மதுரையை அடுத்த மேலூர் தெற்குத் தெருவில் மந்தைவீரன் கோயில் இருக்கிறது.இது அந்த ஊரின் கிராம தேவதை கோயில் ஆகும்.நான்கு வழிச்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அரசு அதிகாரிகள் கோயில் இருக்கும் நிலப்பகுதியை கையகப்படுத்த வந்தார்கள்.தங்களின் கிராம தேவதையின் இருப்பிடத்துக்கு ஆபத்து என்று தெரிந்ததும்,ஊர் மக்கள் அதிகாரிகளிடம் சீறினார்கள்.பிறகு இருவரும் கலந்து பேசியதில்,மாற்று வழியில் சாலையை விரிவாக்க 100 வீடுகள் இடிக்கப்பட வேண்டிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உடனே,அதை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு, தங்களின் வீடுகளை தாங்களே இடித்தார்கள்.தங்களின் குலதெய்வத்தின் இருப்பிடத்திற்காக(கோயிலுக்காக) தங்களின் 100 வீடுகளை தியாகம் செய்திருக்கிறார்கள்.நன்றி:தினமலர் 9.2.2007. விஜயபாரதம்,பக்கம் 11,16.12.11
ஆன்மீகக்கடலின் கருத்து: ஏ மேற்கு நாடுகளே! உலகில் போரில்லாத சூழ்நிலை நிரந்தரமாக உருவாகிட டாலரை தியாகம் செய்யுங்கள்.(டாலரை தூக்கி வைத்துக் கொண்டாடதீர்கள்)
ஓம்சிவசிவஓம்
Dear boss
ReplyDeleteKindly update "amavasai" time & date to prepare myself for rituals
Regards
palanisamy
saudi