முனி-2 என்ற திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகின்றன.அதில், ஒரு பிராமணக்குடும்பத்தினரின் வீட்டில் பேய் இருப்பதாகவும்,அதை விரட்டிட அந்த குடும்பப் பெண்கள் ஒரு அம்மன் கோவிலுக்குச் செல்வதாகவும்,அந்தக் கோயில் பூசாரி ஒரு எலுமிச்சை பழம் தருவதாகவும் காட்சி வருகிறது.இதுவரையிலும் இந்து தர்ம நடைமுறைகளின் படி திரைப்படம் எடுத்துள்ளனர்.
அதன் பிறகு,அந்த பிராமண இல்லத்தரசி,தனது படுக்கையறையில் தலையணைக்கு அடியில் அந்த எலுமிச்சை பழத்தை வைத்து தூங்குவதாகவும், பேய் வந்து(?) அந்த பிராமண இல்லத்தரசியை அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வீசச்சொல்லி மிரட்டுவதாக கிறிஸ்தவ இயக்குநர் ராகவா(?)லாரன்ஸ் கதையமைத்திருக்கிறார்.இது முற்றிலும் வடிகட்டின பொய் ; அது மட்டுமல்ல இந்து தெய்வமாகிய அம்மனின் சக்தியை விடவும்,பேயின் சக்தி உயர்ந்தது என்பதைப் போலவும் காட்சியமைத்திருக்கிறார்.
ஆனால்,பாமர மக்கள் இந்த காட்சியைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
நாம் வழிபடும் அம்மனின் கோவிலில் அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்துக்கு சக்தியிராது என்ற எண்ணமே தோன்றும்.
ஏசு நாதர் ‘ஒரு கன்னத்தில் அறைந்தால்,மறு கன்னத்தை காட்டு’ என்று உபதேசித்திருக்கிறார்.கிறிஸ்தவரான ராகவா லாரன்ஸீக்கோ சிவபெருமானின் மெய்காவல் தெய்வமான முனி என்ற பெயரில் திரைப்படப் பெயர் வைக்க என்ன உரிமை இருக்கிறது?(ஏற்கனவே முனி என்ற பெயரில் வெளியிட்ட படம் லாபத்தை தந்திருக்கிறது)தனது பெயரில் ராகவா என்ற இந்துப் பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால், தனது திரைப்படத்தில் இந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்த வேண்டும்.லாபம் மட்டும் இந்துக்களிடமிருந்து வேண்டும்.இது ஏசுவுக்கே அடுக்குமா?ராகவா லாரன்ஸ் ஒரு பக்கா கிறிஸ்தவருமில்லை;சக மதத்தை மதிக்கத் தெரிந்த மனிதனுமில்லை;
1980 முதல் 1990 களில் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் ஒரு திரைப்படம் எடுத்தார்.அந்தத் திரைப்படத்தின் கதைக்கரு ஒரே ஒரு வரிதான்: ஒரு கன்னியாஸ்திரி காதல் வசப்பட்டால் என்ன ஆகும்? இந்தப் படம் கிறிஸ்தவர்களின் கடும் எதிர்ப்பால் வெளிவராமல் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.ஆனால்,பெரும்பான்மை சமுதாயமான இந்துக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும் காட்சியைப்பார்த்து நாமே சிரிக்கிறோம்! இந்து என்ற உணர்வுடன் நாம் ஒன்றிணையும் வரை இதைப் போன்ற அவமானங்கள் தொடரத்தான் செய்யும். . . .
ஓம்சிவசிவஓம்
ragava laranse ragavendra swamykku kovil katti irukare athain yean solla villai????
ReplyDeleteRaghava Lawrence should discontinue his condemnable nature.
ReplyDeleteராகவேந்திரர் கோவிலை கட்டிய ராகவாலாரன்ஸ்,கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தலாமா?அவமதிப்பது போல திரைக்காட்சிகள் வைக்கலாமா? நமது ப்ரந்த மனப்பான்மையை வைத்தே நம்மை முட்டாளாக்குவதோடு,நமது சனாதன தர்மத்தை அவமதிக்கலாமா? சிந்தியுங்கள்.
ReplyDeleteAt the first you respect other religious and them faith, since so
ReplyDeletelong you do the baseless attack on
islam and other faith without any proofs try to correct your self or
before post like that subject verfiy about. YAPPORUL YAAR YARR VAAI KADPINUM APP PORUL MAIPORUL
KANPATHU ARRIVU. hope you will understand. peace be on you.
