knowledge, Think

    ReplyDelete
  3. எல்லா நேரமும் சனிக் கோளிலிருந்து கதிர்கள் இந்த கோயிலிற்கு வருகிறதா அல்லது எதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வருகிறதா? சனிக் கோளின் கதிர்கள் இந்த கோயிலில் மட்டும் படுகிறதா அல்லது மொத்த திருநாகேஸ்வரத்திலும் படுகிறதா?

    ReplyDelete
  4. ஐயா சுரேஷ் பழனிச்சாமீ, திரு நாகேஸ்வரம் எங்கே இருக்குது? ஏன் இப்படி? திரு நள்ளாறு அருள்மிகு தர்ப்பணேஸ்வரர் திருக்கோவில் முழுவதும் சனிக்கிரகத்தின் கதிர்கள் விழுந்துகொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  5. ஐயாம் நாட் ஈவில்,இந்துக்களால் எதுவும் செய்ய முடியாது என்று மேல்நாடுகள் ஒரு கற்பனையை பல நூற்றாண்டுகளாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றன.நிஜத்தில்,இந்தியா இல்லாவிட்டால்,மேல்நாடுகளே இல்லை; நீங்கள் தர்க்கத்தில் ஜெயிக்கலாம்.ஆனால்,உண்மைகள் நிர்வாணமானவை;அது யாருக்கும் பிடிக்காது.

    ReplyDelete
  6. மன்னிக்கவும், தவறுதலாக திருநள்ளாறு என்பதற்கு திருநாகேஸ்வரம் என்று சொல்லி விட்டேன். சனி ஓரையில் மட்டும்தான் கதிர்கள் விழுகின்றன என்று கேள்வி பட்டேன் உண்மையா ?

    ReplyDelete
  7. sorry dude, no offense personally. but how did u wrote an article about NASA being astonished by such an event and concluded it as miracle. If it is true then atleast somewhere in the web or some other sources would have mentioned about it. the day i wrote that comment i was searching the web for some evidence for the article to defend our Hinduism(i am not an atheist or anti-hindu, but i am an explorer who wants to know the truth). And my friend its true that Truth is always bitter to swallow, it cant be hidden always, but i just ask u only one question, how did u came to know about the "Thick Saturn UV rays fall directly on Sani Temple which makes the Satellites pass thru that area malfuntioned few seconds" and i am asking u just a source of this NEWS, a source as like u have posted in many of your post the reference from where u read the news. Because this news is not a big secret that is only known by u told directly from God or Mahans(sorry if u feel my language is bit rude and for using words like these as i am not that good in english writing and well dont know to type in tamil). Because i dont want anyone to make this as a mockery to our faith, even many times i use to say so many stories about hinduism without analysing the truth or accuracy in it just to show it is the true and great religion above all others. i just tried to defend it many times by hearing a forklore or fantasy story or event that never happened. So friend i just want u to think from everyones perspective and not from your own thought which will supress the real truth and obviously show u the belief u have in your mind as the truth. I dont want u to post this comment if u feel i am wrong or by any chance it would make a bad impression to Aanmigakkadal, which even i dont want it to be, because i am a big fan as a regular Aanmigakkadal reader which is one of a very good site to make us know more about our traditions, rituals and moreover what is our religion. So i dont want to spoil the image of this website, but just if u want to answer me u can answer without approving this comment. I wont mint it. But if u answer it and the source of the news is reliable i will be the one who will be very happy about it. Good day friend.

    ReplyDelete