Friday, December 23, 2011

எங்கும் அழிவுகளை ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி



உலகத்தில் எந்த இரண்டு மனிதருக்கும் ஒரே மாதிரியான பதவி,புகழ்,அந்தஸ்து,கவுரவம்,சொத்துக்கள்,மனைவி,குணம் என்று எதுவுமே அமைவதில்லை;இருந்தபோதிலும்,இவன்/இவள் நல்லாயிருக்காளே! இவளை/னைப் போல நாம் நல்லா இல்லையே? என்ற எண்ணமே பொறாமை உணர்ச்சிக்கு ஆரம்ப ஆதாரம் ஆகும்.
ஜோதிடப்படி, ஒருவரின்  பிறந்த ஜாதகத்தில் கடக ராசியில் செவ்வாய் இருந்தால் அவரின் இயல்பு குணமாக பொறாமை உணர்ச்சி இருக்கத் தான் செய்யும்.30 வயதுக்கு மேல்,இந்த உணர்ச்சியை திறமையாக மறைக்கப் பழகிக்கொள்வார்.ஐ.டி.துறையில் இந்த பொறாமை சர்வ சாதாரணமாக உணரலாம். ஒருவரின் திறமைக்குரிய அங்கீகாரத்தைப்  பெற முடியாமல் தடுப்பதையே முழு நேரவேலையாக இந்த ‘பொறாமை’ செய்ய வைக்கும்.தன்னைத் தவிர எல்லோருமே மிகவும் வசதியாகவும்,சகல சவுபாக்கியத்தோடும்,அந்தஸ்தோடும் இருப்பதாக எப்போதும் கற்பனை செய்து கொண்டே இருப்பர்.பல இரவுகள் இவருக்கு தூக்கமே இராது.


இதைத் தவிர,நமது பெற்றோர்களின் சுபாவமாக இந்த பொறாமை இருந்து,நாம் சிந்திக்கும் திறனில்லாமலிருந்தாலும்,நமக்கும் இதே பொறாமை வந்துவிடும்.இப்படி வரும்போது,நமது ஜாதகத்தில் உள்ள ராசிக்கட்டத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்க வேண்டிய அவசியமில்லை;


எனது அனுபவப்படி,தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில் குடும்ப சுபாவமாக இந்த பொறாமை இருக்கத்தான் செய்கிறது.அதே சமயம்,தகுதி இருக்கிறதோ,இல்லையோ தகுதிக்கு மீறிய புகழுக்கும்,பெருமைக்கும் ஆசைப்படுவதும்,அதற்காக என்ன தில்லாலங்கடி வேலை செய்வதை கிராமத்தினர் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.(இதிலும் விதிவிலக்கு உண்டு.கோபப்படாதீர்கள் கிராமத்து வாசகர்களே!)


இதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்று முருகக்கடவுளுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,பானக தானம்(மோர் அல்லது குடிநீர் பாட்டில்) ஒவ்வொரு ஆண்டும் செய்து வர வேண்டும்.இவ்வாறு 12 ஆண்டுகள் செய்து வர இந்த பொறாமை உணர்ச்சி நம்மை விட்டு அகன்றுவிடும்.
ஜோதிட மருத்துவப்படி,ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்கப்பிறந்திருந்தால்,அவரது ரத்தத்தில் சிகப்பணுக்களின் உயிர்த்தன்மை சராசரியை விடவும்,குறைவாகவே இருக்கும்.30 வயதுகளைத் தாண்டும்போது,இவர்களுக்கு ரத்தத்தில் நோய் உருவாகும்.இதற்கும் இதே பரிகாரம்தான்.

இதைத் தவிர, 18 செவ்வாய்க்கிழமைகளுக்கு திரு அண்ணாமலைக்குச் சென்று காலை 6  மணிக்குள் விரதமிருந்து(எதுவும் சாப்பிடாமல்! அவ்வப்போது தண்ணீர் /பால் அருந்தலாம்) கிரிவலம் புறப்பட வேண்டும்.அஷ்ட லிங்கங்களின் வாசலிலும் அன்னதானம் ஒன்பது பேர்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும்; மாலை 5 மணிக்குள் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.அப்படி முடித்ததும்,கிழக்குக் கோபுர வாசலிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு,அண்ணாமலையார் கோவிலுக்குள் இருக்கும் முருகக்கடவுள் சன்னதியில் தனது பெயருக்கு மட்டும் அர்ச்சனை செய்துவிட்டு,அங்கேயே தான் கொண்டு வந்த உணவை சாப்பிட வேண்டும்.முடியாதவர்கள்,முருகக்கடவுள் சன்னதியில் பிரசாதத்தை வாங்கிவிட்டு அறைக்குச் சென்று சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.இந்த 18 செவ்வாய்க்கிழமைகளில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமையன்று மட்டுமே இவ்வாறு பிரசாதம் கிடைக்கும் எதார்த்தமான/தற்செயலான பாக்கியம் கிடைக்கும்.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்,இனி உலக அரசியலும்,பொருளாதாரமும் ஐரோப்பாவையும்,அமெரிக்காவையும் சுற்றிச் சுழலாது;இந்தியாவையும்,நம்ம பங்காளி சீனாவையுமே சுற்றிச் சுழலப்போகிறது.அப்படி நடக்கும் முன்பாகவே, சீனாவானது இந்தியாவை ஒழித்துக்கட்ட துடிக்கிறது.தான் மட்டுமே உலகின் ஒரே வல்லரசாக பரிணமிக்க வேண்டும் என்று தவிக்கிறது.