சினிமாக்காரன் பண்ணுவதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.
ReplyDeleteகடவுளே இல்லை என்று சொல்லும் கூட்டம் நாட்டையே (கடவுளை வெவ்வேறு வழியில் வணங்குகிற, நம்புகின்ற மக்களை) ஆழ்கிறது சுரண்டுகிறது அதை யாரும் குற்றமோ குறையோ சொல்லவில்லை கவலைப்படவும் இல்லை .
ReplyDeleteஏதோ ஒரு படத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை அவதூறு செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளீர்கள்.. இதற்கு சிரிக்காமல் என்ன செய்வது ,
அதை அவர் வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பே இல்லை...
அவர் ஒரு தீவிர ராகவேந்திரா பக்தர் என்று பல முறை உணர்திஉள்ளார்.
மதத்தை பிரிவினை உண்டு பண்ண ஏன் பயன்படுதுறீங்க. உங்களிடம் நல்ல பதிவுகளை தவறாது படித்து வந்த எனக்கு இந்த பதிவு வருத்தத்தை தருகிறது.
நான் கிருதுவனாக இருப்பேனோ என்று குழப்பம் கொள்ளாதீர்கள். நான் உலகிற்கு எல்லா வகையிலும் பயன்தரும் கருத்துகளை எடுத்துரைத்த தூய்மையான இந்து மதத்தை சார்ந்தவன் தான்.
நான் விரும்பும், என்னை மனிதனாக்கிய புனிதமான மதம் ஏன் பலராலும் வெருக்கபடுகிறது என்பதற்கு இக்கட்டுரை ஒரு நல்ல உதாரணம்.
மனதளவில் பலவீனமான மனிதன் தான் பயத்தின் காரணமாக வெட்டி கூச்சல் போடுவான். ரமணர்,பரமஹம்சர் யாரும் தெருவில் இறங்கி சண்டை போடவில்லை யாரிடமும் குரோதம் கொள்ளவில்லை அவர்களை தான் இறைவன் தன் செல்ல பிள்ளைகளாக ஏற்று கொண்டார். உண்மையான இந்து இதை நன்கு உணர்வான், எனவே அவன் கூச்சல் போட தேவையில்லை. எத்தனை படையெடுப்பு வந்த பின்னும் இந்து மதம் அழியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
நடப்பது எல்லாம் இறைவன் செயல் அவரின் எல்லா செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.குறை கூறுவதை விட்டுவிட்டு நல்ல ஆன்மீக தேடலை தொடருங்கள். நன்றி...
முனி-2 படம் நானும் பார்த்தேன் உங்களுக்கு தோன்றிய அதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது. ஆனால் ராகவா அதை தெரிந்து செய்து இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யோசித்து இருக்க வாய்ப்பும் இல்லை. காமெடி என்று நினைத்து இந்த தவறை செய்து இருக்கலாம். அதற்காக அவரை "தெய்வ நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் ராகவா(?!) லாரன்ஸ்" என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை ஏனென்றால் ரஜினிக்கு பிறகு ராகவேந்திர ஸ்வாமியின் புகழை பரப்பும் பணியை செய்து கொண்டு இருக்கிறார். நிறைய பொது நிகழ்ச்சிகளில் அவர் வாயால் தான் உயிரோடு இருக்க காரணமே குரு ராகவேந்திரர் என்று சொல்லி இருக்கிறார். தவறுகளை மன்னிப்போம். தாங்களும் மன்னியுங்கள்
ReplyDeleteபெரும்பாலான மக்களிடம் அதிகமான மனோதத்துவ தாக்கத்தை உருவாக்குவது திரைப்படங்கள்.இந்து தர்மத்தின் அடிப்படைதத்துவமான அகிம்சையை கி.பி.1700 முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவறாகவே பயன்படுத்திவருகின்றனர்.அவர்களின் சேட்டைகளால் தான் இன்றும் நமது கிராமப்புறங்களில் கிருத்திரியம் பண்ணாதே என்ற சொல்வழக்கு உள்ளது.நமது இந்து தர்மத்துக்கு எப்பேர்ப்பட்ட பேராபத்து வந்திருக்கிறது என்பதை கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களே மறைமுகமாக உணர்த்துகின்றன.நமது பெருந்தன்மையால் நம்மை யாரும் இளிச்சாவாயன் என்று நினைத்து விடக்கூடாது.
