பூமியில் ஒருவருடம் என்பது இந்து தர்மப்படி,வானுலகில் இருக்கும் உயர்ந்த ஆத்மாக்களின் உலகத்தில் ஒரு நாள் தான்.அந்த ஒரு நாளில் அதிகாலை நேரம் தான் நமது மார்கழி மாதம் ஆகும்.இந்த மாதத்தில் சூரியன்,தனுசு ராசியைக் கடக்கும்.முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்க்கையில் நமக்கு அதிரடியான,அதே சமயம் வலுவான முன்னேற்றத்தைத் தரும் மாதம் இந்த தனுர் மாதம் எனப்படும் மார்கழியே!
சென்ற மார்கழி மாதத்தில் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்தேன்.ஆமாம்! தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து,அதன் பலன்களை எப்படி நம்மை வந்தடைகின்றன என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தேன். www.omshivashivaom.blogspot.com உருவாகவில்லை;இந்த மார்கழியில்(2011) இந்த வலைப்பதிவினை ஏராளமானவர்கள் வாசித்து,பின்பற்றிவருகின்றனர்.எல்லாம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் மற்றும் அவர்களின் ஆசியே இதற்குக் காரணம்!
நாளை 17.12.2011 சனிக்கிழமையன்று கர வருடத்தின் மார்கழி பிறக்கிறது.நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தினமும் காலை 4.30 முதல் 6.00 மணிக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தான்.
புதியவர்கள் இந்த மாதம் ஒரு நாளுக்கு 10 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால் போதுமானது;
21 வயதை விட குறைவானவர்கள்,இதே பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் 108 தடவை மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.
பல நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்து,இடையில் அடிக்கடி ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்
இந்த மாதம் முழுவதும் எப்பாடு பட்டாவது காலையில் ஜபிப்பது அவசியம்.
நிம்மதி;மன மகிழ்ச்சி;செல்வ வளம்; தொழில் வளர்ச்சி;குடும்பத்தில் குழப்பம் நீங்கிட; நீண்ட கால லட்சியம் நிறைவேற என எந்த ஒரு லட்சியமாக இருந்தாலும்,இந்த மார்கழி மாதத்தில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக விரைவாகவே அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதை உணரலாம்.
அப்படி உணர்ந்தால்,நமது ஆன்மீகக்கடலுக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம் - மார்கழி மாதம் முழுவதும் காலையில் எழுந்து ஜெபிக்க தூண்டிய பகிர்வுக்கு தலை வணங்குகிறேன்... மிக்க நன்றி சகோ
ReplyDelete