யார் வம்பு தும்புக்கும் போகாத அப்பிராணி இந்தியாவை வம்புக்கு இழுக்கிறது.இதற்கு காரணம் என்ன? சீனாவின் பொறாமையே!எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா,இவன் ரொம்ப நல்லவன் என்ற வசனம் உலக அரசியலில் சிறிதும் எடுபடாது என்பதை எப்போதுதான் நமது வெளியுறவுத்துறைக்கும்,பாதுகாப்பு கொள்கை வடிவமைப்புஅதிகாரிகளுக்கும் புரியப்போகிறதோ?
யார் மனதில் பலவீனமான எண்ணங்கள் தோன்றுமோ,அவரே பொறாமைப்படுவார் என்கிறது உளவியல்.

பொறாமைப்படுபவர்களிடம் நமது பெருமைகளை,சாதனைகளை ஒருபோதும் சொல்லக்கூடாது;சொன்னால்,கூட இருந்தே நமது வளர்ச்சியை மேலும் வளரவிடாமல் தடுத்துவிடுவர்;நமது கஷ்டங்களையும் சொல்லக்கூடாது;சொன்னால்,அதை நம்பமாட்டார்கள்;அல்லது நமது எளிமையை/சாதனையை மேலும் இழிவுபடுத்தப் பார்ப்பார்கள்.

சில சமயம் இம்மாதிரியான பொறாமைபிடித்தவர்களிடம் லூசு,அரைக்கிறுக்கு என்ற பெயரை நாம் பெற்றால் மட்டுமே நமது வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.இவர்களை திருத்த முயன்று நாமும் பொறாமை பிடித்தவர்களாகிவிடுவோம்.எச்சரிக்கை!


பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள்/நண்பிகள்; அடிக்கடி பழகும் உறவினர்களே நம்மிடம் பொறாமைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


எப்போது நீங்கள் எவராலும் எட்டமுடியாத அளவுக்கு செல்வ வளம்,செல்வாக்கு,அந்தஸ்து போன்றவைகளை பெறுகிறீர்களோ,அப்போது உங்களின் அனைத்து சாதனைகளையும் எல்லோரிடமும்,எப்போதும் பகிர்ந்து கொள்ளலாம்.ஏனெனில்,அப்போது உங்களை எவராலும் நெருங்க முடியாது.

மேலும் விபரமறிய: நீங்களும் முதல்வராகலாம் என்னும் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்;வெளியீடு:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.விலை ரூ.225/= (இந்த புத்தகம் வெளிவரும்போது ரூ.90/-மட்டுமே! பிறகு ரூ.190/-ஆனது.தற்போது இதன் விலை ரூ.225/-எல்லாவிதமான தந்திரங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.உங்கள் துறையில் நீங்கள் முதலிடம் பிடிக்க விரும்பினால்,இந்த புத்தகத்தை நூறு தடவை வாசிக்கவும்.இதைப் பின்பற்றுபவர்கள்,பிறரின் நரித்தனங்களிலிருந்தும்,பொறாமையிலிருந்தும் தப்பித்துவிடமுடியும்.இன்றைய வேகமான வாழ்க்கைக்கு இதுவே நமக்கு ஒரு வாழ்க்கை கீதை!!!)

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  2. கிராமத்து மக்கள் பற்றிய உங்கள் கருத்து நூறு சதம் உண்மை. பெருநகரங்களில் யாரைப்பற்றியும் யாரும் கவலை கொள்வதில்லை. கிராமத்திலோ எந்நேரமும் அடுத்தவர் வளர்ச்சி பற்றியே பொருமி பொறாமை கொள்கின்றனர்.அதனால் தான் பெரும்பாலான கிராமங்கள் உருப்படமலேயே இருக்கிறது.

    ReplyDelete