ReplyDeleteஜயா வணக்கம் உங்களுடைய ஆதங்கம் தெய்வ நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் சினிமா சரியானதே இதற்கு முதல் விஜய் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியதாக வெளியிட்ட கருத்துக்களையும் படித்தேன்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வறையில் சினிமா என்பது குன்பைத் தொட்டி பிறகு எப்படி இருக்கும் கெட்ட வாடைதான் வரும் சந்தன வாடை எதிர்பார்ப்பது தவறு. அநேகமான சினிமா படங்களில் இது நடக்கின்றது.
கோயில் குருக்களை அவமதிப்பதுபோல் வசனம் கேள்வி கேட்டால்
நாட்டில் நடப்பதைதான் சொல்கின்றோம் அப்படி என்றால் நடிகர் நடிகை களின் கேவலமான தொடர்புகளையும் சினிமாவில் கதையாக சொல்லலாமே?
திருச்சியை சேர்ந்த எனது நன்பர் ஒருவர் அமெரிக்காவில் பொறியியல் துறையில் கல்வி கற்று வருகின்றார் அவர் என்னிடம் ஒரு விடையம் பற்றி கூறினார். நாடுகள் பொருளாதாரம் உலகம் பற்றி சக வெள்ளை இன நன்பர்களுடன் பேசிக்கெண்டு இருக்கும் பொழுது இந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும் என்ற கேள்வி எழுந்ததாம் அதற்கு ஒரு வெள்ளை இன நன்பர் சொன்னாறாம் அது கனவில் கூட நடக்கதென்று காரணம் அதற்கு அந்த வெள்ளை இன நன்பர் கூறுய பதில்:-
ஒரு நாடு வளமானதாக மாற வேண்டுமெனில் நாட்டின் இளஞ்ஞர்களின் கையிலே உள்ளது ஆனால் இந்திய இளஞ்ஞர்களில் அனேகமானோர் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைபதுப்ம் நடிகர்களின் பின்னால் திரிவதிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். நடிகர்கள் அவர்களுடை பிள்ளைகள் என வம்சாவளியாக சினிமாவில் நடித்து வங்கிக்கணக்கை உயர்த்திக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்களை வைத்திருப்பவர்களின் கெதி தகப்பன் செய்ததை பிள்ளையும் செய்யும் பிள்ளையும் ரசிகர் மன்றங்களை உருவாக்கும்.
ஒரு வகையில் இதுவும் நன்மைக்குத்தான் இந்தியா அதிகமான இளஞர் சக்தி கொண்ட நாடு அவர்கள் இப்படி ரசிகர் மன்றங்களை வைத்திருப்பது அமெரிக்காவுக்கு நல்லது இந்திய இளஞ்ஞர்கள் தங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்தத் துவங்கினால் சீனாவுக்கு நிகராக வளர்ச்சி அடைய துவங்கி விடுவார்கள் சீனாவினால் வளர்ச்சியால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியையே தாங்கமுடியவில்லை. இதில் இந்தியாவுமா? எனவே இந்தியா இப்படி இருப்பதே நல்லது என அந்த வெள்ளை இன நன்பர் கூறினாறாம்.
சினிமா என்பது அதில் ஈடுபடுபவர்களுக்கு தொழில் பார்ப்பவர்பளுக்கு பொழுதுபோக்கு வாழ்க்கையில் பொழுதுபோக்கு வேண்டும் ஆனால் பொழுதுபோக்கே வாழ்கையாக வைத்திருப்பது கேவளம்.
எப்பொழுது இவர்கள் திருந்துவார்களோ இப்படியே இருக்கும் பட்சத்தில் இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் வல்லரசான ஆன பிறகும் இந்தியா இதே நிலைமையிலே இருக்கும் 2020ல் 2030ல் 2050ல் 2075ல்
சொல்லிக்க்கொண்டே போகவேண்டியதான்!
பாலசிங்கம்
avar oru sirandha ragavendra bagthar andha ragavendrarey avarukku idhai unartha vendum ini varum kaalangalil avar edukkum padangalil indha thavarugal nadakkamal avar paarthukkollavendum...
ReplyDelete